SBI வாடிக்கையாளர்கள் எப்படி Form 15 G / Form 15 H-ஐ ஆன்லைனில் சமர்பிக்கலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த Form 15 G / Form 15 H படிவங்களைப் பற்றி அவ்வப் போது செய்திகளில் கேள்விப்பட்டு இருக்கலாம்.

இந்த படிவங்களைச் சமர்பித்துக் கொடுத்தால், வங்கி டெபாசிட்டில் இருந்து வரும் வட்டி வருமானங்களுக்கு டிடிஎஸ் (Tax Deductable At Soure) பிடிக்கமாட்டார்கள்.

அதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதோடு பல கோடி மக்கள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து இருக்கும் எஸ்பிஐ வங்கியில் எப்படி இந்த Form 15 G or Form 15 H-ஐ சமர்பிக்கலாம் என்று பார்ப்போம்.

யாருக்கு பொருந்தும்

யாருக்கு பொருந்தும்

பொதுவாக, வங்கி டெபாசிட் மூலம் வரும் வருமானத்தை மற்ற எல்லா வகையான வருமானத்துடன் சேர்த்தால், செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி 0-ஆக இருக்க வேண்டும். அவர்கள் இந்த படிவம் 15 ஜி & படிவம் 15 ஹெச் நிரப்பி டிடிஎஸ்-ல் இருந்து விலக்கு பெற முடியும்.

யாருக்கு Form 15 G

யாருக்கு Form 15 G

60 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்தியாவில் வசிப்பவர், மொத்த ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி கணக்கிட்டால் 0 ரூபாய் செலுத்த வேண்டியவர்கள், வங்கி டெபாசிட்டில் இருந்து வரும் வருமானம், அடிப்படை வருமான வரி வரம்பை விட குறைவாக இருப்பவர்கள், இந்த படிவம் 15 ஜியை நிரப்பி, வட்டி கொடுக்கும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடம் கொடுத்து டிடிஎஸ்-ல் இருந்து விலக்கு பெறலாம்.

யாருக்கு Form 15 H

யாருக்கு Form 15 H

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள், இந்தியாவில் வசிப்பவர், மொத்த ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி கணக்கிட்டால் 0 ரூபாய் செலுத்த வேண்டியவர்கள், வங்கி டெபாசிட்டில் இருந்து வரும் வட்டி வருமானம், அடிப்படை வருமான வரி வரம்பை விட கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை, இவர்களுக்கு எல்லாம் இந்த படிவம் 15 ஹெச்-ஐ நிரப்பி, வட்டி கொடுக்கும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடம் கொடுத்து டிடிஎஸ்-ல் இருந்து விலக்கு பெறலாம்.

ஏப்ரல் 2020

ஏப்ரல் 2020

பொதுவாக இந்த Form 15 G / H-ஐ நிதி ஆண்டின் தொடக்கத்தில் கொடுப்பார்கள். அப்போது தான் அந்த நிதி ஆண்டில் இருந்து வரும் வட்டிக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள். இந்த 2020 - 21 நிதி ஆண்டில் Form 15 G / H கொடுக்க கடைசி தேதி ஏப்ரல் 30, 2020. ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த படிவங்களை முறையாக கொடுக்க முடியவில்லை.

ஒத்தி வைப்பு

ஒத்தி வைப்பு

எனவே, 2019 - 20 நிதி ஆண்டுக்கு இந்த Form 15 G / H-ஐ கொடுத்து இருப்பவர்களின் அதே படிவத்தை, இந்த 2020 - 21 நிதி ஆண்டு ஜூன் 30, 2020 வரை கணக்கில் எடுத்துக் கொள்ள இருக்கிறார்களாம். இந்த 2020 - 21 நிதி ஆண்டுக்கு, ஜூலை 2020 முதல் வாரத்துக்குள் Form 15 G / H-ஐ சமர்பிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் சொல்லி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஆடிட்டர் உதவி

ஆடிட்டர் உதவி

இதில் பொதுவான விஷயங்களையே குறிப்பிட்டு இருக்கிறோம். ஒவ்வொரு நபரும் யார் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருக்கிறார்கள், அவர்கள் இந்து கூட்டுக் குடும்பமாக இருக்கிறாரா, HUF பெயரில் டெபாசிட் இருக்கிறதா, கம்பெனியா, சிறு நிறுவனமா என்பதைப் பொறுத்து, வருமான வரி விதிகள் மாறுபடும். எனவே மேற்படி சந்தேகங்களுக்கு உங்கள் ஆடிட்டரை அணுகி விரிவாக இதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவும். சரி இப்போது எஸ்பிஐ வாடிக்கையாளர் எப்படி Form 15 G / H சமர்பிப்பது என பார்ப்போம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

1. உங்கள் ஆன்லைன் பேங்கிங் விவரங்களைக் கொடுத்து லாக் இன் செய்யவும்.
2. 'e-services' எனக் குறிபிட்டு இருக்கும் ஆப்ஷனில் 'Submit 15G/H'-ஐ தேர்வு செய்யவும்.
3. அதன் பின் Customer Information File (CIF No) கொடுத்து சப்மிட் செய்யவும்.
4. அதன் பின் ஒரு பக்கத்து அழைத்துச் செல்லும். அதில் உங்கள் விவரங்கள் பலதும் முன் கூட்டியே நிரப்பப்பட்டு இருக்கும். அவைகளை சரி பார்த்துக் கொள்ளவும்.
5. அதே பக்கத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் விவரங்களை நிரப்பவும்.
6. எல்லாம் முடித்த பின், கீழே Confirm செய்யவும். அவ்வளவு தான் டன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How SBI customers can submit Form 15G or Form 15H online

The state bank of india has a facility to submit Form 15G or Form 15H online. So we are going to see how SBI customers can submit Form 15G or Form 15H online.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X