கிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரெடிட் கார்டினால் நன்மையா? தீமையா? என்றால் நன்மை தான். அதனை சரியாக பயன்படுத்தும் போது. ஆனால் அது உங்களால் முடியாது என்றால், நிச்சயம் அது உங்களுக்கு பிரச்சனை தான்.

 

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வலை வீசி வாடிக்கையாளர்களை தேடி வருகின்றன. ஆனால் இந்த மாயவலையில் சிக்குபவர்களில் பலர் பாதிக்கப்படுவது உண்மையே. அதுவும் முதல் முறையாக பயன்படுத்துபவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

கிரெடிட் கார்டு 45 முதல் 50 நாட்கள் வரைக்கும் எந்த விதமான வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதன்பிறகு தாமதித்து செலுத்தினால் பலமடங்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். அந்த வகையில் கிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் எந்தெந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடும் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

தாமதமாக செலுத்தினால் எவ்வளவு கட்டணம்?

தாமதமாக செலுத்தினால் எவ்வளவு கட்டணம்?

உண்மையில் நம்மில் பலரும் செய்யும் மிகப்பெரிய நிதி ரீதியான தவறே இதுவாகத் தான் இருக்கும். நீங்கள் தொடர்ந்து கிரெடிட் கார்டு பில்களை தாமதமாக செலுத்துகிறீர்கள். என்னென்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும் வாருங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணத்தினை செலுத்தும்போதும், அபராதமாக 1,300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இது உங்களது கட்ட வேண்டிய நிலுவையை பொறுத்து மாறுபடும். பொதுவாக மொத்த கட்டத்தில் 5% இந்த கட்டணமானது வசூலிக்கப்படும்.

நிலுவையை முழுவதும் செலுத்தாவிட்டல் எவ்வளவு கட்டணம்?

நிலுவையை முழுவதும் செலுத்தாவிட்டல் எவ்வளவு கட்டணம்?

நீங்கள் உங்களது கிரெடிட் கார்டுகளுக்கான பாக்கித் தொகையை முழுவதுமாகச் செலுத்தாவிட்டால் தான் இந்த வட்டி உங்களிடம் பிடித்தம் செய்யப்படும். நீங்கள் அவ்வாறு முழுவதும் செலுத்தத் தவறினால் அந்த தொகைக்கு ஏற்ப சுமார் 23 - 49 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படும். ஆக சரியான நேரத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய நேரத்தில் சரியான நேரத்தில் செலுத்தினால் இந்த கட்டணங்களை தவிர்க்கலாம்.

நிதிக்கட்டணம் உண்டு
 

நிதிக்கட்டணம் உண்டு

கிரெடிட் கார்டு வைத்திருப்பர்வகள் அனைவரிடமும் இந்த நிதிக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். அதேபோல, ஒரு வங்கியில் கிரெடிட் கார்டின் வகையைப் பொறுத்தும் இந்த கட்டணங்கள் மாறுபடும். ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் நிதிக் கட்டணம் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

கிரெடிட் ஸ்கோர் குறையும்

கிரெடிட் ஸ்கோர் குறையும்

உங்களது கிரெடிட் கார்டு தொகையை சரியான நேரத்தில் கட்டாத பட்சத்தில், அது உங்களின் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பினை ஏற்படுத்தும். இது நீங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும். ஏனெனில் கிரெடிட் ஸ்கோரில் உங்களது கிரெடிட் கார்டு பணத்தினை எப்படி செலுத்தியுள்ளீர்கள் என்பதும் இருக்கும். இது வருங்காலத்தில் நீங்கள் கடன் வாங்குபோதும் பாதிக்கும்.

கிரெடிட் கார்டு கிரேஸ் பீரியட்

கிரெடிட் கார்டு கிரேஸ் பீரியட்

உங்களது கிரெடிட் கார்டு பரிவர்த்தனை செய்த தேதி மற்றும் அதனை செலுத்த வேண்டிய தேதிக்கும் இடைப்பட்ட காலத்தினை கிரெஸ் பீரியட் என்பர். இந்த காலம் பொதுவாக 18 நாள் 55 நாட்கள் வரையில் இருக்கலாம், இந்த காலகட்டத்திற்கு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் வட்டியை ஈர்க்காது. ஆனால் அதனை தாண்டி விட்டால் அதற்கும் கட்டணம் உண்டு. நீங்கள் தாமதமாக செலுத்தும் போது இந்த கிரேஸ் பீரியட் ரத்து செய்யப்படலாம். அதோடு நீங்கள் திரும்ப செலுத்தும் வரையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

சலுகைகள் ரத்து செய்யப்படலாம்

சலுகைகள் ரத்து செய்யப்படலாம்

உங்களது கிரெடிட் கார்டினை சரியாக பயன்படுத்தும்போது, உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. அதோடு பற்பல சலுகைகளும் இருக்கும். ஆனால் நீங்கள் தாமதமாக செலுத்தும்போது, உங்களுக்கும் கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படலாம். ஏன் பிற்காலத்தில் உங்களுக்கு கடன் கொடுக்க கூட யோசிக்கலாம். அப்படியே கிடைத்தாலும் வட்டி அதிகமாக இருக்கும்.

பிரச்சனைகள் ஏராளம்

பிரச்சனைகள் ஏராளம்

இப்படி பல பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள கூடும். ஆக கிரெடிட் கார்டினை சரியான முறையில் பயன்படுத்தினால் அது லாபம் தான். தவறும் பட்சத்தில் இது போன்ற பிரச்சனைகளோட, பல விதமாக கட்டணங்களையும் செலுத்த வேண்டியிருக்கும். இது பற்றி ஏற்கனவே நாம் https://tamil.goodreturns.in/news/7-credit-card-fees-and-charges-you-must-be-aware-of-that-charges/articlecontent-pf105506-021195.html என்ற கட்டுரையில் படித்திருக்கிறோம். ஆக கிரெடிட் கார்டினை வாங்கும்போதே ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து வாங்குவது மிக நல்லது. சரி கார்டினை வாங்கி வைத்து விட்டு உபயோகப்படுத்தாமல் இருந்தால் பிரச்சனை இல்லையே என்று கூறுபவரா நீங்கள். முதலில் கட்டணம் இல்லை என கொடுப்பார்கள். முதல் ஆண்டிற்கு மட்டும் கட்டணம் இல்லாமல் கொடுத்து விட்டு, பிறகு இரண்டாவது வருடத்தில் இருந்து கட்டணம் வசூலிக்கலாம். ஆக அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Key adverse impact of irregular credit card payments: check details

Credit card updates.. Key adverse impact of irregular credit card payments: check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X