உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க இது தான் சரியான நேரம்.. குறைவான வட்டியில் வீட்டுக் கடன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவிருக்கும் பண்டிகை காலத்தினை ஒட்டி பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன. ஆக இந்த பண்டிகை காலத்தோடு சேர்த்து, உங்கள் கனவு இல்லத்தையும் கட்ட இது நல்ல வாய்ப்பு எனலாம்.

சொந்த வீடு என்பது அனைவருக்கும் கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான நிதியினை கையில் வைத்துக் கொண்டு, இந்த ஆசையை நிறைவேற்றுவது இயலாத காரியம்.

ஆனால் இதற்கு பலருக்கும் உதவிகரமாக இருப்பது வீட்டுக் கடன் தான். அதிலும் தற்போது வரலாறு காணாத அளவு வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில், இது இன்னும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் அசத்தல் பரிந்துரை.. லாபம் கிடைக்க இந்த 10 பங்குகளை வாங்கலாம்..! நிபுணர்களின் அசத்தல் பரிந்துரை.. லாபம் கிடைக்க இந்த 10 பங்குகளை வாங்கலாம்..!

வீட்டு கடன் வட்டிs குறைவு

வீட்டு கடன் வட்டிs குறைவு

வீட்டு என்றவுடனே பல சவாலான விஷயங்கள் உள்ளன. ஆனால் அதில் முதலிடத்தில் இருப்பது நிதி பிரச்சனை தான். கொரோனாவினால் சரிந்துள்ள பொருளாதாரத்தினை மீட்கும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது.

கோடக் மகேந்திராவில் வட்டி

கோடக் மகேந்திராவில் வட்டி

அந்த வகையில் இன்று எந்த வங்கி குறைவான வட்டியில் கடன் வழங்குகின்றது. எந்த வங்கியில் வாங்க தற்போது சரியான நேரம், மற்ற வங்கிகளில் என்ன நிலவரம். எங்கு குறைந்த வட்டி, வாருங்கள் பார்க்கலாம்.
வரவிருக்கும் விழாக்கால பருவத்தினையொட்டி, கோடக் மகேந்திரா வங்கி வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. இது அதன் முந்தைய வட்டி விகிதத்தில் இருந்து 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. தற்போது புதிய வட்டி விகிதத்தின் படி வட்டி விகிதம் 6.50% என்ற விகிதத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.

மற்ற வங்கிகளில் என்ன நிலவரம்
 

மற்ற வங்கிகளில் என்ன நிலவரம்

இதே பஞ்சாப் & சிந்த் வங்கி (Punjab & Sind Bank) - வருடத்திற்கு வட்டி விகிதம் 6.65%
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LIC Housing Finance) - 6.66%
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) - 6.70%
டாடா கேப்பிட்டல் ஹவுசிங் பைனான்ஸ் (Tata Capital Housing Finance) - 6.70%
ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) - 6.75%
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) - 6.75%
பஜாஜ் பின்செர்வ் (Bajaj Finserv) - 6.75%
பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) - 6.75%
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) - 6.80%
யூனியன் பாங்க் ஆப் இந்தியா (Union Bank of India) - 6.80%
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) - 6.85%
பாங்கு ஆப் இந்தியா (Bank of India) - 6.85%
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி (IDFC First Bank) - 6.90%
ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank) - 6.90%
கனரா வங்கி (Canara Bank) - 6.90%
யூகோ வங்கி (UCO Bank) - 6.90%
ஹெச்.எஸ்.பி.சி வங்கி (HSBC Bank) - 6.90%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) - 7.05%
கரூர் வைஷ்யா வங்கி (Karur Vysya Bank) - 7.15%
ஜே & கே வங்கி (J&K Bank) - 7.20 %
சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank) - 7.25 %
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் (PNB Housing Finance) - 7.35 %
ஸ்டார்ண்டர்ட்டு சார்டர்டு வங்கி (Standard Chartered Bank )- 7.49%
கர் நாடகா வங்கி (Karnataka Bank) - 7.50
ஃபெடரல் வங்கி (Federal Bank )- 7.65
ஃபுல்லர்டன் (Fullerton Grihashakti) - 7.99 %
ஐ.ஐ.எஃப்.எல் (IIFL) - 8.20%
டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) - 8.75%
ஸ்ரீ ராம் ஹவுசிங் பைனான்ஸ் (Shriram Housing Finance) - 8.90%
யேஸ் வங்கி (YES Bank ) - 8.95%
ஆதித்யா பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (Aditya Birla Housing Finance Ltd). - 9.00%

இது சரியான நேரம்

இது சரியான நேரம்

இந்த சமயத்தில் வங்கிகளும் மக்கள் மத்தியில் தேவையினை ஊக்குவிக்கும் பொருட்டு, தொடர்ந்து பல சலுகைளை வாரி வழங்கி வருகின்றன. பல முன்னணி வங்கிகளிலும் தற்போது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. கூடவே விற்பனை இல்லாமல் டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறையில், தற்போது விலையும் சற்று குறைந்துள்ளது. ஆக மொத்தத்தில் உங்கள் கனவு இல்லத்தை கட்ட இது தான் சரியான நேரம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s Home loan interest rates all time low: is it a best time to buy a home?

Many of banks started to giving offer and providing concession of home loan.
Story first published: Saturday, September 11, 2021, 19:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X