ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வீட்டுக் கடனுக்கான வட்டியை சிபில் ஸ்கோர் அடிப்படையில் அறிவித்துள்ளது. இப்புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் ரெகுலர் ஹோம் லோன் திட்டத்திற்கு 800க்கும் அதிகமான சிபில் ஸ்கோர் வைத்திருந்தால் வீட்டுக் கடனுக்கான வட்டி வட்டி விகிதம் 6.65 சதவீதமாக அறிவித்துள்ளது.
இதேபோல் 750-799 வரையிலான சிபில் ஸ்கோருக்கு 6.75%, 700-749 வரையிலான சிபில் ஸ்கோருக்கு 6.85%, 650-699 வரையிலான சிபில் ஸ்கோருக்கு 6.95%, 550-649 வரையிலான சிபில் ஸ்கோருக்கு 7.15% ஆக அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைக்கப்பட்ட சம்பளத்தில் சற்று அதிகரிப்பு..!

பாரத ஸ்டேட் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன்களைப் பல்வேறு பிரிவுகளின் பல தேவைகளின் அடிப்படையில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. வீட்டுக் கடனைத் தேடும் நபர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வீட்டுக் கடன் வகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன் போன்ற எந்தவொரு கடனுக்கும் விண்ணப்பிக்கும் போது CIBIL மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கிறது, பெரும்பாலான வங்கிகள், விண்ணப்பதாரரின் CIBIL மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கின்றன.

சிபில் ஸ்கோர்
இதனால் சிபில் ஸ்கோரை எப்போதும் மேம்பட்ட நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் ஒருவரின் சிபில் ஸ்டோர் 300 முதல் 900 வரை மாறுபடும். இதை அடிப்படையாக வைத்து தான் தற்போது அனைத்து வங்கிகளும் அனைத்து வகையான கடன்களும் அளிக்கிறது.

சலுகைகள்
எஸ்பிஐ தனது வீட்டுக் கடனில் பிரிவில் ஃப்ளெக்ஸிபே, என்ஆர்ஐ வீட்டுக் கடன், சம்பளம் இல்லாதவர்களுக்கான கடன்கள், மாறுபட்ட சலுகைகள், சிறப்புரிமை, ஷௌர்யா மற்றும் அப்னா கர் போன்ற பலவகையான வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கடன்களைப் பெற முடியும்.

ப்ளோட்டிங் வட்டி விகிதம்
எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் எப்போது ப்ளோட்டிங்-ல் இருக்கும், இதேபோல் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

வீட்டுக்கடன் வகைகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழக்கமான வீட்டுக் கடன்கள், CRE வீட்டுக் கடன்கள், டாப்-அப் கடன்கள், ரியல்டி கடன்கள், பழங்குடியினர் மற்றும் P-LAP ஆகியவற்றின் கீழ் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

6.65 சதவீதம் முதல்
இந்த வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் நீங்கள் வீட்டுக் கடனைப் பெற விரும்பினால், ஏப்ரல் 1, 2022 இன் வட்டி விகிதங்கள் 6.65 சதவீதத்தில் இருந்து அளிக்கப்படுகிறது. உங்கள் CIBIL ஸ்கோரைப் பொறுத்து வட்டி விகிதங்களைச் சரிபார்க்கும் முன் உங்கள் CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கவும்.