இந்திய காப்பீடு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏஐ (IRDAI) தனி நபர் விபத்து காப்பீட்டு திட்டத்திற்கான புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து பொது மற்றும் தனியார் இன்சூரன்ஸ் காப்பீட்டாளர்கள் ஏப்ரல் 1, 2021 முதல், இந்த புதிய வழிகாட்டுதல் அடிப்படையில் பாலிசிகளை வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
ஐஆர்டிஏஐ-வின் புதிய விதிமுறைகளின் படி, அறிமுகப்படுத்தபடும் இந்த பாலிசிகள் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய் காப்பீடும், அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரையிலும் காப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் மூலம் தோனிக்கு பணமழை.. 2008 முதல் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? #MSD

பாதுகாப்பான க்ளைம்
கட்டுப்பாட்டாளர் இதன் மூலம் ஒரு நிலையான தயாரிப்பை இந்த துறை முழுவதும், பொதுவான பாதுகாப்புடன் செயல்படுத்தும் ஒரு முயற்சியினை மேற்கொண்டுள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இறப்பு அல்லது விபத்து காரணமாக நிரந்தரமாக ஊனமுற்றால், காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 100% சமமான தொகை செலுத்தலாம் என ஐஆர்டிஏஐ கூறியுள்ளது. நிரந்தமாக ஊனமுற்றாலோ அல்லது பாதிப்புக்கு ஏற்ப மாறும் என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு உண்டு
எடுத்துக்காட்டாக முழு கால் அல்லது கையை இழந்தால் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் செலுத்த வேண்டும் என இந்த வரையறை முன்மொழிகிறது. ஆக ஐஆர்டிஏஐ-வின் இந்த புதிய வரையறையில் இறப்பு அல்லது நிரந்தரமாக ஊனமுற்றோற்கான பாதுகாப்பு கட்டாயமாக இருக்கும். ஆனால் காப்பீட்டாளர்கள் அடிப்படை திட்டத்துடன், விருப்ப திட்டங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

வயது தகுதி
விபத்து காரணமாக மருத்துவமனையில் குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்து அனுமதிக்கப்பட்டால், அடிப்படை தொகையில் 10 சதவீதம் வரை வழங்கப்படும். அதோடு இதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும், அதிகபட்ச வயது 70 ஆண்டுகள் எனவும் வைக்கப்பட்டுள்ளது. அதே பாலிசிதாரர் உங்களுக்கு ஏற்றவாறு காலாண்டு அல்லது அரையாண்டு, மாதாந்திர பிரீமியங்களை செலுத்தலாம்.

நிறுவனங்களுக்கும் சுதந்திரம் உண்டு
எனினும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விலையை நிர்ணயிக்கும் சுதந்திரம் உண்டு என்றும் ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
ஐஆர்டிஏஐ இந்த புதிய வரைவு மூலம் அனைத்து பாலிசிகளையும் தரப்படுத்த முயற்சிக்கிறது. முன்னதாக ஹெல்த் பாலிசி, அதன் பிறகு டெர்ம் திட்டம், தற்போது தனி நபர் விபத்து காப்பீடு என பலவற்றில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

பரிந்துரை என்ன? கருத்து என்ன?
இது உண்மையில் ஒரு வரவேற்கதக்க விஷயம் தான். ஏனெனில் இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்.
ஐஆர்டிஏஐ இந்த வரைவு திட்டத்தினை பற்றிய கருத்துகளையும் பரிந்துரைகளையும் டிசம்பர் 18 வரை கூறலாம் என்று கூறியுள்ளது. ஆக நீங்களும் உங்களது கருத்துகளை படித்து விட்டு கூறுங்களேன்.