மியூச்சுவல் ஃபண்ட் Vs பொது வருங்கால வைப்பு நிதி.. எது சிறந்தது.. எது பாதுகாப்பானது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீடு பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் இன்றளவிலும் மியூச்சுவல் ஃபண்ட், பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால், நஷ்டமாகி விடும் என்ற கருத்தே பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஆனால் பங்கு சந்தையோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களோ சரியான புரிதல் இருந்தால் அதில் வெற்றி காண முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதெல்லாம் இல்லை அதனை பற்றி தெரியாது என்று கூறுபவர்கள் பங்கு சந்தை பக்கம் செல்வதை விடுத்து, மற்ற பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யலாம். அல்லது அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது என கூறுகின்றனர். நாம் இன்று பார்க்கவிருப்பது மியூச்சுல் ஃபண்ட்களாக அல்லது பிபிஎஃப் திட்டமா? எது சிறந்தது? எது பாதுகாப்பானது, வருமானம் எதில் அதிகம். வாருங்கள் பார்க்கலாம்.

5 மாத உச்சத்தினை தொட்ட பிறகு இன்று தங்கம் விலை சரிவு.. இது வாங்க சரியான இடமா..? 5 மாத உச்சத்தினை தொட்ட பிறகு இன்று தங்கம் விலை சரிவு.. இது வாங்க சரியான இடமா..?

10 வருடங்களுக்கு முன்பு முதலீடு

10 வருடங்களுக்கு முன்பு முதலீடு

1 லட்சம் ரூபாய் நீங்கள் 10 வருடத்திற்கு முன்பு முதலீடு செய்துள்ளார்கள் என வைத்துக் கொள்வோம். இது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டால் எவ்வளவு லாபம், வரிச்சலுகை உண்டா? பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கும், இதில் வரிச் சலுகை கிடைத்திருக்கும்.

சிறந்த 5 ஃபண்டுகள் (Direct plans)

சிறந்த 5 ஃபண்டுகள் (Direct plans)

DSP matural resources and new enegy fund - 5 ஆண்டு சராசரி வருமானம் - 16.98%
SBI contra fund - 5 ஆண்டு வருமானம் - 17.74%
BOI AXA tax advantage fund - 5 ஆண்டு வருமானம் - 23.03%
IDFC tax advantage fund- 5 ஆண்டு வருமானம் - 20.89%
UTI flexi cap fund - 5 ஆண்டு வருமானம் - 22.04%

ஈக்விட்டி ஃபண்ட்கள் பெஸ்ட் ரிட்டர்ன்

ஈக்விட்டி ஃபண்ட்கள் பெஸ்ட் ரிட்டர்ன்

இதில் ஈக்விட்டி ஃபண்ட்களை எடுத்துக் கொண்டால், இன்னும் லாபம் அதிகம். எனினும் அதே அளவு ரிஸ்கும் இந்த ஃபண்டுகளில் உள்ளது. இந்த ஃபண்டுகளில் கிடைக்கும் லாபம் என்பது வேறு எந்த முதலீட்டு ஆப்சன்களிலும் கிடைக்காது.

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் மொத்தமாகவும் முதலீடு செய்து கொள்ளலாம். எஸ் ஐ பி மூலம் மாதம் மாதம் மிக குறைந்த தொகையையும் பிபிஎஃப் போலவே முதலீடு செய்து கொள்ளலாம்.

பிபிஎஃப் முதலீடு

பிபிஎஃப் முதலீடு

அஞ்சலத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால், முதிர்வு காலம் கழித்து ( 15 வருடம்) 15,00,000 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.1%. இதன் படி கணக்கீடு செய்தால் வட்டியாக 12,12,139 ரூபாய் கிடைக்கும். மொத்த முதிர்வு தொகையாக 27,12,139 ரூபாயாக கிடைத்திருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் லாபம்

மியூச்சுவல் ஃபண்ட் லாபம்

இதே வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் என 15 வருடத்திற்கு 15,00,000 லட்சம் ரூபாய் முதலீட்டினை செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இது மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் வருடத்திற்கு சராசரியாக 15% என வைத்துக் கொண்டாலும் கூட, 15 வருடம் கழித்து உங்கள் கையில் மொத்தம் சுமார் 42 லட்சம் ரூபாய் இருக்கும்.

லாபம் எதில்

லாபம் எதில்

ஆக மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிபிஎஃப் திட்டங்களை ஒப்பிடும்போது நீண்டகால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டுகளில் தான் லாபம் அதிகம். எனினும் இந்த இரண்டிலுமே இடையில் உங்களது முதலீட்டினை நிறுத்தாமல் செய்யும்போது தான் இந்த தொகையினை பெறமுடியும்.

வரி சலுகை உண்டா?

வரி சலுகை உண்டா?

பிபிஎஃப் திட்டத்தினை பொறுத்தவரையில் 80சி-ன் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி சலுகை கிடைக்கும்.
இதே மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் நீண்டகால மூலதன ஆதாய வரி, குறுகியகால மூலதன ஆதாய வரி உண்டு. எனினும் இதில் ELSS ஃபண்டுகளில் 1.5 லட்சம் ரூபாய் வரிசலுகையுண்டு. இதில் வருமானமும் அதிகம்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் வரி விகிதம் என்பது இருந்தாலும் கூட, லாபம் என்பது அதிகம். அதுவும் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும்போது, மிகப்பெரிய அளவிலான கார்ப்பஸ்-ஐ பெற முடியும். குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளில் நல்ல வருமானம் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual Fund Vs PPF: which one is best for long term investment?

Mutual Fund Vs PPF: which one is best for long term investment?/ மியூச்சுவல் ஃபண்ட் Vs பொது வருங்கால வைப்பு நிதி.. எது சிறந்தது.. எது பாதுகாப்பானது..!
Story first published: Friday, November 12, 2021, 15:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X