SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தன் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள்.

 

தொடர்ந்து இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, தன் ரெப்பொ ரேட் வட்டி விகிதங்களைக் குறைத்ததற்கான பலனாக, தற்போது எஸ்பிஐயின் கடனுக்கான வட்டி விகிதங்களும் குறைந்து கொண்டு வருகிறது போலத் தெரிகிறது.

சரி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களை எவ்வளவு குறைத்து இருக்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன பலன்..? எஸ்பிஐ தரப்பில் என்ன சொல்கிறார்கள்? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..! எகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள்

எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள்

எஸ்பிஐ 0.05 - 0.10 சதவிகிதம் வரை எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். விவரங்களைக் கீழே அட்டவணையில் பார்க்கவும்.

என்றில் இருந்து அமல்

என்றில் இருந்து அமல்

இந்த புதிய வட்டி விகிதங்கள், 10 ஜூலை 2020 முதல் அமலுக்கு வரப் போகிறதாம். ஓவர் நைட் & ஒரு மாத காலத்துக்கான எம் சி எல் ஆர் 0.05 % குறைத்து இருக்கிறார்கள். அதே போல 3 மாத காலத்துக்கான எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களை 0.10 % குறைத்து இருக்கிறார்கள். 6 மாதம், 1 வருடம், 2 வருடம், மற்றும் 3 வருட எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.

என்ன பயன்
 

என்ன பயன்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களின் வட்டி விகிதங்கள் குறையலாம். அதுவும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மட்டுமே குறையும். இந்த வட்டி விகித குறைப்பு, பொருளாதாரத்தில் டிமாண்டை அதிகரிக்க உதவுமாம்.

எஸ்பிஐ தரப்பு

எஸ்பிஐ தரப்பு

எஸ்பிஐ வங்கி நிர்வாகம் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களைக் குறைப்பது இதோடு சேர்த்து, 14 ஆவது முறையாம். இந்திய வங்கிகள் கொடுக்கும் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுக்கும் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் தான் மிகக் குறைவு எனவும் எஸ்பிஐ தரப்பில் இருந்தே சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI reduced its MCLR interest rate for short term loans

SBI has reduced its MCLR interest rate for short term loans like over night to three months. It is only for short term loans. It is effective from 10 July 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X