LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று வரை இந்திய மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஒன்று LIC.

ஒரு சிறிய கிராமத்தில் வாகனங்கள் போக முடியாத இடத்துக்குக் கூட LIC ஏஜெண்ட் கால் நடையாகப் போய், LIC பாலிசி தொடர்பான சேவைகளை வழங்கிவிட்டு வருவார் என வேடிக்கையாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு LIC இந்தியாவின் கடைக் கோடி மனிதர்கள் வரை பரவி இருக்கிறது.

ஏன் LIC யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறது? அதற்கு முக்கிய காரணங்களில் LIC-ன் க்ளெய்ம் ரேஷியோவும் ஒன்று. தான். 2018 - 19-ல் LIC நிறுவனத்தின் தனி நபர் இறப்பு க்ளெய்ம் விகிதம் 97.79 %. அதே போல குரூப் இறப்பு க்ளெய்ம் விகிதம் 99.68% என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கூட LIC Claim தொடர்பாக ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது LIC.

LIC வசதி

LIC வசதி

இப்போது இந்த கொரோனா பிரச்சனையால், LIC வாடிக்கையாளர்கள் க்ளெய்ம் கோறுவதில் சிரமப்படக் கூடாது என, மெயில் வழியாகவே க்ளெய்ம் செய்யத் தேவையான டாக்குமெண்ட்களை வாங்கிக் கொள்ள முன் வந்து இருக்கிறது. அதை எப்படி, யாருக்கு அனுப்ப வேண்டும். என்ன மாதிரியான டாக்குமெண்ட்களை அனுப்ப வேண்டும்? இந்த வசதி எத்தனை நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மெயில் வழியாக

மெயில் வழியாக

ஆன்லைனில் க்ளெய்ம் செய்யும் வசதி எல்ஐசியில் இருந்தலும், ஓரளவுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிகளைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான் செய்ய முடியும். ஆனால் மெயில் என்பது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயனப்டுத்தும் விஷயமாகிவிட்டது. எனவே தான், வாடிக்கையாளர்கள் மெயில் வழியாக டாக்குமெண்ட்களை சமர்பித்து கொள்ள முன் வந்து இருக்கிறது. இப்படி ஜூன் 30 வரை மெயில் வழியாக க்ளெய்ம் டாக்குமெண்ட்களை அனுப்பலாமாம்.

யாருக்கு அனுப்ப வேண்டும்

யாருக்கு அனுப்ப வேண்டும்

[email protected] என்கிற மெயிலுக்கு தான், நம் க்ளெய்ம் தொடர்பான டாக்குமெண்ட்களை அனுப்ப வேண்டும். உதாரணமாக, நமக்கு சேவை வழங்கும் LIC அலுவலக கிளையின் எண் 435 என்றால் [email protected] என்கிற மெயிலுக்கு நம் டாக்குமெண்ட்களை அனுப்ப வேண்டும் என சொல்கிறது LIC வலைதளம்.

5 MBக்கு மேல் வேண்டாம்

5 MBக்கு மேல் வேண்டாம்

ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களின் அளவு 5 எம்பிக்கு மேல் இருக்கக் கூடாது. டாக்குமெண்ட்களின் சைஸ் 5 எம்பிக்கு அதிகமாக இருந்தால், அதை இன்னொரு மெயிலாக அனுப்பச் சொல்கிறார்கள். அதே போல ஸ்கேன் செய்யும் டாக்குமெண்ட்கள் jpg, pdf போன்ற எளிதில் எந்த கணிணியிலும் படிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். மறக்காமல் உங்கள் மெயிலில் க்ளெய்ம் டாக்குமெண்ட்களை அனுப்பும் போது மொபைல் எண்ணையும் குறிப்பிடச் சொல்கிறார்கள்.

யார் எல்லாம் அனுப்பலாம்

யார் எல்லாம் அனுப்பலாம்

1. பாலிசி நடைமுறையில் இருக்க வேண்டும்.
2. பாலிசி எந்த கிளை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதோ, அங்கு சேவை வழங்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
3. பாலிசி அசைன் செய்யப்பட்டு இருக்கக் கூடாது, பாலிசியை அடமானம் வைத்து கடன் வாங்க இருக்கக் கூடாது.
4. Duplicate பாலிசி வழங்கப்பட்டு இருக்கக் கூடாது
5. Keyman Insurance, Employer-Employee Scheme or MWP Act போன்றவைகளின் கீழ் வழங்கப்பட்டு இருக்கக் கூடாது.

யார் எல்லாம் அனுப்பலாம் 1

யார் எல்லாம் அனுப்பலாம் 1

6. Survival Benefit Claim என்றால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் க்ளெய்ம் இருக்கக் கூடாது.
7. மெச்சூரிட்டி க்ளெய்ம் என்றால் Sum Assured 5 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இவர்கள் மட்டுமே மெயில் வழியாக பாலிசிக்கான க்ளெய்ம் டாக்குமெண்ட்களை அனுப்ப முடியும்.

எதை எல்லாம் அனுப்ப வேண்டும்

எதை எல்லாம் அனுப்ப வேண்டும்

1. பாலிசி பாண்டின் முதல் பக்கம் & கடைசி பக்கம்
2. முழுமையாக நிரப்பிய டிஸ்சார்ஜ் படிவம்
3. படிவம் எண் 3510 (declaration regarding non-assignment)
4. NEFT இல்லை என்றால், NEFT படிவம் + ரத்து செய்த காசோலை (செக்)
5. கே வொய் சி டாக்குமெண்ட்கள்
6. ஐடையாளம் & முகவரி ஆதாரம்
7. பான் அட்டை போன்றவைகளை அனுப்ப வேண்டுமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Claim documents can be submitted by mail till 30 june

The Life insurance corporation of India policy claim documents can be submitted by mail till 30 June 2020. We have explained to which mail id you have to sent the details and what documents you have to attach with the mail.
Story first published: Friday, June 5, 2020, 12:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X