இண்ட்ராடே வணிகம், ப்யூச்சர் & ஆப்சன் என்று அதிக ரிஸ்க் உள்ள ஏரியாக்களில் நுழைந்து, கைகளில் இருப்பதை சந்தைக்கு மொத்தமாக கொடுத்து விட்டு வருவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவோ பரவால்ல என்று கூறிய நண்பரிடம் பேசிய போது தான், இதனை பற்றி ஒரு கட்டுரை எழுதினால் என்ன என்று தோன்றியது.
உண்மையில் இதுபோன்ற அதிக ரிஸ்கினை எடுத்து, கையில் இருக்கும் காசையெல்லாம் கரைத்து விட்டு அம்போ என உட்காருவதற்கு பதிலாக, எந்த ரிஸ்கும் இல்லாமல் வங்கி பிக்ஸட் போட்டு விட்டு வரும் வட்டியை வாங்கிக் கொண்டு நிம்மதியா சாப்பிடலாமே.
ஆனால் இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வங்கிகளில் தற்போது வட்டி விகிதம் என்பது மிக குறைவாகவே உள்ளது. ஆக மக்கள் அதனை தவிர்த்து சரியான மியூச்சுவல் ஃபண்டுகளை சார்ந்திருப்பது புத்திசாலித்தனம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட்கள்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்படுகிறது, வங்கி வட்டியினை விட, அதிக லாபம் கொடுக்கும் வங்கி ஃபண்டுகள் பற்றித் தான் இதில் பார்க்க இருக்கிறோம். பொதுவாகவே நீண்டகால முதலீடு அப்படின்னாலே நம்மவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களைத் தான் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் லாபம் ஓரளவு உண்டு. பங்கு சந்தை அளவுக்கு ரிஸ்க் இல்லை. அப்படி இருக்கையில் வங்கி ஃபண்டுகள் என்பது இன்னும் சிறந்த விஷயம் தானே.
Banking and PSU funds
பொதுவாக இந்த Banking and PSU funds ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் ரிஸ்க் குறைவு. நடுத்தர கால முதலீட்டுக்கு ஏற்ற ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த ஃபண்ட்கள் முன்னணி வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.
ஓரளவு லாபம்
இதனால் இவை வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகள், கடன் பத்திரங்கள், சிறு சேமிப்பு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்களை காட்டிலும் வருமானம் அதிகம். ஆக நீங்கள் வருமானம் ஓரளவு கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால் ரிஸ்க் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இது ஒரளவு லாபத்தினை இந்த Banking and PSU fundகள் கொடுக்கும்.
kotak banking & psu debt fund direct growth
அந்த வகையில் சிறந்த 4 ஃபண்டுகளை பற்றித் தான் நாம் தற்போது பார்க்கவிருக்கின்றோம். முதலில் நாம் பார்க்கவிருப்பது கோடக் பேங்கிங் & PSU டெப்ட் ஃபண்ட் (kotak banking & psu debt fund direct growth). இந்த ஃபண்ட் 2013 அன்று கோடக் மகேந்திரா மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டத்தில் இருந்து பார்க்கும்போது ஆண்டுக்கு சராசரியாக 8.90% வருவாயினை கொடுக்கிறது.
இது பல முன்னணி வங்கிகளின் வட்டியினை விட அதிகம். இந்த ஃபண்டிற்கு மதிப்பீட்டு நிறுவனங்கள் 4 ஸ்டார்கள் கொடுத்துள்ளன.
IDFC banking & PSU Debt fund direct growth
அடுத்தது நாம் பார்க்கவிருப்பது IDFC banking & PSU Debt fund Direct growth. இந்த ஃபண்டிற்கு 5 ஸ்டார்கள் ரேட்டிங்ஸ் நிறுவனங்களால் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபண்டும் 2013ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 3 - 5 வருடங்களில் இந்த ஃபண்ட் நல்ல லாபத்தினையும் கொடுத்துள்ளது. ஒரு வருடத்தில் 5.07% லாபம் கொடுத்துள்ள நிலையில், இது தொடங்கிய நிலையில் இருந்து பார்க்கும்போது, ஆண்டிற்கு சராசரியாக 8.53% லாபத்தினை கொடுத்துள்ளது.
இந்த ஃபண்ட் போர்ட்போலியோவில் ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், GOI, ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ், நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட டாப் 5 முதலீடுகளில் உள்ளன.
Nippon india banking & PSU fund
Nippon india banking & PSU fund கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஃபண்ட் கடந்த 1 வருடத்தில் 5.26% லாபத்தினை கொடுத்துள்ளது. இதே அறிமுகப்பட்டதில் இருந்து சராசரியாக பார்க்கும்போது, ஆண்டுக்கு சராசரியாக 8.65% லாபத்தில் உள்ளது. இந்த ஃபண்டுக்கும் மதிப்பீட்டு நிறுவனங்கள் 5 ஸ்டார்களை கொடுத்துள்ளது.
Axis banking & PSU fund direct growth
Axis banking & PSU fund direct growth ஃபண்டானது கடந்த ஒரு ஆண்டில் 4.83% லாபம் கொடுத்துள்ளது. இதே இந்த ஃபண்ட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 8.59% வருமானம் கொடுத்துள்ளது. இது கடந்த 2013ல் தொடங்கப்பட்டது.
இந்த ஃபண்டிற்கும் 4 ஸ்டார்கள் மதிப்பீட்டு நிறுவனங்கள் கொடுத்துள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications