டெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), அதன் கார்டுகள் மற்றும் பேமெண்ட் சேவைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த புதிய விதிகளால் யாருக்கு என்ன பலன்? குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்..
எஸ்பிஐ கிரெடிட் கார்டில் கிடைக்கும் ரிவார்டு புள்ளிகளில் தான், ஜனவரி, 2023 முதல் புதிய மாற்றம் அமல்படுத்தப்படவுள்ளது.
2 விதிகள் மாற்றம்
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவதற்கான 2 விதிகள் 2023ம் ஆண்டு முதல் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிம்பிளிக்ளிக் கார்டுகளுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரே ஒரு ட்ரான்ஸாஷனில் மட்டுமே பெற முடியும். இதனை வவுச்சருவுடன் இணைக்க முடியாது. இந்த நடைமுறையானது ஜனவரி 6, 2023 முதல் அமலுக்கு வரவுவுள்ளது.
ரிவார்டு பாயிண்டுகளில் மாற்றம்
ஜனவரி 1 முதல் அமேசான்.இன்-ல் சிம்ப்ளிக்ளிக் மூலம் ஆன்லைனில் கிடைக்கும் ரிவார்டுகள் தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்படும். அமேசானில் சிம்பிளி க்ளிக் ரிவார்டு பாயிண்ட்கள் பெற்றுவந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஜனவரி 1 முதல் 5X ரிவார்டு பாயிண்டுகளாக குறைக்கப்படும்.
10 ரிவார்டு புள்ளிகள் யாருக்கு?
எனினும் அப்பல்லோ 24X7, க்ளியர்ட்ரிப், லென்ஸ்கார்ட், நெட்மெட்ஸ், புக்மைஷோ, ஈஸிடைனர் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் 10X ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும் என எஸ்பிஐ கார்ட்ஸ் & பேமெண்ட்ஸ் சேவை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.
செயல்பாட்டுக் கட்டணம்
எஸ்பிஐ கார்டு நவம்பர் 15, 2022 முதல் இந்த கட்டணங்களை மாற்றம் செய்யப்பட்டது. இதன் படி வணிகர் இ எம் ஐ பரிவர்த்தனைகளுக்கான செயல்பாட்டுக் கட்டணம், வரிகளுடன் சேர்த்து 199 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 99 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
மொத்தத்தில் இனி எஸ்பிஐ வாடிக்கையாளார்கள் இனி ஆன்லைனில் தங்களது கிரெடிட் கார்டினை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications