எஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி திட்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக வங்கிகளில் ஒரு கணக்கினை துவங்க வேண்டும் என்றாலே, நாம் முதலில் கேட்பது மினிமம் பேலன்ஸ் என்ன? ஏனெனில் வங்கிக் கணக்கினை துவங்க குறிப்பிட்ட தொகையை வைத்துக் கொண்டு தான் துவங்க முடியும். இந்த மினிமம் பேலன்ஸ் இல்லையெனில் சில வங்கிகளில் அபராதத்தினை போட்டு தீட்டுவார்கள்.

சில வங்கிகள் இதன் மூலம் மட்டுமே கோடிக்கணக்கில் பணம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில் வங்கிகளில் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது போட்டி போட்டிக் கொண்டு சேவைகளை செய்து வருகின்றன.

எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

அதிலும் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (state bank of india) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை கொடுத்து வருகின்றது. இதன் மூலம் தனியார் வங்கிகளை விட எஸ்பிஐ-யில் பல வசதிகளை பெற முடிகிறது. வாடிக்கையாளர்களின் வசதிற்கு ஏற்ப, ஏழை மக்கள் அனைவரும் வங்கி கணக்கினை திறந்து அதன் மூலம் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டினை கொடுத்துள்ளது.

இது பழைய திட்டம் தான்

இது பழைய திட்டம் தான்

இது பழைய திட்டம் தான் என்றாலும், இன்றும் பலருக்கும் தெரிவதே இல்லை. இந்த திட்டமானது வேறு எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கு இல்லாதவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆக எஸ்பிஐ-யில் நீங்கள் வங்கி கணக்கு துவங்க நினைத்தால் இதனை விட சிறந்த வழி வேறு வழி இருக்க முடியாது.

பேலன்ஸ் தேவையில்லை

பேலன்ஸ் தேவையில்லை

இது எஸ்பிஐ (SBI), ஹெஸ்டிஎஃப்சி (HDFC bank) வங்கி மற்று ஆக்ஸிஸ் வங்கி (Axis bank) உள்ளிட்ட சில சிறந்த கடன் வழங்குனர்களும் இந்த ஜீரோ பேலன்ஸ் வசதியினை கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது எஸ்பிஐ தான். இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கினை எஸ்பிஐயில் தொடங்க உள்ள சிறந்த வழி ஒன்று உள்ளது. அது தான் BSBD கணக்கு. பேங்க் சேவிங்க்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டினை திறந்து கொண்டால், நீங்கள் எந்த விதமான பேலன்ஸூம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

என்னென்ன வசதிகள் உண்டு?

என்னென்ன வசதிகள் உண்டு?

சரி இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு தானே. மற்ற சேமிப்பு கணக்கினை போன்றதொரு வசதி உள்ளதா? என்றால் நிச்சயம் உண்டு.மற்ற வங்கி கணக்களுக்கு போலவே டெபிட் கார்டுகள் உண்டு. ஆன்லைன் பரிவர்த்தனை வசதியும் உண்டு. ஆக மொத்தத்தில் நீங்கள் இந்த கணக்கில் மற்ற வங்கி கணக்கில் பெறும் பல வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

என்ன ஆதாரம் தேவை

என்ன ஆதாரம் தேவை

இதற்காக நீங்கள் வங்கி கணக்கு தொடங்க வைத்துள்ள அடிப்படை ஆதாரங்களே போதுமானது. மேலும் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கினை நீங்கள் தனியாகவோ அல்லது ஜாய்ன்ட் அக்கவுண்டாகவோ செய்து கொள்ள முடியும். இதற்கென நீங்கள் எந்தவித தொகையும் செலுத்த வேண்டி இருக்காது.

வட்டியும் உண்டு

வட்டியும் உண்டு

எல்லாவற்றை விட தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 3.25 சதவீதம் வட்டி கிடைக்கும். எனினும் இதில் உள்ள மைனஸ் என்னவெனில் இந்த வங்கிக் கணக்கிற்கு உங்களுக்கு காசோலைகள் (cheque book) கிடையாது. மேலும் இதற்கான அடிப்படை விதிமுறையே வேறு எந்த வங்கியிலும் சேமிப்பு கணக்கு இருக்க கூடாது என்பது தான்.

எத்தனை முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ள முடியும்

எத்தனை முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ள முடியும்

ஒரு வேளை நீங்கள் வேறு ஏதேனும் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டு, இந்த ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கினை செய்து கொண்டால் 30 நாட்களில் இந்த Basic Savings Bank Deposit Account க்ளோஸ் ஆகி விடும். அதே ஏடிஎம் கார்டுகளில் அதிகபட்சம் 4 முறை பணம் எந்தவித கட்டணமும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். இது எஸ்பிஐ ஏடிஎம் அல்லது மற்ற வங்கி ஏடிஎம் எதுவாக இருந்தாலும் சரி.

மற்றொரு வசதியும் உண்டு

மற்றொரு வசதியும் உண்டு

மேலும் இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படும். இதற்காக வருடாந்திர பராமரிப்பு கட்டணம் எதுவும் கிடையாது. இது மட்டும் அல்ல, எஸ்பிஐயில் மற்றொரு ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டு வசதியும் உள்ளது. இது குழந்தைகளுக்கானது. இது Pehla Kadam and Pehli Udaan savings account தான். இதனை பற்றிய விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI zero balance savings account, here all details to know

SBI zero balance a/c.. State bank of india zero balance savings account can be opened singly, jointly, or with either.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X