எஸ்பிஐ அதிரடி.. இனி இந்த வகை ஏடிஎம் கார்டுகள் செல்லாது! 2020-ல் அமலுக்கு வந்த எஸ்பிஐ ஏடிஎம் விதிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக களத்தில் நிற்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அவ்வப் போது பாதுகாப்பு கருதி சில மாற்றங்களைக் கொண்டு வருவது சகஜமே. அதோடு வட்டி விகித மாற்றங்களைக் கொண்டு வருவதும் பழகிவிட்டது.

இப்போதும், தன் வாடிக்கையாளர்களின், பணத்தை பாதுகாப்பாக கை மாற்ற, ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய, சில புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது எஸ்பிஐ.

மொத்தம் 3 ஏடிஎம் மாற்றங்கள் + ஒரு கடன் மாற்றத்தை, இந்த ஜனவரி 01, 2020 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நடவடிக்கை 1

நடவடிக்கை 1

ஏடிஎம் பணப் பரிமாற்றங்களுக்கு ஓடிபி கொண்டு வந்து இருக்கிறார்கள். அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் ஏடிஎம் வழியாக பணத்தை எடுக்க வேண்டும் என்றால், ஒன் டைம் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டி இருக்கும். ஒடிபி இல்லாமல் 10,000 ரூபாய்க்கு மேலான பணத்தை எடுக்க முடியாது.

எப்படி செயல்படும்

எப்படி செயல்படும்

இந்த ஓடிபி சேவை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு, எஸ்பிஐ ஏடிஎம்-ல் எடுத்தால் மட்டுமே கிடைக்கும். எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணுக்குத் தான் ஒடிபி அனுப்புவார்கள். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்கிற விவரத்தைக் ஏடிஎம் இயந்திரத்தில் கொடுத்த பின், ஒடிபி கேட்கும். ஒடிபி கொடுத்தால் தான் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வருமாம்.

நடவடிக்கை 2

நடவடிக்கை 2

இனி magnetic stripes என்று சொல்லப்படும் ஸ்வைப் கார்டுகள் (டெபிட் கம் ஏடிஎம் கார்டுகள்), இந்த 01 ஜனவரி 2020-ல் முதல் செயல்படாது. அதாவது இந்த பழைய மேக்னட்டிக் ஸ்ட்ரைப் கார்ட்களைப் பயன்படுத்தி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் அல்லது மற்ற வங்கி ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்க முடியாதாம்.

நடவடிக்கை 3

நடவடிக்கை 3

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள், இந்த magnetic stripes கார்ட்களைத் தான் இப்போது வரை வைத்திருக்கிறீர்கள் என்றால், எந்த கிளையில், உங்களின் ஸ்டேட் பேங்க் வங்கிக் கணக்கைத் தொடங்கினீர்களோ, அந்த வங்கிக் கிளைக்குச் சென்று புதிய, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட EMV chip கார்ட்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கடன் வட்டி மாற்றம்

கடன் வட்டி மாற்றம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 8.05 சதவிகிதத்தில் இருந்து, 7.80 சதவிகிதமாக குறைத்து இருக்கிறது. இந்த வட்டி விகித குறைப்பு, இந்த ஜனவரி 01, 2020 முதல் அமலுக்கு வந்துவிட்டது. எனவே, வீட்டுக் கடன் 7.90% முதல் கிடைக்குமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI 3 changes in atm rules and 1 loan interest rate change

The State Bank of India announced and implemented 3 ATM rules and 1 loan interest rate change. This come into effect from 01st Jan 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X