வங்கி வட்டியை விட அதிக வட்டி கொடுக்கும் அஞ்சலக தொடர் வைப்பு நிதி.. எப்படி இணைவது.. சலுகைகள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுசேமிப்பு திட்டங்கள் என்றாலே அதற்கு பேர்போனது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான்.

 

அதிலும் பாதுகாப்பு, கணிசமான லாபம், சந்தை ரிஸ்க் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக அரசின் திட்டங்கள். எளிதில் அணுகலாம். விரைவில் எந்த சேவையானது அருகிலேயே பெறலாம். இப்படி பல விஷயங்களும் சாதகமாக உள்ளது.

 2 வருடம் வரி செலுத்தாத ஜெப் பைசோஸ் விண்வெளிக்குப் பயணம்.. கடுப்பான அரசியல் தலைவர்..! 2 வருடம் வரி செலுத்தாத ஜெப் பைசோஸ் விண்வெளிக்குப் பயணம்.. கடுப்பான அரசியல் தலைவர்..!

இதனாலேயே அஞ்சலக திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதும் ஈர்ப்பு உள்ளது.

முக்கிய காராணிகள்

முக்கிய காராணிகள்

அதோடு தற்போது வங்கிகளுக்கு இணையாக, அஞ்சலகங்களும் பல சேவைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் சேவை, பண பரிவர்த்தனை, கிராமப்புறங்களில் எளிதில் அணுகும் வகையில் கிளைகள் இப்படி பல சாதகமான விஷயங்கள் உள்ளன. இப்படி பல சாதகமான விஷயங்களுக்கும் மத்தியில் வங்கி வட்டியை விட அதிக வட்டி கொடுக்கும் பல சேமிப்பு திட்டங்களையும் அஞ்சலகங்கள் வழங்கி வருகின்றன.

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தின் முன்னணி பொதுத்துறை வங்கிகளை விட வட்டி விகிதம் அதிகமாகும். அதோடு இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்ய முடியும். அதிக பட்ச தொகை என்று எதுவும் இல்லை.

யாருக்கு ஏற்றது?
 

யாருக்கு ஏற்றது?

அஞ்சலகத்தின் இந்த திட்டம் மாத சம்பளதாரர்களுக்கும், சாமனிய மக்களுக்கும் ஏற்ற ஒரு திட்டமாகும். ஏனெனில் தங்களுடைய சம்பளத்தில், வருவாயில் சிறு தொகையை இந்த ஆர்டி திட்டத்தில் போட்டு வைக்கலாம். இதன் மூலம் நல்ல முதிர்வு தொகையினையும் பெற முடியும்.

வட்டி விகித மாற்றம்

வட்டி விகித மாற்றம்

அதிலும் இந்த தொடர் வைப்பு நிதி திட்டமானது வங்கிகளோடு ஒப்பிடும்போது, வட்டி விகிதம் அதிகம். டெபாசிட் செய்வதும் மிக எளிது. மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது.

தற்போதைய வட்டி நிலவரம்..!

தற்போதைய வட்டி நிலவரம்..!

தற்போது இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் என்பது 5.8% ஆகும். இது தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்திற்கு தொடர்ச்சியாக 7% மேலாகவே வட்டி விகிதம் இருந்து வருகின்றது. அதிகபட்சமாக ஜூன் 2017ம் காலாண்டில் 7.40% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

இந்த தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடங்கும்போது, ஆவணங்களுடன் சேர்த்து, பணம் அல்லது காசோலையை கொண்டு தொடங்கலாம்.

நாமினியை நியமித்துக் கொள்ளும் வசதியும் உண்டு
இந்த தொடர் வைப்பு நிதி கணக்கினை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.
ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
2 பேர் சேர்ந்து ஜாய்ண்ட் அக்கவுண்ட் ஆகவும் தொடங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே தொடங்கிய தனி நபர் அக்கவுண்டினையும் ஜாயிண்ட் அக்கவுண்டாக மாற்றிக் கொள்ளலாம்.
குழந்தைகள் பெயரிலும் பாதுகாவலர் உதவியுடன் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களே இந்த கணக்கினை நிர்வகிக்கலாம்.
வரிச்சலுகை உண்டு

தாமதமானால் அபராதம் உண்டா?

தாமதமானால் அபராதம் உண்டா?

ஒரு வேளை உங்களால் பணம் கட்ட முடியவில்லை எனும்போது, அடுத்த முறை கட்டும்போது அபாரதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். அபராத தொகையானது, இது ஒவ்வொரு 5 ரூபாய்க்கும் 5 பைசா வீதம் இருக்கும். அதாவது 100 ரூபாய்க்கு 5 ரூபாயாகும்.

கணக்கினை புதுபிக்க இயலுமா?

கணக்கினை புதுபிக்க இயலுமா?

எனினும் தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேலாக பணம் செலுத்தவில்லை எனில். உங்களது ஆர்டி கணக்கு நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்படும் கணக்கை, 2 மாதங்களுக்கு அந்த கணக்கினை புதுப்பிக்கவில்லை எனில் அதனை தொடர முடியாது.

சில சலுகைகள் உண்டு?

சில சலுகைகள் உண்டு?

தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி சலுகையினை பெறலாம்.

குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.

இதே 12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும்.

12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். எனினும் இப்படி முன் கூட்டியே செலுத்தப்படும் தொகையானது குறிப்பிட்ட காலங்களில் செலுத்தப்படும்.

முதிர்வுக்கு முன்பே பணம் எடுக்கலாமா?

முதிர்வுக்கு முன்பே பணம் எடுக்கலாமா?

அஞ்சலகத்தின் இந்த தொடர் வைப்பு நிதி கணக்கில் இடையில் பணத்தினை பெற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். இது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது.

ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% அனுமதிக்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 5 வருடங்களாகும். அதன் பிறகும் தொடர விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து தொடரலாம். இவ்வாறு நீட்டிக்கப்படும் கணக்கினை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம்.

டெபாசிட்தாரர் இறந்து விட்டால்

டெபாசிட்தாரர் இறந்து விட்டால்

ஒரு வேளை துரதிஷ்டவசமாக அக்கவுண்ட் ஹோல்டர் இறந்துவிட்டால், நாமினி, அதற்கான விண்ணப்பத்தினை அஞ்சலக கிளையில் கொடுத்து தொடங்கிக் கொள்ளலாம்.

நாமினி சரியான ஆவணங்களை கொடுத்து இந்த தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடர்ந்து கொள்ளவும் ஆப்சன் உண்டு.

கடன் வசதி?

கடன் வசதி?

12 தவணை தொகை செலுத்திய பிறகு அதற்கு எதிராக நீங்கள் இந்த தொடர் வைப்பு கணக்கின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது உங்களது நிலுவையில் 50% பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கடனை ஒரே தவணையாகவும் அல்லது மாத தவணையாகவும் கூட செலுத்திக் கொள்ளலாம். இதற்கு வட்டி விகிதமாக 2% + RD வட்டி விகிதமும் சேரும். ஒரு வேளை இந்த கடனை உங்களது திட்டம் முதிர்வு அடையும் வரை செலுத்தவில்லை எனில், உங்களது கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How can I join National savings Recurring deposit account? Can i get loan on rd in post office?

We have to visit our nearest post office and fill the form and submit it along with the initial deposit. Depositors are allowed to withdraw up to 50% of the available balance in their RD account after one year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X