எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. வீட்டுக் கடன், ஆட்டோ, பர்சனல் லோன் EMI அதிகரிக்கலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மிகப் பெரிய கடன் வழங்குனராகும். இவ்வங்கி அதன் மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்டினை (MCLR) அதிகரித்துள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பானது நவம்பர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பில் 15 அடிப்படை புள்ளிகள் வட்டியானது அதிகரித்துள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பால் எஸ்பிஐ-யில் எம்சிஎல்ஆருடன் இணைந்து கடன் வாங்கியோருக்கு மாத தவணை கடுமையாக அதிகரிக்க வழிவகுக்கும். இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் மாத மாதம் அதிகமான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். எம் சி எல் ஆர் விகிதம் அதிகரித்து இருந்தாலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை மட்டும் குறைத்து, சில சலுகைகளையும் வங்கி அறிவித்துள்ளது. இது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையலாம்.

 வாட்ஸ்அப், பேஸ்புக் உயர் அதிகாரிகள் ஓரே நாளில் ராஜினாமா.. ஆடிப்போன மார்க் ஜூக்கர்பெர்க்..! வாட்ஸ்அப், பேஸ்புக் உயர் அதிகாரிகள் ஓரே நாளில் ராஜினாமா.. ஆடிப்போன மார்க் ஜூக்கர்பெர்க்..!

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

எஸ்பிஐ-யின் இந்த வட்டி அதிகரிப்பின் படி எம்சிஎல்ஆர் விகிதம் - 7.60% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே ஓராண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 8.05% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த விகிதத்தில் கடன் வாங்கியோர் கூடுதலாக மாத தவணை அதிகரிக்கலாம். இது முன்னதாக 7.95% ஆக இருந்தது.

2 அல்லது 3 வருட எம்சிஎல்ஆர்

2 அல்லது 3 வருட எம்சிஎல்ஆர்

இதே 2 வருட எம்சிஎல்ஆர் விகிதம் மற்றும் மூன்று வருட எம்சிஎல்ஆர் விகிதம் 8.15% மற்றும் 8.25% ஆக இருந்தது. இது தற்போது 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 8.25% மற்றும் 8.35% ஆகவும் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் வீட்டுக் கடன், ஆட்டோ லோன் மற்றும் தனி நபர் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம்.

வீட்டுக் கடன் விகிதம்
 

வீட்டுக் கடன் விகிதம்

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 14, 2022 முதல் 8.25% ஆக கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தள்ளுபடி சலுகையானது குறிப்பிட்ட காலம் மட்டுமே எனவும் அறிவித்துள்ளது. இது டிசம்பர் 31,2022 வரையில் கிடைக்கும் என அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையின் கடனை முன் கூட்டியே செலுத்தவும், பகுதியாக செலுத்தவும் கட்டணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

வேறு என்ன சலுகைகள்

வேறு என்ன சலுகைகள்

இந்த வட்டி அதிகரிப்பு மற்றும் குறைப்பானது புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பேலன்ஸ் டிரான்ஸ்பர்களுக்கும் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரினை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகையில் வட்டி கூறைப்பு மட்டும் அல்லாது, செயல்பாட்டு கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எப்படி பாதிப்பு?

எப்படி பாதிப்பு?

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எம்சிஎல்ஆர் மூலம் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, இதன் மூலம் மாத மாதம் வட்டி அதிகரிப்பால் தவணை அதிகரிக்கலாம். அதேசமயம் வீட்டுக் கடனுக்கான சலுகை மூலம் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைவாகவும் பலன் பெறலாம். எம்சிஎல்ஆர் விகிதத்தின் அடிப்படையில் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யும்போதெல்லாம் இதிலும் அதிகரிக்கலாம். குறையும் போது குறையலாம். ஆக உங்களுக்கு எது பொருந்துமோ? அதனை திட்டமிட்டு பயன்பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI increases MCLR rates across tenors by 15bps: EMI burden may increase further

As the MCLR rate has been increased in SBI, it is expected that the interest rate for home loan, auto loan and personal loan may increase.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X