வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் நியூஸ்.. டெல்லி உயர் நீதிமன்றம் சொன்ன விஷயத்தை பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சில நேரங்களில் உங்களின் வாகன இன்சூரன்ஸ் தொடர்பான க்ளைம் செய்யாமல் நிராகரித்திருக்கலாம். அப்போது ஏன் க்ளைம் செய்யவில்லை? இனி என்ன செய்வது இப்படி சிலர் புலம்புவதை பார்த்திருக்கலாம். ஏன் சிலர் இதனை அனுபவித்திருக்கலாம்.

 

இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இன்சூரன்ஸ் எடுக்கும்போதே இது என்னென்ன அம்சங்களுக்கு க்ளைம் செய்ய முடியும். எதற்கெல்லாம் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆக ஒரு வாகனத்திற்கு இன்சூரன்ஸினை வாங்கும்போதே, அதன் நிபந்தனைகள் என்ன? விதிமுறைகள் என்ன? என்பதை முழுமையாக தெரிந்து கொள்வது மிக அவசியம். ஏனெனில் நீங்கள் செய்யும் சிறு தவறு கூட, உங்களது எதிர்கால கோரிக்கையை நிராகரிக்க வழிவகுக்கலாம்.

பிரதமர் மோடியின்  டிரில்லியன் பொருளாதார கனவு.. இலக்கை எட்ட 8% வளர்ச்சி அவசியம்.. ! பிரதமர் மோடியின் டிரில்லியன் பொருளாதார கனவு.. இலக்கை எட்ட 8% வளர்ச்சி அவசியம்.. !

இழப்பீடு கொடுக்கணும்

இழப்பீடு கொடுக்கணும்

வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆறுதலை கொடுக்கும் விதமாக டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை கொடுத்துள்ளது. அது உங்களது அனுமதியின்றி உங்கள் வாகனத்தை வேறு யாரேனும் திருடி சென்று அனுமதியின்றி ஓட்டிச் சென்றாலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

விபத்தில் பாதிகப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு

விபத்தில் பாதிகப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு

இது குறித்து நீதிபதி சஞ்சீவ் சச்தேவா,வேண்டுமென்றே விதி மீறப்பட்டதை காண முடிந்தால், இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டினை தவிர்க்கலாம்.

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இந்த முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது எதிரானதாக இருக்கும். ஆக அதனை தவிர்க்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதனை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 உரிமையாளரின் தவறு இல்லை
 

உரிமையாளரின் தவறு இல்லை

ஒரு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனம் திருடப்பட்டால், அல்லது விபத்து ஏற்பட்டால் அது வாகன உரிமையாளரின் தவறு இல்லை எனவும் கூறியுள்ளது.

வாகன ஓட்டுனருக்கு எதிரான உரிமைகளை வழங்கும் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து யுனைடெட் இன்சூரன்ஸ் தாக்கல் செய்த (மேல் முறையீட்டு மனு) மனுவில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனம் திருடப்பட்டது

வாகனம் திருடப்பட்டது

வாகனம் திருடப்பட்டதாகவும், ஒரு தொழில் முறை திருடனால் ஓட்டப்பட்டதாகவும், இதனால் நிறுவனத்திற்கு தொகையை செலுத்த எந்த பொறுப்பும் இல்லை என இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிட்டது.

இதற்கிடையில் வாகனம் திருடிச் செல்லப் பட்டிருப்பதையும், இது குறித்து காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டதையும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

இழப்பீடு வழங்கணும்

இழப்பீடு வழங்கணும்

ஆக இதற்கிடையில் தான் வாகனம், உரிமையாளரின் அனுமதியின்றி திருடப்பட்டு, ஓட்டி செல்லப்பட்டுள்ளது. இதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் க்ளைம் செய்ய முடியாது என கூறியுள்ளது ஏன்? என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.

மேலும் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்கவும், இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உத்தரவிட்ட தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

insurance company cant avoid liability if vehicle stolen and unauthorized driven

insurance company cant avoid liability if vehicle stolen and unauthorized driven/வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் நியூஸ்.. டெல்லி உயர் நீதிமன்றம் சொன்ன விஷயத்தை பாருங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X