கொரோனா லாக்டவுன் காரணமாக நடந்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் பொருட்டு ரெப்போ விகிதத்தினை குறைத்தது. இதன் காரணமாக வங்கிகளும், கடன் களுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.
அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல. 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக வீடு கட்டுவோருக்கு இது மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடுத்தர மக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் ஒரு நல்ல வீடு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுத்து விட வேண்டும் என்று தான் நினைப்பர். ஆக அப்படி நினைப்பவர்களுக்கெல்லாம் இது ஒரு நல்ல வாய்ப்பு தான்.
இந்திய கிராமங்களுக்கு சூப்பர் திட்டம்.. அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்..!

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்
அதுவும் கையில் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வங்கிகளில் கடன் வாங்கியாவது அவரவருக்கு ஏற்ப, ஒரு நல்ல வீடு கட்டிவிட வேண்டும் என்பது பலரின் பெரும் கனவாகவே இருக்கும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது நிச்சயம் கையில் பணத்தினை வைத்துக் கொண்டு செய்யும் காரியம் அல்ல. ஏனெனில் விற்கிற விலைவாசி அதுபோல. ஆனால் அப்படியானவர்களுக்கு வரனாக உள்ளது தான் வீட்டுக்கடன். அதுவும் கொரோனா கொடுத்த வரத்தினால், , குறைவான வட்டியில் கடன் கிடைக்கும்.

15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு
அதிலும் தற்போது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைந்துள்ளது. ஆக இதன் மூலம் உங்களது கனவு வீட்டை நிஜத்திலும் குறைந்த வட்டியில் கட்ட முடியும். ஏற்கனவே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை குறைத்துள்ளது. இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினையும் குறைத்துள்ளன.

டெவலப்பர்களும் சலுகை
இது தவிர கொரோனாவால் முடங்கிபோன டெபவலப்பர்களின் வணிகத்தினை ஊக்குவிக்க, அவர்களும் இந்த நேரத்தில் பற்பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். ஆக இதெல்லாம் சேர்த்து உங்களது வீட்டுக்கனவை நிறைவேற்ற சரியான வாய்ப்பாக அமையும். சரி வாருங்கள் பார்க்கலாம் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மற்ற கட்டணங்கள் எவ்வளவு, என்னென்ன சலுகைகள், விவரங்கள் என்ன?

கோடக் மகேந்திராவில் வட்டி விகிதம்
கோடக் மகேந்திரா வங்கியினை பொறுத்த வரையில், வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 6.75% முதல் வட்டியினை பெறலாம். மற்ற வங்கியில் இருந்து கடன் தொகையை கோடக் வங்கிக்கு மாற்றினால், அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை கூட தொகையை சேமிக்க முடியும் என்கிறது இவ்வங்கி. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களுக்கு, கடனுக்கு சிறப்பு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டி விகிதம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வருடத்திற்கு 6.80% வட்டி விகிதமும், பேங்க் ஆப் இந்தியாவில் வருடத்திற்கு 6.85% வட்டி விகிதமும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 6.85% வட்டி விகிதமும், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் வருடத்திற்கு 6.85% வட்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது.

கனரா வங்கியில் வட்டி விகிதம்
இதே கனரா வங்கியில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், இதே பஞ்சாப் & சிந்த் வங்கியில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், யூனியன் வங்கியில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 6.9%ல் இருந்தும் ஆரம்பிக்கிறது.

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸில் வட்டி விகிதம்
இதே எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், பஜாஜ் பின்செர்வில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், டாடா கேப்பிட்டலில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் வருடத்திற்கு 6.50% வட்டிவிகிதமும், இதே போல ஹெச்டிஎஃப்சியிலும் வாடிக்கையாளார்களுக்கு வருடத்திற்கு 7.00% வட்டி விகிதத்தில் இருந்தும் கிடைக்கும். இதே போல ஐசிஐசிஐ வங்கியிலும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7.00% முதல் ஆரம்பிக்கிறது.