எனது சம்பளத்திற்கு எவ்வளவு ஹோம் லோன் கிடைக்கும்.. அதிகமாக கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பெரும்பாலானவர்களும் வீட்டுக் கனவை நனவாக்க வீட்டுக் கடன் என்ற அஸ்திரத்தையே பயன்படுத்துவோம். வீட்டுக் கடன் தொகையை பொறுத்தவரையில் வீட்டுக் கடன் மதிப்பில் சுமார் 80% வரையில் பெறலாம்.

எனினும் சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்காது? சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கலாம்? சில நேரங்களில் கடன் கிடைக்காமல் கூட போகலாம்.

எப்படி வங்கிகள் நமக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை தீர்மானிக்கின்றன. எதனை வைத்து தீர்மானிக்கின்றன. ஆக அதனை நாம் எப்படி எதிர்கொள்வது? எதிர்காலத்தில் இப்பிரச்சனையை தடுக்க என்னவென்னலாம் செய்யலாம்? அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது பொதுவான விஷயமே. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படலாம்.

ஏன் குறைவு

ஏன் குறைவு

பொதுவாக வீடு கட்ட நினைப்பவர்கள், குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதாவது தேவை அதிகமாக இருக்கும். ஆனால் வங்கிகளோ மிகக் குறைவாகத் தான் கடன் கொடுப்பார்கள். ஏன் குறைவாக இருக்கின்றது. இதனை அதிகரிக்க என்ன வழி. எந்த மாதிரியான விஷயங்களை கடை பிடிக்க வேண்டும்.

நிகர சம்பளத்தில் 60 மடங்கு கடன்

நிகர சம்பளத்தில் 60 மடங்கு கடன்

பெரும்பாலான வங்கிகள் உங்களது நிகர சம்பளத்தில் 50 - 60 மடங்கு ஹோம் லோன் ஆக கிடைக்கும். உங்களது மொத்த சம்பளத்தில் வரி பிடித்தம், பிஎஃப் பிடித்தம், மெடிக்கல் அலவன்ஸ் பிடித்தம் போக மீதமிருக்கும் 60 மடங்கு கிடைக்கும். இதில் சில வங்கிகள் மெடிக்கல் அலவன்ஸ், லீவ் அலவன்ஸையும் கணக்கில் நிகர சம்பளமாக எடுத்துக் கொள்கின்றன. சில வங்கிகள் எடுத்துக் கொள்வதில்லை.

60 மடங்கு தொகை குறையுமா?

60 மடங்கு தொகை குறையுமா?

இதில் தனியார் வங்கிகள் 60 மடங்கு விகிதத்தில் சற்று அதிகரித்தும் கொடுக்கின்றன. இது நீங்கள் பணி புரியும் நிறுவனம், உங்களது கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பொறுத்து அதிகரிக்கின்றன. எனினும் பொது வங்கிகளில் இது சாத்தியமில்லை. இதே இந்த 60 மடங்கு தொகை குறையுமா? என்றால் அதற்கும் நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

எவ்வளவு கடன் கிடைக்கும்?

உதாரணத்திற்கு ராகுல் என்பவரின் மொத்த சம்பளம் 50,000 ரூபாய் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். (Sample)
Basic Salary - ரூ.15,000
Conveyance allowance - ரூ.1,000
HRA - ரூ.9,000
LTA - ரூ.3000
Medical Allowance - ரூ.2,000
Special Allowance - ரூ.20,000
Gross salary - ரூ.50,000
Provident fund - ரூ.2000
Income tax - ரூ.1000
Net salary - ரூ.47,000
எவ்வளவு ஹோம் லோன் கிடைக்கலாம் - 47,000*60 = ரூ.28,20,000
இதில் LTA மற்றும் மெடிக்கல் அலவன்ஸையும் சில வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி பார்த்தால் - 42,000 ரூபாய் தான் நிகர சம்பளமாக கிடைக்கும். ஆக இதன் படி பார்த்தால் உங்களுக்கு 42,000*60 = 25,20,000 ரூபாயாகும். இதே 50 மடங்கு என கொண்டால், இதில் இன்னும் குறையும்.

இன்னும் சில காரணங்கள் உண்டு

இன்னும் சில காரணங்கள் உண்டு

நீங்கள் ஏற்கனவே உங்களது சம்பளத்தில் இருந்து வேறு ஏதேனும் இஎம்ஐ தொகை போயிக் கொண்டிருந்தால், அதுவும் உங்களின் நிகர சம்பளத்தில் இருந்து குறையும்.

ராகுலின் சம்பளம் நிகர சம்பளம் 47,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம். இதில் அவர் கார் லோன் 5,000 ரூபாய் கட்டி வருகின்றார் என வைத்துக் கொள்வோம். இதனை கழித்தால் நிகர சம்பளம் 42,000 ரூபாயாக குறையும். இதே LTA மற்றும் மெடிக்கல் அலவன்ஸையும் சேர்க்காமல், இந்த தவணை தொகையை கழித்தால் 42,000 - 5000= 37,000 ரூபாய் தான் நிகர சம்பளமாக எடுத்துக் கொள்ளப்படும். ஆக 37000*60= 22,20,000 ரூபாய் தான் ஹோம் கிடைக்கும்.

 

வீட்டுக் கடனுக்கு முன் இதனை கவனியுங்கள்

வீட்டுக் கடனுக்கு முன் இதனை கவனியுங்கள்

இதே போலத் தான் நீங்கள் ஏற்கனவே செலுத்தும் தவணைத் தொகையை கழித்தது போகத் தான், உங்களது நிகர சம்பளம் இருக்கும். ஆக அதன் மடங்கிலேயே கடன் கிடைக்கும். ஆக வீட்டுக் கடன் வாங்கும் முன்பு இது போன்ற மற்ற கடன்கள் வாங்காமல் இருந்தால், உங்கள் கடன் விகிதம் அதிகரிக்கும். அப்படி கடன் இருக்கும் பட்சத்தில் அதனை அடைத்து விட்டு கடனை பிறகு, ஹோம் லோனுக்காக அப்ளை செய்யலாம். அப்படி செய்தால் உங்களுக்கான வீட்டுக் கடன் அதிகமாக கிடைக்கலாம்.

சிபில் ஸ்கோரை அதிகமாக வையுங்கள்

சிபில் ஸ்கோரை அதிகமாக வையுங்கள்

உங்களது சிபில் குறைய குறைய ஹோம் லோன் கிடைக்கும் வாய்ப்பும் குறையும். அப்படி கிடைத்தாலும் வட்டி அதிகமாக இருக்கும். ஆக முடிந்தமட்டில் சிபில் ஸ்கோரினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அதேபோல பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாதீர்கள். ஒரே கிரெடிட் கார்டு வைத்திருந்தாலும், அதனையும் சரியான காலத்தில் செலுத்த பழகுங்கள்.

நல்ல நிறுவனமாக இருக்க வேண்டும்

நல்ல நிறுவனமாக இருக்க வேண்டும்

இது தவிர சில நிறுவனங்களில் பிஎஃப் பிடித்தம் இருக்காது. ஆக உங்களின் திரும்ப செலுத்தும் நிலை பற்றி வங்கிகள் யோசிக்கலாம். ஆக இதனாலும் உங்களது ஹோம் லோன் கொடுக்காமல் தவிர்க்கலாம். ஆக இதனையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.

கோ அப்பிளிகேண்டை சேர்த்து கொள்ளுங்கள்

கோ அப்பிளிகேண்டை சேர்த்து கொள்ளுங்கள்


உங்களது ஹோம் லோன் அப்பிளிகேஷனில் கோ அப்பிளிகேண்டாக, உங்களது மனைவி அல்லது குடும்பத்தில் நல்ல சம்பளத்தில் பணி புரியும் ஒருவரை சேர்க்கலாம். இதன் மூலம் உங்களது ஹோம் லோனை அதிகரிக்க முடியும்.
இது தவிர மற்ற துணை வருமானம் கிடைத்தால் அதற்கான ஆவணத்துடன் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் உங்களது வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களது ஹோம் லோனை அதிகரிக்க முடியும்.
அதேபோல கால அவகாசத்தினை தேர்தெடுக்கும்போது நீண்டகாலத்திற்கு அதிகரியுங்கள். அப்படி அதிகரிக்கும் உங்களது லோன் தொகையும் அதிகரிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How much home loan i can get on my salary? How to increase that?

How much home loan i can get on my salary? How to increase that?/. எனக்கு எவ்வளவு ஹோம் லோன் கிடைக்கும்.. அதிகமாக கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
Story first published: Friday, November 26, 2021, 18:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X