எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. இந்த கட்டணத்தையும் தெரிஞ்சுகோங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் நகைகள், சொத்து ஆவணங்கள் இப்படி பல ஆடம்பர பொருட்களை வாங்கி வைப்பதை விட, அதனை இன்று பாதுகாப்பதே மிகப்பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இதனாலேயே இன்றும் பலரும் லாக்கர்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இது மிக பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் வங்கி லாக்கரும், அதற்கான கட்டணங்கள் பற்றியும் தான் பார்க்க போகிறோம்.

கார் விற்பனை அமோகம்.. மாருதி முதல் ஹூண்டாய் வரை கொண்டாட்டம்..!கார் விற்பனை அமோகம்.. மாருதி முதல் ஹூண்டாய் வரை கொண்டாட்டம்..!

தேவைகேற்ப லாக்கர் வசதி

தேவைகேற்ப லாக்கர் வசதி

எஸ்பிஐ-யில் லாக்கர்கள் உங்களின் தேவைக்கு ஏற்ப பல அளவுகளில் உள்ளது. இதற்கான கட்டண விகிதம் கடந்த மார்ச் மாத இறுதியில் தான் ஏற்றப்பட்டது. எஸ்பிஐ வங்கியின் சிறிய லக்கர் கட்டணம், நகர்புறம் மற்றும் மெட்ரோ நகரங்களில் 2000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இதே கிராமப்புறங்களில் மற்றும் செமி அர்பன் நகரங்களில் 1,500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

நடுத்த அளவிலான லாக்கர் கட்டணம்

நடுத்த அளவிலான லாக்கர் கட்டணம்

எஸ்பிஐ-யின் நடுத்தர அளவிலான லாக்கருக்கு கட்டண விகிதம் நகர்புறம் மற்றும் மெட்ரோ நகரங்களில் 4,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. இது கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் 3,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.

லார்ஜ் சைஸ் லாக்கர் கட்டணம்

லார்ஜ் சைஸ் லாக்கர் கட்டணம்

இதே எஸ்பிஐ-யின் லார்ஜ் சைஸ் அளவிலான லாக்கருக்கு கட்டண விகிதம் நகர்புறம் மற்றும் மெட்ரோ நகரங்களில் 8,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. இது கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் 6,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.

எஸ்பிஐ-யின் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர் கட்டணம்

எஸ்பிஐ-யின் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர் கட்டணம்

எஸ்பிஐ-யின் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கருக்கு கட்டண விகிதம் நகர்புறம் மற்றும் மெட்ரோ நகரங்களில் 12,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. இது கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் 9,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.

எஸ்பிஐ லாக்கருக்கு பதிவு கட்டணம்

எஸ்பிஐ லாக்கருக்கு பதிவு கட்டணம்

அதுமட்டுமல்லாமல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான லாக்கர் சேவைக்கு ஒரு முறை பதிவு கட்டணமாக 500 ரூபாயும், இதுவே லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கருக்கு 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனுடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த லாக்கரை வருடத்தில் 12 முறை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். அதன் பிறகு ஒரு முறை சென்று பார்ப்பதற்கு 100 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும்.

ஆர்பிஐ விதிமுறை

ஆர்பிஐ விதிமுறை

ஆர்பிஐ விதிகளின் படி, வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது லாக்கர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது திறக்க வேண்டும். இல்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி லாக்கர் சாவிகளை சரண்டர் செய்ய கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI bank locker charges and details

SBI offers cheaper locker services in semi-urban and rural areas. Please check here all deatiils
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X