டெல்லி: நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
சொல்லப்போனால் பலர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு சாரர் வேலையிருந்து வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும் இருந்து வருகின்றனர். ஆக இதற்கு மத்தியில் பொருளாதாரம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்வதை யோசிப்பதாக ஒர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உண்மையில் இதற்கு சிறந்த உதாரணம் தான் தங்கம் இறக்குமதி. அரசு தங்கம் இறக்குமதியினை கட்டுப்படுத்த பலவேறு அதிரடியான நடவடிக்கையினை எடுத்து வந்தது. ஆனால் அப்போதெல்லாம் குறையாத தங்கம் இறக்குமதியானது, கொரோனாவின் காரணமாக வரலாறு காணாத அளவு சரிந்து காணப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக லைஃப் இன்சூரன்ஸ் துறையானது பெருத்த அடி வாங்கியுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு ஆதரமாக கடந்த முதல் காலாண்டில் முதல் ஆண்டு பிரிமீயம் செலுத்துவது 18.6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முதல் ஆண்டு பிரிமீயம் வசூலானது 18.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 49,335 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக கேர் ரேட்டிங்ஸ் கணிப்புகள் கூறுகின்றன. இதே ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் வளர்ச்சியானது 12.9 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 8.8 டிரில்லியன் ரூபாயாக வீழ்ச்சி பிரிமீயம் வருவாய் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 10 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 17.6 சதவீதம் அதிகமாக இருந்தது.
முதல் ஆண்டு பிரிமீயம் வருவாயானது ஏப்ரல் மற்றும் மே மாததில் 32.6% மற்றும் 27.9% வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இது ஜூன் மாதத்தில் சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இந்த துறையானது சற்று வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளதை காட்டுகிறது.
நாடு முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் ஆண்டு பிரிமீயம் வசூலானது குறைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முதல் ஆண்டு பிரிமீயம் வசூலானது 18.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 49,335 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 60,637 கோடி ரூபாயாக வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 18.5% வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 81.2% வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே தனியார் நிறுவனங்கள் 19.2% வீழ்ச்சி கண்டுள்ளன. இது முந்தைய ஆண்டு 32% வளர்ச்சி கண்டு இருந்தன.