குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு.. இது சரியான நேரம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையே, ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது தான்.

சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ? மாட மாளிகையோ அல்லது ஓலைக் குடிசையோ? நிச்சயம் தனக்கென்று சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது.

ஒரு காலகட்டத்தில் சில லட்சங்கள் இருந்தாலே வீடு கட்டிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்த நிலையில், இன்று சாதாரணமாக சிறிய அளவில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் கூட, குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆக கையில் பணத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவது என்பது இயலாத காரியம். அதிலும் நடுத்தர மக்களுக்கு இது மிக கஷ்டம். ஆக இந்த மாதிரியான நேரங்களில் உதவுவது வீட்டு கடன் தான்.

குறைந்த வட்டி விகிதம்

குறைந்த வட்டி விகிதம்

அதிலும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் வங்கிகளை தேடிப்பிடித்து வாங்குவது நல்லது. அந்த வகையில் நாம் இன்று 7% வரையிலான வட்டியை வழங்கும் வங்கிகள் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். எனினும் இந்த விகிதமானது ஆரம்ப விகிதம் மட்டுமே. இது அவரவர் சிபில் ஸ்கோர், வங்கி பரிமாற்றம் உள்ளிட்ட பலவற்றையும் பொறுத்து மாறுபடும். ஆக இது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற்போல மாறலாம்.

Array

Array

எஸ்பிஐ-யில் வட்டி விகிதம் 6.70%ல் இருந்து ஆரம்பமாகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது. இங்கு லட்சத்திற்கு 645 ரூபாய் மாதத்தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

இதே தனியார் வங்கி குழுமத்தினை சேர்ந்த முன்னணி கடன் வழங்குனரான ஹெச்டிஎஃப்சியில், வட்டி விகிதம் 6.70% முதல் ஆரம்பமாகிறது. இங்கு 0.50% செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது குறைந்தபட்சம் 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.

Array

Array

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வட்டி விகிதம் 6.85% முதல் ஆரம்பமாகிறது. இங்கு செயல்பாட்டுக்கட்டணம் குறைந்தபட்சம் 7,500 ரூபாயாகும். இவ்வங்கியில் மாத தவணையாக லட்சத்திற்கு 780 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

ஐசிஐசிஐ வங்கியிலும் 6.70% முதல் வட்டி விகிதம் ஆரம்பமாகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக 0.25% வசூலிக்கப்படுகிறது. இது அதிகபட்சம் 5000 ரூபாய் வரையில் இருக்கலாம்.

Array

Array

ஆக்ஸிஸ் வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 6.75% முதல் ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக 2500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸில் வட்டி விகிதம் 7.90% முதல் ஆரம்பமாகிறது. இந்த நிறுவனத்தில் செயல்பாட்டு கட்டணம் குறைந்தபட்சம் வசூலிக்கப்படுகிறது. இங்கு மாத தவணையாக லட்சம் ரூபாய்க்கு 659 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

Array

Array

பஜாஜ் பின்செர்வில் வட்டி விகிதம் 6.90% முதல் ஆரம்பமாகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக 0.35% வசூலிக்கப்படுகிறது. இங்கு மாத தவணையாக 1 லட்சம் ரூபாய்க்கு 769 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

இதே சுந்தரம் ஹோம் பைனான்ஸில் ஆரம்ப வட்டி விகிதம் 6.90% ஆகும். இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக அதிகபட்சம் 3,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதிலும் இங்கு மாத தவணையாக 1 லட்சம் ரூபாய்க்கு 769 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

கோடக் வங்கியில் வட்டி விகிதம்

கோடக் வங்கியில் வட்டி விகிதம்

கோடக் வங்கியில் ஆரம்ப வட்டி விகிதம் 6.65% ஆகும். இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதிலும் மாத தவணையாக 1 லட்சம் ரூபாய்க்கு 754 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். மேற்கண்ட தொகைகள் 1 லட்சம் ரூபாய்க்கு கணக்கிட்டு கூறப்பட்டுள்ளது. அதுவும் இது குறைந்தபட்ச வட்டி விகிதத்தினை பொறுத்து இருப்பதால், உங்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம், மற்ற கட்டணங்களை பொறுத்து இந்த தவணைத் தொகை மாறும்.

இன்றைய காலகட்டத்தில் வீட்டு கடன் அவசியம்

இன்றைய காலகட்டத்தில் வீட்டு கடன் அவசியம்

இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவிலான தொழிலதிபர்களும், சம்பளம் வாங்குபவர்களும் கூட, வங்கியில் கடன் வாங்கித் தான் வீடு கட்டுகின்றனர். அப்படி கடன் வாங்கிக் கட்டினாலும், எங்கு குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது என்பதனை ஆலோசித்து கடன் வாங்கலாம் என்பதே ஆலோசகர்களின் கருத்து. ஏனெனில் அந்த சிறு முயற்சி கூட, உங்களின் கடன் சுமையை சற்று குறைக்கக் கூடும் என கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lowest Home loan interest rates, It is the right time to buy home?

Home loan interest rate updates.. Lowest Home loan interest rates, It is the right time to buy home?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X