Home loan வாங்கி இருக்கீங்களா.. அப்ப 3 இஎம்ஐ தள்ளி போட்டா என்ன பிரச்சனை வரும்ன்னு பாருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரவி 35,50,000 ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். ஆண்டுக்கு 8 % வட்டி, மாதம் 33,448 ரூபாய் இஎம்ஐ (EMI) என வைத்துக் கொள்வோம்.

சமீபத்தில் சில மாத இஎம்ஐ (EMI) எல்லாம் செலுத்திய பின், ஏப்ரல் 01, 2020 அன்று அவர் செலுத்த வேண்டிய மொத்த வீட்டுக் கடன் அசல் தொகை 35 லட்சம் ரூபாய் இன்னும் பாக்கி இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

ஆக பாக்கி இருக்கும் தொகைக்குத் தானே வட்டி கணக்கிடுவார்கள். எனவே 35 லட்சம் ரூபாய்க்கு வட்டிக் கணக்கு தொடங்கும்.

 அடடே.. நான்காவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..! அடடே.. நான்காவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..!

ஒத்தி வைக்கவில்லை

ஒத்தி வைக்கவில்லை

ஒருவேளை ரவி, 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்தி வைக்கவில்லை என்றால், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் (180 மாத தவணைகளில்) மொத்த கடனையும் செலுத்திவிடுவார். இந்த 180 மாதங்களில் மொத்த வட்டியாக ரூ. 25,20,608 செலுத்துவார். வட்டி + அசல் என சேர்த்து மொத்தம் ரூ. 60,20,608 செலுத்துவார்.

ஒத்தி வைக்கிறார்

ஒத்தி வைக்கிறார்

ஒருவேளை சந்தர்ப்ப சூழலால், ரவி, இந்த 3 மாத இஎம்ஐ (EMI) ஒத்திவைப்புக்கு ஓகே சொல்கிறார் என்றால் அவர் கூடுதலாக எவ்வளவு பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதைத் தான் இங்கு விரிவாக கணக்கிட்டுப் பார்க்க இருக்கிறோம். முதலில் 35 லட்சம் ரூபாய் அசல் தொகையில் இருந்து தொடங்குவோம்.

மாதம் 1

மாதம் 1

ஏப்ரல் 01, 2020 தேதிப் படி, மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,00,000 ரூபாயாக இருக்கும். 35 லட்சம் ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். ஆக 35 லட்சம் ரூபாய்க்கு 23,333 ரூபாய் வட்டி வரும். முதல் மாதம் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 35 லட்சம் ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 ஏப்ரல் 2020 தேதி நிலவரப்படி, ரவியின் மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,23,333 ரூபாயாக இருக்கும்.

மாதம் 2

மாதம் 2

மே 01, 2020 தேதிப் படி, மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,23,333 ரூபாயாக இருக்கும். இந்த 35,23,333 ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். 23,489 ரூபாய் வட்டி வரும். இரண்டாம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 35,23,333 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 மே 2020 தேதி நிலவரப்படி, ரவியின் மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,46,822 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.

மாதம் 3

மாதம் 3

ஜூன் 01, 2020 தேதிப் படி, மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,46,822 ரூபாயாக இருக்கும். இந்த 35,46,822 ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். 23,645 ரூபாய் வட்டி வரும். மூன்றாம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 35,46,822 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 ஜூன் 2020 தேதி நிலவரப்படி, ரவியின் மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,70,467 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.

வழக்கம் போல

வழக்கம் போல

ஜூலை 01, 2020 அன்று ரவியின் வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,70,467 ரூபாயாக அதிகரித்து இருக்கும். 35 லட்சம் ரூபாய்க்கு வட்டி செலுத்துவதற்கு பதிலாக ஒவ்வொரு இஎம்ஐ (EMI)-யிலும் 35,70,467 ரூபாய்க்கு வட்டி செலுத்துவார். அதாவது 3 மாதம் இஎம்ஐ (EMI) தள்ளிப் போட்டதன் விளைவாக 70,467 ரூபாய்க்கு வட்டி செலுத்திக் கொண்டே இருப்பார் ரவி.

எவ்வளவு அதிகம்

எவ்வளவு அதிகம்

ஆக 35,70,467 ரூபாய்க்கு வட்டியாக 25,71,357 ரூபாய் செலுத்துவார். அசல் + வட்டி என ஒட்டுமொத்தமாக 61,41,824 செலுத்துவார். 3 மாதம் இஎம்ஐ (EMI) தள்ளிப் போட்டதால் மொத்தம் எவ்வளவு ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்..?

3 மாத இஎம்ஐ (EMI) தள்ளிப் போட்டால் 61,41,824 - 60,20,608 (இ எம் ஐ தள்ளிப் போடவில்லை என்றால்) = 1,21,216. ஆக 3 மாதம் இ எம் ஐ தள்ளிப் போடுவதால் சுமார் 1,21,216 ரூபாயை அதிகமாக ரவி செலுத்த வேண்டி இருக்கும்.

 

யோசியுங்கள்

யோசியுங்கள்

இந்த 1,21,216 ரூபாயில், 70,467 ரூபாயை அசலாகவும், 50,749 ரூபாயை வட்டியாகவும் செலுத்துவார். இந்த கொடுமைக்கு பேசாமல் இழுத்துப் பிடித்து இ எம் ஐ செலுத்தி விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. எனவே மக்களே நன்றாக யோசித்து, இந்த 3 மாத இ எம் ஐ ஒத்திவைப்பை பயன்படுத்தலாமா வேண்டாமா என யோசித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கணக்கீடுகள் எல்லாமே பொதுவாக செய்தவைகளே, எந்த வங்கியின் கணக்கீடையும் அடிப்படையாகக் கொண்டு செய்யவில்லை. எனவே, வங்கிக் கணக்கீடுகளில் சின்ன சின்ன கணக்கீடு மாற்றங்கள் இருக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Home loan borrowers 3 month EMI defer may cost lakhs to them

How the home loan borrowers 3 month EMI deferment may cost lakhs of rupee extra payment to them. We have simple math to explain this emi burden to them.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X