வீட்டுக் கடன் வாங்க இது தான் சரியான நேரம்.. கோடக் வங்கி கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020, 2021ம் ஆண்டுகளை நிச்சயம் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாகவே இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு மக்களை இந்த கொரோனா பாடாய் படுத்தியுள்ளது எனலாம்.

 

கொரோனாவோடு சேர்ந்து வேலையின்மை, வருவாய் இழப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக ஈடு செய்ய முடியாத உயிர்கள் என பலவற்றையும் தன்னோடு எடுத்துக் கொண்டுள்ளது கொரோனா.

தற்போதும் கூட மூன்றாவது அலை வருமா? மீண்டும் லாக்டவுன் வருமா? வந்தால் என்ன செய்வது? ஏற்கனவே வாங்கிய கடன் கட்ட முடியவில்லை. வீட்டு வாடகை சரியாக கட்ட முடியவில்லை. குழந்தைகளின் கல்விகள் பாழாய்போய் விட்டது. அடுத்து என்ன செய்யலாம்? இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் ஏழைகள், நடுத்தர மக்கள் உள்ளனர்.

ரூ.1 கோடி கார்ப்பஸ் இலக்கினை அடைய என்ன செய்யலாம்.. எவ்வளவு முதலீடு.. எததனை ஆண்டுகள்..!

சொந்த வீடு அவசியம்

சொந்த வீடு அவசியம்

இப்படியிருக்கையில் வேலையிழந்தும் மாத சம்பளம் இல்லாமல், வீட்டு வாடகை கட்ட முடியாமல் அவதி பட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் பலர். அப்படி பட்டவர்கள் பலரும் இந்த கொரோனா காலத்தில் நினைத்த விஷயம், எப்பாடுபட்டாவது சொந்த வீடு என்பது வாங்கியாக வேண்டும். கட்ட வேண்டும் என நினைத்திருப்பர். அபப்டி நினைத்தவர்களுக்கு உண்மையில் இது சரியான நேரம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா காராணமாக நலிந்து போன துறைகளில் ஒன்று ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று.

வட்டியும் குறைவு

வட்டியும் குறைவு

விற்பனை இல்லாமல் டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறையில், தற்போது விலையும் சற்று குறைந்துள்ளது. அதோடு தற்போது ரெப்போ விகிதம் குறைவாக உள்ள நிலையில், வங்கிகளில் வட்டி விகிதமும் வரலாறு காணாத அளவு மிக குறைவாகவே உள்ளது. ஆக உங்கள் கனவு வீட்டினை நனவாக்க இதுவே சரியான தருணம் எனலாம்.

கனவு நனவாக வீட்டுக் கடன்
 

கனவு நனவாக வீட்டுக் கடன்

அதோடு வங்கிகளும் மக்கள் மத்தியில் தேவையினை ஊக்குவிக்கும் பொருட்டு, தொடர்ந்து பல சலுகைளை வாரி வழங்கி வருகின்றன. ஆக நம் உணர்வுகளில் கலந்துள்ள வீட்டுக் கனவினை நனவாக்க, வீட்டுக் கடன் என்பது பலருக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் பல முன்னணி வங்கிகளிலும் தற்போது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன.

கோடக் மகேந்திரா வட்டி குறைப்பு

கோடக் மகேந்திரா வட்டி குறைப்பு

அந்த வகையில் தற்போது வரவிருக்கும் விழாக்கால பருவத்தினையொட்டி, கோடக் மகேந்திர வங்கி வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. இது அதன் முந்தைய வட்டி விகிதத்தில் இருந்து 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. தற்போது புதிய வட்டி விகிதத்தின் படி வட்டி விகிதம் 6.50% என்ற விகிதத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. இது முன்னர் 6.65% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்போது வரை?

எப்போது வரை?

இந்த வட்டி விகிதமானது செப்டம்பர் 10 முதல் நவம்பர் 8, 2021 வரையில் அமலில் இருக்கும் என இவ்வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் புதிய வீட்டுக் கடன், வீட்டுக் கடன் டிரான்ஸ்பர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. ஆக இது உண்மையில் வீட்டுக் கடன் வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

பயனுள்ள விஷயம் தான்

பயனுள்ள விஷயம் தான்

எனினும் இந்த வட்டி விகிதமானது அவரவர் கிரெடிட் ஸ்கோரினை பொருத்து இருக்கும் என கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் உங்களது கிரெடிட் ஸ்கோர் என்பது நன்றாக இருக்கும்பட்சத்தில் இது சரியான அம்சம் என்றே கூறலாம். கோடக்கின் டிஜி ஹோம் மூலம் வாடிக்கையாளர்கள் உடனடியாக அப்ளை செய்து கடன் பெற்றுக் கொள்ள முடியும். ஆக இந்த விழாக்கால பருவத்தில் கோடக்கின் இந்த ஆஃபர் மூலம், நிச்சயம் பலரின் வீட்டுக் கனவை நனவாக்க பயனுள்ளதாக இது அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kotak bank cut home loan rates to 6.5% ahead of festival season; its a right time to buy home

Bank latest updates.. Kotak bank cut home loan rates to 6.5% ahead of festival season; its a right time to buy home
Story first published: Thursday, September 9, 2021, 18:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X