ELSS என்றால் என்ன? வரியை இப்படி கூட சேமிக்க முடியுமா.. கூடாக வருமானமும் உண்டு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் (ELSS). இதன் பெயரிலேயே முழுமையாக விளக்கமும் உள்ளது. இது நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய உகந்த ஃபண்டாக பார்க்கப்படுகிறது. இதில் வரிச் சலுகையும் கிடைக்கும்.

இந்த ஃபண்டில் முதலீடு செய்யப்படும் தொகையானது பெரும் பகுதியானது பங்கு சந்தையில் ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படுகிறது.

நீங்கள் 30% வரி வரம்பில் இருந்தால் 45,000 ரூபாயை சேமிக்கலாம். உங்கள் வருமானத்திற்கு வருகிறதோ இல்லையோ, வரிச் சேமிப்பு மூலம் உங்களுக்கு வரி சேமிப்பு கிடைக்கிறது. இதுவே இந்த திட்டத்தினை பலரும் தேர்தெடுக்க காரணமாக அமைகிறது.

 முதலீடு செய்ய திட்டமா.. ELSS Vs PPF.. எது சிறந்தது.. உங்களுக்கு ஏற்றது எது? முதலீடு செய்ய திட்டமா.. ELSS Vs PPF.. எது சிறந்தது.. உங்களுக்கு ஏற்றது எது?

எவ்வளவு ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம்?

எவ்வளவு ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம்?

அதோடு பங்கு சந்தைகள் சிறப்பாக இருக்கும்போது இந்த திட்டத்தில் வருமானமும் பெரியளவில் இருக்கிறது. இந்த ELSS திட்டத்தினை பொறுத்த வரையில் 80% ஈக்விட்டி மூலம் முதலீடு செய்து கொள்ளலாம். எனினும் இந்த திட்டத்தில் லாக் இன் காலம் 3 வருடம் ஆகும். இதனால் இந்த திட்டத்தில் உடனடியான பணத்தை எடுக்க முடியாது.

ரிஸ்கும் உண்டு

ரிஸ்கும் உண்டு

ஆக வரி சலுகையும் வேண்டும். அதோடு நல்ல வருமானமும் வேண்டும் என்றால், அதற்கு இந்த ELSS திட்டமே பெஸ்ட் ஆப்சனாக பார்க்கப்படுகிறது. பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதனை பற்றி முழுமையாக தெரியாமல் அதில் முதலீடு செய்யக் கூடாது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அப்படி பார்க்கும்போது நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் ELSS திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது சிறந்த வழியாக இருக்கும். லாபமும் அதிகமாக இருக்கும். அதே அளவு ரிஸ்கும் இந்த திட்டத்தில் உண்டு.

 யாருக்கு ஏற்றது?

யாருக்கு ஏற்றது?

பொதுவாக இந்த ELSS ஃபண்டில் திரட்டப்படும் நிதியானது பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதாக், வருமானம் பங்கு சந்தையில் ஏற்ற தாழ்வுகளை பொறுத்தே இருக்கும். ஆக நாங்கள் ரிஸ்க் எடுக்க தயார் என நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இது முதலீட்டாளர்களுக்கு மிக ஏற்றதாக இருக்கிறது.

 பணத்தை  வெளியே எடுக்காதீர்கள்

பணத்தை வெளியே எடுக்காதீர்கள்

பெரும்பாலும் இந்த திட்டத்தில் லாபமோ நஷ்டமோ லாக் இன் காலம் முடிந்த பிறகு பணத்தை எடுத்து விடுகின்றனர். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் லாபத்தினை பொறுத்து இந்த திட்டத்தில் முதலீட்டினை திட்டமிடலாம். பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள் இந்த ஃபண்டில் 5 ஆண்டுகள் ஆவது வைத்திருக்க பரிந்துரை செய்கின்றனர்.

முதலீட்டு வரம்பு

முதலீட்டு வரம்பு

இந்த திட்டத்தில் முதலீட்டின் அளவு என்பது அதிகபட்சம் வரம்பு என்பது தீர்மானிக்கப்படவில்லை. ஆக எவ்வளவு வேண்டுமென்றாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

இந்த ஃபண்டில் திரட்டப்படும் முதலீடானது பங்கு சந்தையில் தான் செய்யப்படுகின்றது என்றாலும்., அது பிரித்து பரவலாக பல்வேறு துறை சார்ந்த பங்குகளில் செயப்படுகின்றது.

 

 எஸ் ஐ பி

எஸ் ஐ பி

வரிச் சலுகை வருமானம் என்ற இரு இலக்கிற்கு மத்தியில், இந்த ஃபண்டில் எஸ் ஐ பி மூலமாகவும் முதலீடு செய்து கொள்ளலாம். ஆக நீண்டகால நோக்கில் இதுவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். மொத்தமாகவும் இந்த ஃபண்டில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் இடையில் டாப் அப் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆக கையில் காசு இருக்கும்பட்சத்தில் இதில் முதலீடு செய்டு கொள்ளலாம்.

நீண்ட கால மூலதன ஆதாய வரி

நீண்ட கால மூலதன ஆதாய வரி

இந்தத் திட்டத்தில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருக்கும்பட்சத்தில் இடையிடையே தரப்படும் டிவிடெண்டுக்கு 10% விநியோக வரி பிடிக்கப்படும். இந்த திட்டத்தில் வரி சலுகை என்பது இருந்தாலும் நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்பட்சத்தில் விதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு உங்களது வருமானம் 1,20,000 ரூபாய் என்றால், இதில் 20,000 ரூபாய்க்கு மட்டும் 10% வீதம் LTCG செலுத்த் வேண்டியிருக்கும். ஆக இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

how to invest ELSS mutual funds? 5 key poits to know before investment

Equity Linked Savings Scheme (ELSS). It is considered as an ideal fund for long-term investment. It also gets tax benefits
Story first published: Friday, December 2, 2022, 17:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X