தொடந்து முதலீடு குறித்து பல்வேறு வகையான திட்டங்களை பற்றி பார்த்து வருகிறோம். அதில் வரி சலுகை இருந்தால் வருமானம் சராசரியாக ஓரளவுக்கு தான் இருக்கும். லாபம் அதிகம் இருந்தால் வரி சலுகை கிடைக்காது. அப்படி இல்லையேல் பெரியளவில் வருமானம் கிடைக்க நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஒரே திட்டத்தில் கிடைக்குமா? வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாக முதலீடு என்றாலே நிபுணர்கள் நீண்டகால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் பரிந்துரை செய்வார்கள். ஆக அந்த வகையில் இன்று நாம் சில வகையான பண்டுகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.

கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் பண்ட்
ஹைபிரிட் பண்ட்கள் பொதுவாக ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பாதவர்கள் இதனை தேர்வு செய்வார்கள். இந்த பண்டில் நாம் தனித் தனியாக டெப்ட் பண்ட் மற்றும் ஈக்விட்டி பண்ட் என தனியாக செய்யாமல், இரண்டையும் ஒருங்கே செய்ய இந்த திட்டம் ஏதுவான ஒன்றாக இருக்கும். இதில் கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் பண்ட் என்பது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. ஈக்விட்டியில் 10 - 25% மட்டுமே முதலீடு செய்வார்கள். மீத தொகையை கடன் சந்தையில் தான் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் தான் இதில் பாதுகாப்பு அதிகம் எனலாம். எனினும் லாபம் சுமாராகத் தான் இருக்கும்.

பேலன்ஸ்டு பண்ட்
இதே பேலன்ஸ்டு பண்டினை பொறுத்த வரையில் 40 - 60% ஈக்விட்டியில் முதலீடு செய்வார்கள். இதனால் இதில் வருமானமும் அதிகம். அதே அளவு ரிஸ்கும் உண்டு. இது தவிர அக்ரசிவ் பண்ட், டைவர்சிஃபைடு பண்ட் என பல வகையான பண்டுகள் உள்ளன.

இன்டெக்ஸ் பண்ட்
மேற்கண்ட பண்டுகளை காட்டிலும் பெரிதும் கவனம் ஈர்க்கும் ஒரு பண்டு தான் இன்டெக்ஸ் பண்ட், இந்த இன்டெக்ஸ் பண்டுகள் என்பவை பிரபலமான சந்தை குறியீடுகளை பிரதிபலிக்கும் மியூச்சுவல் ஃபண்டாகும். இந்த இன்டெக்ஸ் ஆனது பலவிதமான பங்குகளில் முதலீடு செய்வார்கள்.

வருமானம் அதிகம்
இதனால் இந்த ஃபண்டுகளில் வருமானம் அதிகம். இது பங்கு சந்தையில் முதலீடு செய்ய நேரடியாக முதலீடு செய்வதை போல் லாபம் அதிகம் எனலாம். இதில் செலவினமும் குறைவு. ஆக இது உங்களது வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
இன்டெக்ஸ் ஃபண்ட்கள் மியூச்சுவல் ஃபண்ட்களைப் போலவே செயல்படும். அதாவது, பங்குகளில் இல்லாமால், நேரடியாக அந்த பங்குச்சந்தையின் குறியீடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு வகை ஃபண்ட் ஆகும். இவை சென்செக்ஸ் அல்லது நிஃப்டி போன்ற பிரபலமான இன்டெக்ஸ்களைப் பின்பற்றியே செயல்படுகின்றன.

எது பெஸ்ட்
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதற்கான ரிஸ்க்கை எதிர்கொள்ள விரும்பாதவர்கள், பங்கு சந்தைக்கு புதியவர்கள் என பலரும் இந்த இன்டெக்ஸ் பண்டை தேர்வு செய்யலாம்.
நீண்ட கால இலக்குகளுக்கான குரோத் தேர்வு மற்றும் வழக்கமான வருமானத்திற்கான டிவிடென்ட் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை இன்டெக்ஸ் ஃபண்ட்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன.

கட்டணம் குறைவு
இன்டெக்ஸ் பண்டில் ஒவ்வொரு மாதமும் எஸ் ஐ பி மூலம் முதலீடு செய்து வரும் வாய்ப்பு உண்டு. செலவு விகிதம் என்பது இன்டெக்ஸ் பண்ட்களுக்கான கட்டணம் என்பது மற்றவற்றுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவானது. மொத்த சொத்துகளில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே இதற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது போன்ற பண்டுகள் நிதி செயலற்ற முறையில், அதாவது பேசிவ் முறையில் நிர்வகிக்கப்படுவதால், இதற்கு பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவைப்படுவது இல்லை. இதனால், இன்டெக்ஸ் ஃபண்ட்களுக்கு நிதி மேலாண்மை செலவுகள் என்பது பொதுவாக குறைவாகவே இருக்கும்.

வருமானம் அதிகம்
எனினும் இண்டெக்ஸ் பண்டில் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும், நீண்ட கால அடிப்படையில் இருக்க வேண்டும். இதில் செய்யப்படும் முதலீடு நேரடியாக, குறியீடுகளில் செய்யப்படுவதால், அதில் குறுகிய காலத்தில் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. 7 - 10 ஆண்டுகளுக்கு இதில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு இருந்தால், கணிசமான வருமான கிடைக்கும். இதி வரி எனும்போது நீண்டகால மூலதன ஆதாய வரி, குறுகிய கால ஆதாய வரி உண்டு. ஆக உங்களுக்கு போர்ட்போலியோவுக்கு எது உகந்தது? அதனை சரியான ஆலோசனையுடன் தேர்வு செய்யலாம்.