SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்! விவரங்கள் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது.

 

அந்த விதிகள் என்ன..? எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவைகளை எல்லாம் கீழே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

கடந்த 30 ஜூன் 2020 வரை, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எந்த வங்கி ஏடிஎம்-ல் இருந்தும் எவ்வளவு வேண்டுமானாலும் பணக் எடுக்கலாம் என்று விதியை தளர்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி புதிய விதிகளைப் பார்ப்போம்.

எத்தனை முறை எடுக்கலாம்

எத்தனை முறை எடுக்கலாம்

எஸ்பிஐ சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற நகர வாசிகளுக்கு

மற்ற நகர வாசிகளுக்கு

எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களை 5 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மேலே சொன்ன மெட்ரொ நகரங்களைத் தவிர மற்ற நகரங்களுக்கு பொருந்தும்.

25,000 ரூபாய்க்கு மேல்
 

25,000 ரூபாய்க்கு மேல்

இதுவே, ஒரு நபர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர், 25,000 ரூபாய்க்கு மேல் சராசரி மாதாந்திர பேலன்ஸ் தொகை வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-களை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1,00,000 ரூபாய்க்கு மேல்

1,00,000 ரூபாய்க்கு மேல்

எஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திர சராசரி பேலன்ஸ் தொகை 1,00,000 ரூபாய்க்கு மேல் வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மற்றும் எஸ்பிஐ அல்லாத மற்ற வங்கி ஏடிஎம் என எந்த வங்கி ஏடிஎம்-ல் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

ஒருவேளை மேலே சொல்லி இருக்கும் அளவை விட அதிகமாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை (Financial Transaction) செய்தால் 10 - 20 ரூபாய் வரை கட்டணமும், வசூலிக்கும் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுமாம். பணப் பரிமாற்றம் இல்லாமல் வேறு ஏதாவது காரணத்துக்காக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் (Non Financial Transaction) 5 - 8 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம்.

பணம் இல்லை என்றால்

பணம் இல்லை என்றால்

ஒரு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர், ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுக்க முயல்கிறார். ஆனால் போதுமான அளவுக்கு பணம் இல்லை. Insufficient Balance எனக் காட்டுகிறது என்றால், 20 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம். எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவும்.

சம்பளக் கணக்கு

சம்பளக் கணக்கு

இதுவே, ஒரு நபருக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தான் சம்பளக் கணக்கு இருக்கிறது என்றால், அவருடைய டெபிட் கார்டை எத்தனை முறை வேண்டுமானாலும் எஸ்பிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்-களில் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI new atm rules from 01 july 2020

SBI amended the news ATM rules from 01st July 2020. See the number of free transactions available and know the charges for exceeding the transactions.
Story first published: Friday, July 3, 2020, 11:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X