கல்விக் கடன் வாங்கணுமா.. எந்த வங்கி பெஸ்ட்.. எந்த வங்கியில் குறைவான வட்டி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் பல மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்க பயன்படுவதே கல்விக் கடன் தான்.

கடந்த சில வருடங்களில் கல்விக்கடனுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் கூறுகின்றன.

இதற்கிடையில் கல்விக்கடன் நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் கல்விக் கடன் பெற நாம் எந்த வங்கியை அணுக வேண்டும், அந்த வங்கி கடன் தருமா என்றெல்லாம் பார்க்க வேண்டும். ஆனால், இப்போது அந்தச் சிக்கலெல்லாம் கிடையாது. ஒரே இடத்தில் எந்த வங்கியில் என்ன விகிதம்? என்ன விவரங்கள் என அனைத்தையும் பார்க்க முடியும். அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
 

இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கல்விக் கடனுக்காக வித்யா லக்ஷ்மி என்ற பிரத்யேக வெப்சைட்டில் https://www.vidyalakshmi.co.in/Students/index உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பார்த்துக் கொள்ளலாம். இந்த வெப்சைட்டில் அனைத்து வங்கிகளும் இணைக்கப்பட்டிருக்கும். கல்விக் கடன் வேண்டும் என்ற மாணவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்தால் போதும். அவர்களுடைய ஊர், அவர்கள் விரும்பும் படிப்புக்கு எந்தெந்த வங்கிகளில், என்னென்ன சலுகைகள் உள்ளன என்பதையெல்லாம் கணக்கில்கொண்டு அவர்களுக்கான வங்கியைப் பரிந்துரை செய்வார்கள்.

என்னென்ன தகவல்கள் கிடைக்கும்

என்னென்ன தகவல்கள் கிடைக்கும்

கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் திரும்பச் செலுத்துவதற்கான விதிமுறைகள் போன்ற அனைத்து தகவல்களும் அதில் கிடைக்கும். அதில் பதிவு செய்தவுடன் பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு அந்த வங்கிக்குச் சென்று மதிப்பெண் சான்றிதழ்கள், முகவரிக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது.

விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும்

விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும்

கல்விக் கடன் பெற விரும்புவோர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, தனக்கென்று நிரந்தரக் கணக்கை உருவாக்க வேண்டும். இதில் மொபைல் எண், இ-மெயில் முகவரி, மாணவர் பெயர், தந்தை பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டால் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, லாக்-இன் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். இதில், தங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்
 

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்

பின்பு எந்தத் துறையைச் சார்ந்த படிப்பு, எத்தனை வருடப் படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் தேவை உள்ளிட்ட தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு மெயில் வரும். அதன் பிறகு, கல்விக் கடன் விண்ணப்பித்ததுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

புகார் அளிக்கலாம்

புகார் அளிக்கலாம்

இதைத் தொடர்ந்து விண்ணப்பமானது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். பிறகு, வங்கி அதிகாரி கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார்கள். வங்கி அதிகாரியைச் சந்தித்த பின் கல்விக் கடன் எந்தக் கிளை வங்கியின் வாயிலாக வழங்கப்படும் என்பது முடிவாகும். மேலும், கல்விக் கடனை வங்கிகள் வழங்கவில்லை எனில், அது குறித்து அந்த இணையத்திலேயே புகார் அளிக்கலாம்.

வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு?

வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு?

இங்கு குறிப்பிடப்பட்ட வட்டி விகிதமானது மார்ச் 16 நிலவரப்படி, வங்கிகளின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

 • பேங்க் ஆப் பரோடா வட்டி விகிதம் - 6.75%
 • யூனியன் பேங்க் - 6.80%
 • சென்ட்ரல் பேங்க் - 6.85%
 • பேங்க் ஆப் இந்தியா - 6.85%
 • எஸ்பிஐ - 6.85%
 • பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.90%
 • ஐடிபிஐ வங்கி - 6.90%
 • கனரா வங்கி - 6.90%
 • பேங்க் ஆஃப் மஹராஷ்டிரா - 7.05%
 • இந்தியன் வங்கி - 7.15%
 • ஐஓபி - 7.25%
 • யூகோ வங்கி - 7.30%
 • சவுத் இந்தியன் வங்கி - 7.70%
 • பஞ்சாப் & சிந்த் வங்கி - 8.30%
 • ஜே&கே வங்கி - 8.70%
 • ஹெச்டிஎஃப்சி வங்கி - 9.55%
 • ஆக்ஸிஸ் வங்கி - 9.70%
 • ஃபெடரல் வங்கி - 10.05%
 • தனலட்சுமி வங்கி - 10.50%
 • ஐசிஐசிஐ வங்கி - 10.50%
 • கரூர் வைஸ்யா வங்கி - 10.75%
 • கர்நாடகா வங்கி - 12.19%
 • சிட்டி யூனியன் வங்கி - 15.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Education loan interest rates starts from 6.75%: check details

Education loan updates.. Education loan interest rates starts from 6.75%: check details
Story first published: Tuesday, March 23, 2021, 6:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X