இன்றளவிலும் மக்களின் முதலீட்டு திட்ட பட்டியலில் வங்கி பிக்ஸட் டெபாசிட் என்பது இல்லாமல் இருக்காது. ஏனெனில் ரிஸ்க் இல்லாத முதலீட்டுக்கு பங்கம் இல்லாத ஒரு திட்டம் இது போதாதா?
ஆக இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட் என்பது மிக முக்கியமான வங்கி முதலீடுகளில் ஒன்றாகும்.
இது ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒரு குறிப்பிட்ட ரெகுலர் வருவாயினைத் தரும் முக்கிய முதலீடாகும். பெரும்பாலும் முதலீட்டின் கால வரம்பு, வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் மாறுவதில்லை. இதனாலேயே இன்றைய காலகட்டத்திலும் வட்டி குறைவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனையே நாடி செல்கின்றனர்.

பிகஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்
இந்த வட்டி விகிதங்கள் ஒரு வங்கியை விட மற்றொரு வங்கியுடன் ஒப்பிடும்போது சற்று வேறுபடுகின்றன. இதே வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்களில் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. பொதுவாக இந்த பிக்ஸட் டெபாசிட்களுக்கான கால வரம்பு 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் 2.5% முதல் 7.5% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாக காணப்படுகிறது.

முன்னணி வங்கிகள்
நாட்டின் முன்னணி வங்கிளான எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள், முதலீட்டு கால வரம்பானது 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் கிட்டதட்ட 7% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாக காணப்படுகிறது. சரி வாருங்கள் பார்க்கலாம் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்று.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் எவ்வளவு வட்டி?
இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் ரெகுலரான பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதமானது ஆகஸ்ட் 25 அன்று மாற்றப்பட்டது.
- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
- 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - 2.50%
- 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3%
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3%
- 6 மாதம் 1 நாள் முதல் 9 மாதம் வரையில் - 4.4%
- 9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4%
- 1 வருடத்திற்கு - 4.9%
- 1 வருடம் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் - 4.9%
- 2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.15%
- 3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.30%
- 5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.50%
பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.

எஸ்பிஐ-யில் பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்
இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதமானது செப்டம்பர் 10 அன்று மாற்றப்பட்டது.
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 2.9%
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 3.9%
- இதே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.40%
- 211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.4%
- இதே 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 4.9%
- 2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 5.1%
- 3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 5.3%
- 5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 5.4%

ஐசிஐசிஐ வங்கியில் எவ்வளவு வட்டி?
2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட்டுக்கு கீழ் கண்ட வட்டி விகிதத்தினை ICICI bank வழங்குகிறது. இது அக்டோபர் 21 முதல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
- 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - 2.50%
- 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3%
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3%
- 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் - 3.5%
- 121 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் - 3.5%
- 185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.40%
- 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - 4.40%
- 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையில் - 4.40%
- 290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.40%
- 1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் - 4.9%
- 390 நாட்கள் முதல் 18 மாதங்களுக்குள் - 4.9%
- 18 மாதங்களுக்கு மேல் 2 வருடத்திற்குள் 5%
- 2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.15%
- 3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.35%
- 5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.50%