SBI mPassbook.. ஆன்லைனில் பெறுவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்குகளை டிஜிட்டல் முறையில் கையாள்வதற்காக பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.

அந்த வகையில் எம்பாஸ்புக் 'mPassbook' எனும் புதிய சேவையை கொண்டு வந்துள்ளது.

சரி இந்த சேவை எதற்காக பயன்படுத்துவது? எப்படி பயன்படுத்துவது? இதன் பயன் என்ன? மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

mPassbook

mPassbook

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலமாகவே தங்கள் பரிவர்த்தனைகளை எளியமையாக பார்க்கலாம். மேலும் வங்கி கணக்கின் மொத்த ஸ்டேட்மென்ட்டையும் mPassbook மூலம் பெறலாம். உங்களது பாஸ்புக்கின் டிஜிட்டல் வடிவமே எம் பாஸ்புக் எனலாம். முன்பெல்லாம் பாஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும். இல்லையேல் வங்கிகளில் இருக்கும் மெஷின்களில் பிரிண்ட் செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் வழியாக இந்த சலுகைகளை பெற முடியும்.

எஸ்பிஐ எம்பாஸ்புக்கின் நன்மைகள்

எஸ்பிஐ எம்பாஸ்புக்கின் நன்மைகள்

நீங்கள் வங்கியில் பயன்படுத்தக்கூடிய பாஸ்புக்கின் டிஜிட்டல் வடிவமே இந்த எம்பாஸ்புக் ஆகும். சமீபத்திய பரிவர்த்தனைகள் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, அதை உங்கள் மொபைலிலே பெறலாம். எஸ்பிஐ-யின் இந்த எம்பாஸ்புக்கினை, SBI anywhere, SBI YOPO, SBI quick mobiles போன்ற மொபைல் பயன்பாடுகள் மூலம் அணுகி கொள்ளலாம். இதற்காக எந்த கூடுதல் கட்டணமும் கிடையாது.

இதற்காக நீங்கள் வங்கிக்கு செல்ல தேவையில்லை

இதற்காக நீங்கள் வங்கிக்கு செல்ல தேவையில்லை

உங்களது சமீபத்திய விவரங்களை புதுப்பிக்க நீங்கள் வங்கிக்குச் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் பயணத்தின் போது உங்கள் பரிவர்த்தனை பதிவுகளைக் காண, எஸ்பிஐயின் இந்த எம்பாஸ்புக் உதவுகிறது. எஸ்பிஐ வங்கியின் இணைய வங்கிக்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, நீங்கள் எம்பேஸ்புக்கை அணுக முடியும். எஸ்பிஐ-யின் இந்த எம் பாஸ்புக் மிகவும் பாதுகாப்பானது. ஏனென்றால் அவற்றை அணுக மற்றும் பதிவிறக்க உங்கள் இணைய வங்கி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லையை உள்ளிட வேண்டும்.

நிபந்தனைகள் என்ன?

நிபந்தனைகள் என்ன?


எஸ்பிஐ வங்கியின் எம்பாஸ்புக்கினை பெற, உங்கள் சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செயலில் உள்ள மொபைல் நம்பரை கொண்டிருக்க வேண்டும். உங்களது வங்கி கணக்கின் சரியான பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு இருக்க வேண்டும். ஏனெனில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு தான் ஓடிபி வரும்.

யோனோ செயலி மூலம் எப்படி எம்பாஸ்புக் பெறுவது?

யோனோ செயலி மூலம் எப்படி எம்பாஸ்புக் பெறுவது?

உங்கள் மொபைலில் எஸ்பிஐ யோனோ லைட் ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் தேவையான விவரங்களைக் கொடுத்து உங்கள் கணக்கினை செய்ய வேண்டும். இப்போது மெனுவின் கீழ் உள்ள மை அக்கவுண்ட்ஸ் என்பதை கிளிக் செய்யவும். பின்னர் mPassbook என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு view mPassbook என்பதை கிளிக் செய்து, உங்கள் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். உங்களது கணக்கின் சமீபத்திய பரிவர்த்தனைகளை பார்க Refresh என்பதை கிளிக் செய்யவும்.

SBI Quick app மூலம் எம்பாஸ்புக் பெறுவது எப்படி?

SBI Quick app மூலம் எம்பாஸ்புக் பெறுவது எப்படி?

உங்கள் மொபைலில் எஸ்பிஐ குயிக் ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள்/. அதில் account services என்பதை கிளிக் செய்யவும். அதில் 6 மாத E-statement என்பதன் கீழ், message என்பதை கிளிக் செய்யவும். இதற்ன் பிறகு உங்களது கணக்கு எண் மற்றும் 4 இலக்க பாஸ்கோடினை பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் E- statement என்பதை பெறுவீர்கள். இதனை கொடுக்கப்பட்ட கடவுக்குறியீட்டைப் பயன்படுத்தி திறக்க முடியும்.

SBI Anywhere app

SBI Anywhere app

உங்களது மொபைலில் SBI Anywhere app லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் வலது பக்கத்தில் mPassbookக்கிற்கான லிங்க் இருக்கும். அதனை கிளிக்ம் செய்து, உங்களது ஐடி மற்றும் பார்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு mPassbook ஆக்சஸினை கிளிக் செய்யவும். இதன் பிறகு mPassbook வெற்றிகரமாக திறக்ககும். அதில் ஏற்கனவே பரிவர்த்தனை செய்த விவரங்களை பார்க்க முடியும்.

எம்பாஸ்புக்கின் பின் நம்பர் எப்படி உருவாக்குவது ?

எம்பாஸ்புக்கின் பின் நம்பர் எப்படி உருவாக்குவது ?

உங்களிடம் எம்பாஸ்புக்கின் பின் நம்பர் இல்லையென்றால், SBI anywhere ஆப்பினை உங்கள் மொபைலில் லாகின் செய்யவும். அதில் settingsல் select create/ reset mPassbook PIN select create/ reset mPassbook PIN என்பதை கிளிக் செய்யவும். அதில் 4-இலக்க எம்பாஸ்புக்கின் பின் நம்பரை பதிவு செய்து உறுதிப்படுத்தவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to get SBI mPassbook online? Check details

SBI latest updates.. How to get SBI mPassbook online? Check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X