பங்குசந்தையை விட பிட்காயின் சிறந்ததா..? உண்மை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் தலைமுறையினர் மத்தியில் தற்போது மிகவும் முக்கிய முதலீட்டுத் தளமாக மாறியுள்ள கிரிப்டோகரன்சியில் பங்குச்சந்தையை விடவும் அதிகம் லாபம் கிடைக்கும் காரணத்தால் பலர் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்கின்றனர்.

இது மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டாளர்களும் சில சதவீத முதலீட்டை பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.

ஆனால் இதேவேளையில் சீனா உட்படப் பல நாடுகள் கிரிப்டோ வர்த்தகம் மற்றும் உற்பத்தியை மொத்தமாகத் தடை செய்து வரும் வேளையில் அமெரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகள் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்தவும், முறைப்படுத்தவும் முயற்சி செய்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்துவதைக் காட்டிலும் பிட்காயினில் முதலீடு செய்வது சிறந்ததா என முக்கியமான கேள்வி அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

பிட்காயின் லாபம்

பிட்காயின் லாபம்

நடப்பு ஆண்டில் பிட்காயின் மீதான முதலீட்டில் கிடைத்த லாபம் அனைத்துத் தரப்பு முதலீட்டு ஓரம் கட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பிட்காயின் மீதான முதலீட்டில் 291 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. ஆனால் இதேவேளையில் அமெரிக்காவின் முக்கியப் பங்குச்சந்தை குறியீடான டாவ் ஜோனஸ் குறியீடு 24.35 சதவீதம் வரையிலான உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது.

பங்குகள் பிட்காயின்

பங்குகள் பிட்காயின்

சரி முதலில் பங்குகளுக்குப் பிட்காயினுக்கும் என்ன வித்தியாசம் என்பதைத் தெரிந்துக்கொள்ளவோம். ஒரு பங்கு என்பது ஒரு நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்து பங்குகளாகப் பிரிக்கப்படும். நிறுவனத்தில் லாபம் மற்றும் வர்த்தகம் உயரும் போது பங்குகளின் மதிப்பும் உயரும். இது தான் அடிப்படை, இதேபோல் அந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியின் அடிப்படையில் பங்குகளின் விலையும் உயரும்.

3 முக்கியக் காரணிகள்

3 முக்கியக் காரணிகள்

பிட்காயின் என்பது ஒரு டிஜிட்டல் சொத்து, இதன் விலை 3 முக்கியக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. டிமாண்ட், சப்ளை, அடாப்ஷன் ஆகியவற்றை அடிப்படையில் தான் பிட்காயின் மதிப்பு உயர்கிறது. இதேபோல் பங்குகள் மற்றும் பிட்காயின் ஆகிய இரண்டுமே டிஜிட்டல் முறையில் சேமிக்கவும், டிஜிட்டல் முறையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

பங்கு விலை நிர்ணயம்

பங்கு விலை நிர்ணயம்

இப்போது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த நிறுவனத்தின் அடிப்படை நிதிநிலை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்து முடிவு எடுக்க முடியும். ஆனால் பிட்காயினை வாங்க வேண்டும் என்றால் ஆய்வு செய்வதற்கு எவ்விதமான தரவுகளும், இல்லை அதேபோல் பிட்காயின் ஒரு பிசிக்கல் அசர்ட்-ம் இல்லை. இது புதிய முதலீட்டாளர்களுக்கும் பெரும் முதலீட்டாளர்களும் முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

டீசென்டரலைஸ்டு கட்டமைப்பு

டீசென்டரலைஸ்டு கட்டமைப்பு

பிட்காயினில் டீசென்டரலைஸ்டு கட்டமைப்பைச் சார்ந்து இருக்கிறது, அதாவது யார் வேண்டுமானாலும் பிட்காயினை யார் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உருவாக்க முடியும். ஆனால் பங்குகள் அப்படி இல்லை தத்தம் நிறுவனம் மட்டுமே அரசு அமைப்புகளிடம் ஒப்புதல் பெற்று உருவாக்க முடியும். இதனால் பிட்காயினை விடவும் பங்குகள் மிகவும் பாதுகாப்பானது.

திருட்டுப் பாதிப்பு

திருட்டுப் பாதிப்பு

இவை அனைத்திற்கும் மேலாகப் பிட்காயின் எப்போது வேண்டுமானாலும் ஹேக் அதாவது ஆன்லைன் மூலம் திருடப்படலாம். ஆனால் பங்குச்சந்தை என்பது முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பில் இகுக்கும் காரணத்தால் டிஜிட்டல் திருட்டு என்பது சாத்தியமற்றது. இதனால் பிட்காயின் அல்லது பிற கிரிப்டோ கரன்சியை விடவும் பங்குகள் மிகவும் பாதுகாப்பானது.

விலை தீர்மானம்

விலை தீர்மானம்


மேலும் ஒரு பங்கின் விலையைத் தீர்மானிக்க அல்லது கணிக்கச் சில காரணிகள் உள்ளது, ஆனால் பிட்காயினுக்கு அப்படி ஒன்று இல்லை. ஆனால் இதேவேளையில் டாலர், ரூபாய், பவுண்ட், யுவான், யூரோ போன்ற நாணயங்களுக்கு இணையாகப் பிட்காயின் வர்த்தகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் (அடாப்ஷன்) பிட்காயின் மதிப்பு வியக்க வைக்கும் அளவிற்கு உயரும். ஆனால் இது சாத்தியமான என்பது ஒரு கேள்வி..? எப்போது இது சாத்தியம்..? என்பது மற்றொரு கேள்வி.

ரிஸ்க் அளவீடு

ரிஸ்க் அளவீடு


பங்கு முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் அளவீட்டை விடவும் பிட்காயின் முதலீட்டில் கூடுதலாக ரிஸ்க் உள்ளது. இதேபோல் ரிஸ்க் அளவீடு பொருத்து லாபம் மற்றும் நஷ்ட அளவீடுகள் மாறுப்படும். மேலும் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சிக்குத் தற்போது உலக நாடுகளில் கலவையான கருத்து இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக முதலீடு செய்ய வேண்டும். மேலும் பங்கு முதலீட்டை காட்டிலும் பிட்காயின் கூடுதல் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இளம் முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.

கிரிப்டோகரன்சி விலை

கிரிப்டோகரன்சி விலை

இந்நிலையில் இன்று உலகின் முன்னணி கிரிப்டோகரன்சியின் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்

பிட்காயின் - 44,906 டாலர் (3.90 சதவீத உயர்வு), எதிரியம் - 3,110.62 டாலர் (3.72 சதவீத உயர்வு), ரிப்பிள் - 0.970941 டாலர் (3.40 சதவீத உயர்வு), கார்டானோ - 2.15 டாலர் (2.94 சதவீத உயர்வு), போல்காடாட் - 29.65 டாலர் (3.40 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.2061 டாலர் (2.33 சதவீத உயர்வு).

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Bitcoin and Altcoins are better than Stocks to invest? What is reality.

Is Bitcoin and Altcoins are better than Stocks to invest? What is reality.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X