அடிசக்க... SBI-ல் எமர்ஜென்ஸி லோன்! எப்படி வாங்குவது? எவ்வளவு வாங்கலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகமே கொரோனா வைரஸால் தவித்துக் கொண்டு இருக்கிறது.

சம்பளம் வாங்குபவர்கள், தங்கள் வேலை இருக்குமா என பயந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால், வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைச் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியான நேரத்தில், மக்கள் தேவையான பணத்தை கடன் வாங்கிக் கொள்ள, எஸ்பிஐ ஒரு எமர்ஜென்ஸி கடன் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறது.

SBI Emergency Loan

SBI Emergency Loan

இந்த கடன் திட்டத்தை, எஸ்பிஐ வங்கி, கொரோனா வைரஸ் காலத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் அவசர பண உதவிக்காகத் தொடங்கி இருக்கிறார்களாம். இந்த புதிய கடன் திட்டத்தைப் பற்றித் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். இந்த கடன் திட்டத்தின் கீழ் சுமார் 7.25 % வட்டிக்கு கடன் கொடுக்கிறார்களாம்.

என்ன சிறப்பு

என்ன சிறப்பு

1. இந்த SBI Emergency Loan-ஐ ஆன்லைனிலேயே விண்ணப்பித்து உடனடியாக வாங்கிவிடலாம்.
2. ஆதார் கார்ட், பான் கார்ட் என எந்த பிசிக்கல் டாக்குமெண்ட்களும் தேவை இல்லை.
3. இந்த கடன் உடனடியாக ப்ராசெஸ் செய்யப்படும். ப்ராசசிங் கட்டணமும் மிகக் குறைவாக இருக்கும் எனச் சொல்கிறது பிசினஸ் இன்சைடர் பத்திரிகை.

யாருக்கு கிடைக்கும்

யாருக்கு கிடைக்கும்

இந்த இடத்தில் தான் ஒரு குட்டி செக் வைத்திருக்கிறது எஸ்பிஐ. இந்த SBI Emergency Loan எல்லோருக்கும் கிடைக்காது. ஏற்கனவே எஸ்பிஐ அனுமதித்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, இந்த கடன் கிடைக்குமாம். எஸ்பிஐ, தன் வாடிக்கையாளர்களின் வரவு செலவுகளை கணக்கிட்டு, வாடிக்கையாளர்களுக்கு கடன் அப்ரூவ் செய்வார்களாம்.

எனக்கு உண்டா

எனக்கு உண்டா

அதெல்லாம் சரி, நம் எஸ்பிஐ வங்கிக் கணக்குக்கு SBI Emergency Loan கிடைக்குமா? என எப்படி தெரிந்து கொள்வது. 567676 என்கிற எண்ணுக்கு "PAPL SPACE <நம் எஸ்பிஐ வங்கிக் கணக்கின் கடைசி 4 எண்கள்>" டைப் செய்து எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் நமக்கு கடன் கிடைக்குமா... இல்லையா..? எனத் தெரிந்துவிடும்.

எப்படி விண்ணப்பிப்பது

எப்படி விண்ணப்பிப்பது

மேலே சொன்னது போல எஸ் எம் எஸ் அனுப்பி நமக்கு லோன் கிடைக்கும் என தெரிந்து கொண்ட பின்
1. YONO SBI செயலியை டவுன் லோட் செய்யவும்.
2. அதில் "Pre-approved loan" என்பதை க்ளிக் செய்யவும்
3. அதில் எத்தனை மாதம் அல்லது வருடத்தில் கடனை திருப்பிச் செலுத்த இருக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு கடன் தொகை வேண்டும் என்பதை குறிப்பிடவும்.

ஓடிபி

ஓடிபி

மேலே சொன்ன வேலைகள் எல்லாம் முடிந்த பின், நம் வங்கிக் கணக்குடன் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதை ஒடிபி கட்டத்தில் கொடுத்து க்ளிக் செய்தால் வேலை முடிந்தது. நீங்கள் கேட்ட பணம் உங்கள் வங்கிக் கணக்கில் அடுத்த சில மணி நேரங்களில் வரவு வைத்து விடுவார்கள்.

யோசியுங்கள்

யோசியுங்கள்

இந்த கொரோனா லாக் டவுன் காலத்தில், எல்லா தரப்பு மக்கள் கையிலும் பணம் இல்லை என அறிவோம். இருப்பினும், உண்மையாகவே பணத் தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். எளிதில் கடன் கிடைக்கிறது என்பதற்காக, தேவை இல்லாமல் கடன் வாங்கி, அடுத்த சில வருடங்களுக்கு இ எம் ஐ கட்டிக் கொண்டு இருக்க வேண்டாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Emergency loan: How to apply for SBI emergency loan

How to apply for State Bank of India Emergency loan. How to know the sbi loan eligibility and at what interest rate sbi is giving that loan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X