எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு.. ஏடிஎம் பயனாளர்களுக்கு புதிய வசதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக அதிரடியாக பல சலுகைகளை வழங்கி வருகின்றது.

அதிலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றது. அதற்காக பல வசதிகளையும் செய்து வருகின்றது.

தற்போது அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்யும் போதோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுக்கும்போதோ, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வர அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

SMS அலர்ட் வரும்

SMS அலர்ட் வரும்

இப்படி ஒரு அதிரடியான அம்சத்தினை தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், மோசடிகளில் இருந்து தப்பிக்கவும் இது வழி வகுக்கும். ஒரு வேளை உங்களது ஏடிஎம்களை வைத்து வேறு யாரேனும், பேலன்ஸ் செக் செய்தாலோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தாலோ, உங்களது ரிஜிஸ்டர் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வரும்.

ஏடிஎம்-களை பிளாக் செய்ய முடியும்

ஏடிஎம்-களை பிளாக் செய்ய முடியும்

இந்த எஸ்எம்எஸ்-ஸின் மூலம் வாடிக்கையாளர்கள் நடக்க விருக்கும் மோசடிகளை தவிர்க்க முடியும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் ஒரு வேளை வாடிக்கையாளர்கள் உங்களது ஏடிஎம் கார்டு தவறாக பயன்படுத்தப் போவதாக நினைத்தால், உடனடியாக உங்களது ஏடிஎம்களை பிளாக் செய்ய முடியும். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இத்தகைய மோசடிகளை தவிர்க்கும் நோக்கில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இத்தகைய சேவையை அறிவித்துள்ளது.

எஸ்எம்எஸ்களை தவிர்க்க வேண்டாம்

எஸ்எம்எஸ்களை தவிர்க்க வேண்டாம்

ஆக வாடிக்கையாளர்கள் இத்தகைய எஸ் எம் எஸ்கள் உங்களது மொபைலுக்கு வரும் போது தவிர்க்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது. இதற்கு முன்பு ஏடிஎம்மில் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது மட்டும் இந்த அலர்ட் வரும். இதன் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்வோம். ஆனால் பேலன்ஸ் பார்ப்பது, ஸ்டேட்மெண்ட் எடுப்பது நடவடிக்கையின் போதே எஸ்எம்எஸ் வந்தால், வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே மோசடிகளை தவிர்க்க முடியும்.

வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும்

வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும்

மேலும் மோசடியாளர்கள் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை இருக்கிறது என தெரிந்து கொள்ள கூட மினி ஸ்டேட் மெண்ட் எடுக்கலாம். ஆக இத்தகைய மோசடிகளுக்கு இடம் கொடுக்காமல் உடனடியாக வங்கியை அணுகி, உங்களது ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்யலாம். ஆக நிச்சயம் இது வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும்.

இதுவும் மிக நல்ல விஷயம்

இதுவும் மிக நல்ல விஷயம்

அதோடு எஸ்பிஐ ஏடிஎம் இல்லாமல் பணத்தினை எடுக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், டெபிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இது ATM மோசடி, ATM குளோனிங் அபாயத்தை குறைக்கிறது. இதோடு இரவு எட்டு மணிக்கு மேல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஆக அப்போதும் மோசடிகளில் இருந்து உங்களால் விலகி இருக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI launches new facility for ATM users, please check here other details

SBI introduced a new feature for customer’s safety. If you go to the ATM and want check ac balance or mini statement, sbi will alert you by sending an SMS to your registered mobile no.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X