SBI-யில் இப்படி ஒரு சூப்பர் திட்டம் இருக்கா? எப்படி பெறுவது? மற்ற வங்கிகளில் இந்த திட்டம் உண்டா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகவே பலரும் எதிர்கொண்டு வரும் ஒரு சிறிய பிரச்சனை தான் இது. அதாவது சொந்த ஊர் ஒன்றாக இருக்கும். ஆனால் பணிபுரிவது ஒரு இடமாக இருக்கும். எனினும் வங்கி கணக்கு மற்ற பரிவர்த்தனைகளை சொந்த ஊரிலேயே வைத்திருப்பார்கள் பலர்.

இந்த நிலையில் கையில் உள்ள செக் லீப் முடிந்து விட்டால், வங்கிகளில் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து விடுவோம். ஆனால் அதன் டெலிவரி சொந்த ஊரில் தான் செய்யப்படும். இதற்காக நாம் அலைய வேண்டி இருக்கும்.

இப்படி பலரையும் நாம் பார்த்திருக்க முடியும். ஏன் நீங்களே கூட இதனை எதிர்கொண்டு இருக்கலாம். ஆனால், எஸ்பிஐ இப்படியானர்வர்களுக்கு ஒரு நல்ல வசதியை கொண்டு வந்துள்ளது. சரி என்ன திட்டம் அது வாருங்கள் பார்ப்போம், எப்படி உங்களுக்கு தேவையான முகவரிக்கு இந்த செக்புக்கினை பெறுவது என்று.

ஜிஎஸ்டி கூட்டம்.. பிஜேபி அல்லாத மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கலாம்!ஜிஎஸ்டி கூட்டம்.. பிஜேபி அல்லாத மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கலாம்!

எஸ்பிஐயின் சூப்பர் திட்டம்

எஸ்பிஐயின் சூப்பர் திட்டம்

நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்திற்காக பதிவு செய்யும் போதே, எங்கு டெலிவரி செய்ய வேண்டும் என்ற முகவரியினையும் பதிவு செய்யலாம். அது வங்கியில் கொடுத்த முகவரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாடிக்கையாளர் எந்த முகவரியினை கொடுக்கிறாரோ? அங்கு டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

டிவிட்டர் பதிவு - வீடியோ

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது இணைய வங்கியில் செக் புத்தகத்திற்காக விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு சவுகாரியமான முகவரியினையும் கொடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. https://twitter.com/TheOfficialSBI/status/1312976924197621760 மேலும் அந்த டிவிட்டல் பக்கத்தில் இது குறித்தான வீடியோ பதிவினையும் கொடுத்துள்ளது.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் உங்களது நெட் பேங்கிங் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
லாகின் செய்த பிறகு ஒரு புதிய பேஜ் ஓபன் ஆகும். அங்கு Request & enquiries என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதனை கீழ்புறமாக ஸ்குரோல் செய்தால் அங்கு Cheque book Request option இருக்கும். அதனை கிளிக் செய்து, எந்த கணக்கிற்கு செக் புக் வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதோடு எத்தனை செக் லீப்கள் வேண்டும் என்பதனையும் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும்.

எந்த முகவரி?

எந்த முகவரி?

இதன் பிறகு ஒரு புதிய பக்கம் தொடங்கும் அதில் டெலிவரி செய்யும் முகவரியினை கேட்கும். அங்கு 3 ஆபசன்களும் இருக்கும். அதில் பதிவு செய்யப்பட்ட முகவரி, கடைசியாக அனுப்பபட்ட முகவரி, அல்லது புதிய முகவரி என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான முகவரியை கொடுத்துக் கொள்ளலாம்.

இதனை பதிவு செய்து பின்பு சப்மிட் செய்யவும். சப்மிட் செய்தவுடன், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஒடிபியினை கொடுத்து உங்களது பதிவினை உறுதி செய்யவும்.

 

செக்புக்கிற்கு எப்படி விண்ணப்பம் செய்வது?

செக்புக்கிற்கு எப்படி விண்ணப்பம் செய்வது?

மொபைல் பேங்கிங்க், எஸ் எம்எஸ் பேங்கிங்க், மிஸ்டு கால் பேங்கிங்க், அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு சென்றும் செக் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் செக் புக்கிற்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இது போன்ற வசதிகள் முன்னணி தனியார் வங்கிகளில் கூட இல்லை. இந்த நிலையில் பொதுத்துறை வங்கி கொண்டு வந்திருப்பது, மிக நல்ல விஷயம் தான்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI can deliver your cheque book to any address, how can i get this?

Now you can use your internet banking service and request for a cheque book delivery to any address of your choices
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X