வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்பட இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் பல தரப்பினரின் எதிர்பார்ப்பு, வருமான வரி உச்ச வரம்பினை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.

 

எனினும் இந்த உச்ச வரம்பு அதிகரித்தாலும், அதிகரிக்கப்படாவிட்டாலும், எப்படி எல்லாம் வருமான வரியை சேமிக்கலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

சம்பளதாரர்களுக்கு மிகவும் முக்கியமான காலம் என்பதே இந்த ஜனவரி முதல் மார்ச் மாதமாகத் தான் இருக்கும். ஏனெனில் மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்களின் சம்பளத்துக்கான வருமான வரியை, நிறுவனங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து விடுவார்கள், இதனால் அவர்களின் சம்பளம் வெகுவாக குறைந்துவிடும்.

 பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் முடிந்தது - நிர்மலா சீதாராமன்..! பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் முடிந்தது - நிர்மலா சீதாராமன்..!

வரி சேமிப்பு திட்டம்

வரி சேமிப்பு திட்டம்

இதை தவிர்க்கும் விதமாக பலரும் கடைசி நேரத்தில் வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களை தேடுவார்கள். பொதுவாக முதலீடு என செய்யும்போது இது போன்ற வரி சலுகைகள் கிடைக்குமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் வரியை சேமிக்க தனியாக முதலீடு செய்யாமல் ஏற்கனவே செய்த திட்டங்கள் மூலமும் வரி சலுகை பெறலாம்.

 பயணங்களுக்கு விலக்கு

பயணங்களுக்கு விலக்கு

உங்களின் அடிப்படை சம்பளம் முழுமைக்கும் வரி விதிக்கப்படும்.

இதே அகவிலைப்படிக்கும் வரி விதிக்கப்படும்.

நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால், அகவிலைப்படி நிபந்தனைகளின் அடிப்படையில் உங்களுக்கு வரி விலக்கு உண்டு.

LTA: இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது நீங்கள் வரி விதிப்பில் இருந்து விலக்கு பெறலாம். எனினும் 4 ஆண்டுகளில் 2 பயணங்களுக்கு விலக்கு உண்டு.

குழந்தைகளின் கல்வி
 

குழந்தைகளின் கல்வி

குழந்தைகளின் கல்வி மற்றும் விடுதி செலவினங்கள்- அதிகபட்சமாக இரு குழந்தைகளுக்கு சலுகை பெற முடியும். இதில் குழந்தைகளின் கல்விக்காக 2400 ரூபாய் அலவன்ஸூம், குழந்தைகளின் விடுதி செலவுக்காக 7200 ரூபாயும் பெற முடியும்.

HRA: பொதுவாக HRA என்பது மூன்று விதமாக கொடுக்கப்படுகின்றது. இதில் மெட்ரோ நகரங்களில் வசிக்கும் நபர்களுக்கு HRA 50%மும், மற்றவர்களுக்கு 40%மும், மூன்றாவது பிரிவில் உங்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி உட்பட 10% கழித்தால் உண்மையான வாடகை விகிதமானது செலுத்தப்படுகின்றது.

 

தொழில்முறை வரி

தொழில்முறை வரி

Standard Deduction: உங்கள் மொத்த சம்பள் வருவாயில் இருந்து 50,000 ரூபாய் விலக்கினை பெறலாம்.

தொழில்முறை வரி: தொழில்முறை வரி என்பது தனியார் நிறுவன ஊழியர்கள் அல்லது பொதுவாக சம்பளம் வாங்குபவர்களால் செலுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 276 இன் பிரிவு (2) தொழில் வரி அல்லது தொழில் மீதான வரியை வசூலிப்பதற்கும் வசூலிக்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்குகிறது.

 பிரீமியத்துக்கு வரி விலக்கு

பிரீமியத்துக்கு வரி விலக்கு


80சிசிடி பிரிவின் கீழ் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகையில் 50,000 ரூபாய் வரை ஆண்டுக்கு வரி விலக்கு பெறலாம்.

80டி பிரிவின் கீழ் மெடிக்ளைம் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு வரி விலக்கு உண்டு. பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு செலுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் கூடுதலாக 25,000 ரூபாய் வரை விலக்கு பெறலாம். பிரிவு 80D கீழ். ஆனால், உங்கள் பெற்றோரில் யாரேனும் அல்லது இருவருமே மூத்த குடிமக்களாக இருந்தால் (60 வயது மற்றும் அதற்கு மேல்), நீங்கள் வருடத்திற்கு 50,000 ரூபாய் வரை வரிச் சலுகையைப் பெறலாம்.

பிற வரி சலுகைகள்

பிற வரி சலுகைகள்

80இ- ன் கீழ் கல்வி கடன் வட்டி திருப்பிச் செலுத்துதலுக்கு வரி சலுகை பெறலாம்.

80 சி - ELSS, EPF, PPF, வீட்டுக் கடன் போன்ற பல திட்டங்கள் மூலம் வரிச்சலுகை பெறலாம்

80டிடி: 80டிடி என்பது வரி செலுத்துவோர் அவர்களின் பெற்றோர் அல்லது பிற கார்டியன்கள் - மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினராக கொண்டிருந்தால், அவர்களின் மருத்துவ சிகிச்சை, பயிற்சி மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கவனித்துக்கொள்வதற்காக நிவாரணம் அளிக்கும் ஒரு பிரிவாகும். இதில் பாதுகாவலரின் கீழ் மனைவி, குழந்தைகள், பெற்றோர், சகோதர - சகோதரிகளும் அடங்குவர்.

வீட்டுக் கடனுக்கு வரி சலுகை

வீட்டுக் கடனுக்கு வரி சலுகை

 

80ஜி: குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிவாரண நிதிகளுக்கு அளிக்கப்படும் பங்களிப்புகளை 80G என எளிதாக வரி விலக்கு கோரலாம்.

வீட்டுக் கடன் மீதான வட்டிக்கான பிரிவு 24 வருமான வரி விலக்கு: 2 லட்சம் வரை விலக்கு கோரலாம். நீங்கள் கடன் பெற்ற நிதியாண்டின் இறுதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் வீடு கட்டப்படவில்லை என்றால், ரூ. 30,000 மட்டுமே கழித்தல் என்று கோர முடியும். வீடு காலியாக இருந்தாலும் கூட நீங்கள் அதே தொகையான வீட்டுக் கடன் வரி நன்மை கோரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Important 10 tips to reduce your income tax

Important 10 tips to reduce your income tax
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X