SBI ஏடிஎம் கார்ட் வெச்சிருக்கீங்களா..? அப்ப இதப் படிங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் ஒட்டு மொத்த வியாபாரத்தை, வர்த்தகத்தையும் முழுமையாக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.

ஆனால் இந்த வியாபாரம் டல் எல்லாம் ஆன்லைன் கொள்ளையர்கள் & மோசடிக்காரர்களுக்குத் தான் கிடையாதே...! எனவே இப்போது ஏடிஎம் கார்ட்களை க்ளோன் செய்து கொள்ளை அடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அது குறித்து இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ தன் ட்விட்டர் பகக்த்தில் விரிவாக விளக்கி இருக்கிறது.

எஸ்பிஐ ட்விட்

எஸ்பிஐ ட்விட்

"டெல்லியில் க்ளோன் செய்யப்பட்ட ஏடிஎம் கார்டுகள், பயன்படுத்தப்பட்டதாக சில புகார்கள் வந்து இருக்கின்றன. மற்ற வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருக்க வாய்ப்பு இருப்பது போலத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உதவிகளும், பணம் ரீஃபண்டுகளும் விதிப்படி வழங்கப்படும்" எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ.

புகார் கொடுங்கள்

புகார் கொடுங்கள்

"மேற்கொண்டு ஏதாவது சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அவைகளை நாம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையில் முறையாக புகார் கொடுக்கவும்" எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். எஸ்பிஐ வங்கியின் இந்த எச்சரிக்கை ட்விட்டைக் கீழே லிங்கில் க்ளிக் செய்யவும். https://twitter.com/TheOfficialSBI/status/1260048365049577472

கவனம் மக்களே

கவனம் மக்களே

மேற்கொண்டு நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகாமல் இருக்க, எஸ்பிஐ சில வழிமுறைகளையும் பின்பற்றச் சொல்லி இருக்கிறது.
1. அடிக்கடி, டெபிட் கார்ட்டின் பின் எண்ணை மாற்றச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு ஏடிஎம் இயந்திரங்களில் பின் எண்ணை டைப் செய்யும் போது மற்றவர்கள் பார்க்காத வண்ணம் டைப் செய்யச் சொல்கிறார்கள்.

எழுதாதீர்கள்

எழுதாதீர்கள்

2. அதே போல டெபிட் கார்டின் பின் எண்ணை எங்கும் எழுத வேண்டாம் என வலியுறுத்துகிறார்கள். நம் பிறந்த தேதி, திருமண நாள் போன்றவைகளை பின் எண்ணாக வைக்க வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறது வங்கி நிர்வாகம்.
3. மொபைல் எண் மாற்றினால் அதை முறையாக வங்கியில் மாற்றி, ஏடிஎம் தொடர்பான எஸ் எம் எஸ்-களை பெறச் சொல்கிறார்கள்.

பகிர வேண்டாம்

பகிர வேண்டாம்

4. ஓடிபி மற்றும் டெபிட் கார்டின் பின் எண்ணை யாரோடும் பகிர வேண்டாம். எஸ் எம் எஸ், மெயில் & கால் வழியாக யாராவது கார்ட் விவரங்களைக் கேட்டால் பகிர வேண்டாம் எனவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது. இனி நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் மக்களே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI aware customers about card cloning and advise to be careful

The State Bank of India aware their customers about card cloning and advise to do some basic things to avoid unnecessary problems.
Story first published: Tuesday, May 12, 2020, 19:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X