அம்சமான வட்டி கொடுக்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD திட்டங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ் கிட்டத்தட்ட 40,000 புள்ளிகளைத் தொட்டுவிட்டது. மீண்டும் பழைய படி பொருளாதாரம் சுழலத் தொடங்கி இருக்கிறது.

 

இந்திய பொருளாதாரத்தில், வியாபார நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழில்முனைவோர்கள், குறைந்த வட்டியில் கடன் வாங்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில், ஆர்பிஐ தன் ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்தது. இதனால் இந்தியாவில் பல வங்கிகளின் கடன் வட்டி விகிதங்கள் குறைந்து இருக்கிறது.

அதே நேரத்தில், பல முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 6 சதவிகிதம் கூட வட்டி கொடுக்கவில்லை.

எஸ்பிஐ உதாரணம்

எஸ்பிஐ உதாரணம்

உதாரணமாக எஸ்பிஐ வங்கியில், பொது மக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் அதிகபட்சமாகவே 5.4% தான் வட்டி கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான சூழலில், 7.5 சதவிகிதத்துக்கு மேல் வட்டி கொடுக்கும் சில ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி டெபாசிட் திட்டங்கள் மற்றும் அதன் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தேர்வு செய்து, அதிக வட்டியை அனுபவிக்க வாழ்த்துக்கள்.

Jana Small Finance Bank latest FD interest rates

Jana Small Finance Bank latest FD interest rates

பொது மக்களுக்கு, 2 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் செய்யும் பணத்துக்கு, கடந்த 11 ஆகஸ்ட் 2020 முதல், கீழ் காணும் வட்டி விகிதங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்.

7-14 days 3.50%

15-60 days 4.25%

61-90 days 5.50%

91-180 days 6.00%

181-364 days 6.50%

1 Year[365 Days] 6.90%

> 1 Year - 2 Years 7.00%

>2 Years-3 Years 7.50%

> 3 Year- < 5 Years 7.00%

> 5 Years - 10 Years 6.50%

Utkarsh Small Finance Bank latest FD interest rates
 

Utkarsh Small Finance Bank latest FD interest rates

இன்று (01 செப்டம்பர் 2020) முதல், இந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில், 2 கோடி ரூபாய்க்குள் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு, கீழ் காணும் வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள்.

7 Days to 45 Days 3.25%

46 Days to 90 Days 3.75%

91 Days to 180 Days 4.50%

181 Days to 364 Days 6.50%

365 Days to 699 Days 7.25%

700 Days 7.50%

701 Days to 3652 Days 7.25%

Suryoday Small Finance Bank latest FD interest rates

Suryoday Small Finance Bank latest FD interest rates

இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், கடந்த 01 ஆகஸ்ட் 2020 முதல், 2 கோடி ரூபாய்க்குள், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும், பொது மக்களுக்கு, கீழ் காணும் வட்டியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

7 days to 45 days 4.00%

46 days to 90 days 5.00%

91 days to 6 months 5.50%

Above 6 months to 9 months 6.50%

Above 9 months to less than 1 Year 7.00%

1 Year to 2 years 7.25%

Above 2 Years to 3 Years 8.10%

Above 3 Years to less than 5 Years 7.75%

5 Years 8.25%

Above 5 years to 10 years 7.25%

North East Small Finance Bank latest FD interest rates

North East Small Finance Bank latest FD interest rates

இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கில், 01 செப்டம்பர் 2020 முதல், 2 கோடி ரூபாய் வரைக்குமான, பொது மக்கள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, கீழ் காணும் வட்டி விகிதங்களைக் கொடுகிறார்கள்.

7-90 Days 4.00%

91-180 Days 4.50%

181-364 Days 5.25%

365 days to 729 days 7.00%

730 days to less than 1095 days 7.50%

1096 days to less than 1825 days 6.50%

1826 days to less than 3650 days 6.25%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

small finance banks which are giving 7.5 percent Fixed deposit interest rates

We have listed out the small finance banks, which are giving 7.5 percent fixed deposit interest rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X