இனி எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.. 1000 ரூபாய்க்கு 52 ரூபா போதும்! #SBI

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனியார் வங்கிகளுக்கு இணையாக அனைத்து விதமான சேவைகளும் அளிக்கத் துவங்கியுள்ளது, குறிப்பாகக் கடன் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் எஸ்பிஐ மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.

இந்தச் சூழ்நிலையில் தனியார் வங்கிகளில் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் சேவை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் பெற முடியும்.

இந்தியா உட்பட 13 நாடுகளில் வெளியேறும் சிட்டி வங்கி.. இனி ரீடைல் வங்கி வேண்டாம்பா..!இந்தியா உட்பட 13 நாடுகளில் வெளியேறும் சிட்டி வங்கி.. இனி ரீடைல் வங்கி வேண்டாம்பா..!

 தனியார் வங்கி சேவை

தனியார் வங்கி சேவை

இந்தியாவில் தற்போது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையை அதிகரிக்கத் தனியார் வங்கிகள் தனது வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கான தொகையைக் கடனாக அளித்து அதை அப்படியே ஈஎம்ஐ-யாக மாற்றும் சேவையை அளிக்கிறது.

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

இதேபோன்ற சேவையைத் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வாங்கும் பெரிய தொகை கொண்ட வர்த்தகத்தை ஈஎம்ஐ-யாக மாற்றிக்கொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல் பிற வங்கிகளைவிடவும் மிகவும் குறைவான வட்டியில் இந்தச் சேவையை அளிக்கிறது எஸ்பிஐ.

 எஸ்பிஐ வங்கியின் Flexipay

எஸ்பிஐ வங்கியின் Flexipay

Flexipay என்ற பெயரில் அளிக்கப்படும் இந்தச் சேவைக்கு மே 9, 2021 வரையில் செயலாக்கக் கட்டணம் அதாவது processing fee-ஐ 100 சதவீத தள்ளுபடியில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி டிவிட்டரிலும் தெரிவித்துள்ளது.

 புதிய வாடிக்கையாளர்கள்

புதிய வாடிக்கையாளர்கள்

இப்புதிய சேவையின் மூலம் எஸ்பிஐ வங்கி அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டும் அல்லாமல் புதிதாகப் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகத்தை நாடு முழுவதும் பெற முடியும். மேலும் மே 9 வரையில் processing fee-ஐ 100 சதவீத தள்ளுபடியில் Flexipay சேவை வழங்கும் காரணத்தால் எஸ்பிஐ வாடிக்கையாளர்களைத் தூண்டும் விதமாக உள்ளது.

 வெறும் 500 ரூபாய் முதல்

வெறும் 500 ரூபாய் முதல்

மேலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து வர்த்தகத்தையும் Flexipay முறையில் ஈஎம்ஐ-யாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது 2,500 ரூபாய்க்கு அதிகமான தொகை கொண்ட வர்த்தகத்தை மட்டுமே இந்த முறையின் கீழ் ஈஎம்ஐ-யாக மாற்ற முடியும்.

 ஈஎம்ஐ வசதி

ஈஎம்ஐ வசதி

Flexipay தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிய தொகையை 6 மாதம், 9 மாதம், 12 மாதம் மற்றும் 24 மாதம் வரையில் ஈஎம்ஐயாக மாற்றிக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் எந்தத் தொகைக்கும், எத்தனை மாதம் வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ள முடியும்.

 1000 ரூபாய்க்கு வெறும் 52 ரூபாய் ஈஎம்ஐ

1000 ரூபாய்க்கு வெறும் 52 ரூபாய் ஈஎம்ஐ

உதாரணமாக 1000 ரூபாய் கொண்ட ஒரு வர்த்தகத்தை Flexipay முறையில் மாற்றினால் 6 மாதம் ஈஎம்ஐ-க்கு மாதம் 177.5 ரூபாயும், 12 மாதத்திற்கு 93.5 ரூபாயும், 24 மாதத்திற்கு 51.9 ரூபாய் என மிகவும் குறைந்த தொகையில் ஈஎம்ஐ-யாக மாற்ற முடியும்.

இதன் மூலம் 1000 ரூபாய்க்கு வெறும் 52 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தி பொருட்களை வாங்க முடியும்.

 

 Flexipay சேவையைப் பெறுவது எப்படி?

Flexipay சேவையைப் பெறுவது எப்படி?

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைப் பெற வேண்டுமென்றால் எஸ்பிஐ கார்டு ஆன்லைன் கணக்கிற்கு லாக்இன் செய்ய வேண்டும், இல்லையெனில் 56767 என்ற எண்ணிற்கு FP என எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதேபோல் 39 02 02 அல்லது 1860 180 1290 எண்ணிற்குக் கால் செய்வது மூலம் இந்தச் சேவையைப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news for SBI Customer: Easy EMI facility to convert large purchases at just ₹52 for ₹1000

Good news for SBI Customer: Easy EMI facility to convert large purchases at just ₹52 for ₹1000
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X