எஸ்பிஐ-ல் இனி மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கி எது என்று ஒரு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனைக் கேட்டால் கூட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என தெளிவாகச் சொல்வான்.

இனி மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இல்லை.. எஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு
 

அப்படிப்பட்ட பெரிய வங்கி, உண்மையாகவே பெரிய மனுஷத் தனமாக ஒரு விஷயத்தை செய்து இருக்கிறது.

அப்படி என்ன அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். ஏன் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த அறிக்கைக்கு நாம் சந்தோஷப்படலாம் என்று கேட்கிறீர்களா..?

44.51 கோடி கணக்கு

44.51 கோடி கணக்கு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சுமாராக 44.51 கோடி சேமிப்பு கணக்குகள் (Savings Bank Account) இருக்கிறதாம். இந்த சேமிப்பு கணக்குகள் மெட்ரோ நகரங்களில் இருக்கிறதா, நகரங்களில் இருக்கிறதா, கிராம புறங்களில் இருக்கிறதா என்பதைப் பொருத்து மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவு மினிமம் பேலன்ஸ்

எவ்வளவு மினிமம் பேலன்ஸ்

மெட்ரோ நகரங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 3,000 ரூபாய்.
நகர் புறங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 2,000 ரூபாய்.
கிராம புறங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 1,000 ரூபாய் என சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance) வைத்திருக்க வேண்டும்.

அபராதம்
 

அபராதம்

அப்படி மேலே சொன்ன அளவுக்கு மினிமம் பேலன்ஸை சேமிப்பு கணக்குகளில் வைத்திருக்கவில்லை என்றால், 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அபராதம் விதிப்பார்கள். இந்த அபராதத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி போன்றவைகளும் கூடுதலாக கணக்கிட்டு நம்மிடம் இருந்து தான் வசூலிப்பார்கள்.

தேவை இல்லை

தேவை இல்லை

இப்போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும், இனி சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ நிர்வாகம். எனவே இந்த செய்தி எஸ்பிஐ-ல் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் வயிற்றில் பால் வார்த்து இருக்கிறது.

0 பேலன்ஸ்

0 பேலன்ஸ்

ஆக இனி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், ஒரு கடைசி ரூபாய் வரை பயன்படுத்தலாம். சுருக்கமாக 0 பேலன்ஸ் வைத்துக் கொள்ளலாம். இந்த நல்ல விஷயத்தோடு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஒவ்வொரு காலாண்டுக்கும் வசூலிக்கும் எஸ் எம் எஸ் கட்டணத்தையும் ரத்து செய்து இருக்கிறார்களாம்.

மற்ற வங்கிகள்

மற்ற வங்கிகள்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியே சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance)-ஐ ரத்து செய்து இருக்கிறது. மற்ற அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளும், இவர்களைப் போல ரத்து செய்தால் நன்றாக இருக்குமே.! செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sbi minimum balance: SBI waived off Average Monthly Balance AMB

State bank of india has waived off the Average Monthly Balance AMB and Quarterly charging SMS charges.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X