சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டியில் மாற்றம் இல்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயல் வரப்புகளில் வேலை செய்யும் விவசாயிகள் தொடங்கி சொற்பமாக மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பங்கள் வரை, இந்தியாவின் சாதாரணமான பின்புலங்களைக் கொண்ட, ஏழை எளிய மக்கள் எல்லாம் பிழைத்துக் கொள்ள இருக்கும் முதலீட்டுத் திட்டங்கள் தான் அரசின் இந்த சிறு சேமிப்புத் திட்டங்கள்.

 

5 வருட ரெக்கரிங் டெபாசிட், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், 5 வருட மந்த்லி இன்கம் திட்டம், 5 வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிஷான் விகாஸ் பத்திரம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம்... போன்ற வெகு சில திட்டங்களுக்கு அரசு இன்னும் நல்ல வட்டி வருமானத்தைக் கொடுத்து வருகிறார்கள்.

சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டியில் மாற்றம் இல்லை!

கடந்த 27-05-2020 அன்று, இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, தன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில், 5 - 10 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கே 5.4 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கிறார்கள்.

மூத்த குடிமக்கள் என்றால் போனால் போகட்டும் என இரக்கம் காட்டி, 5 - 10 வருட டெபாசிட் திட்டத்துக்கு 6.2 சதவிகிதம் கொடுக்கிறார்கள். அதை எல்லாம் ஒப்பிடும் போது இந்த சிறு சேமிப்புத் திட்டங்கள் ஓரளவுக்கு நல்ல வட்டியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

01 ஜூலை 2020 முதல் 30 செப்டம்பர் 2020 வரையான 2020 - 21 நிதி ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டில் எந்த திட்டத்துக்கு எவ்வளவு வட்டி என்பதைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். இந்த 2020 - 21 நிதி ஆண்டில் இரண்டாவது காலாண்டுக்கு, எந்த திட்டத்துக்கும் வட்டியை மாற்றவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

InstrumentInterest rate (%) from July 1, 2020Compounding frequency
Savings deposit4Annually
1 year Time Deposit5.5Quarterly
2 year Time Deposit5.5Quarterly
3 year Time Deposit5.5Quarterly
5 year Time Deposit6.7Quarterly
5-year Recurring Deposit5.8Quarterly
5-year Senior Citizen Savings Scheme7.4Quarterly and Paid
5-year Monthly Income Account6.6Monthly and Paid
5-year National Savings Certificate6.8Annually
Public Provident Fund7.1Annually
Kisan Vikas Patra6.9Annually
Sukanya Samriddhi Yojana7.6Annually
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Small saving schemes interest rates not changed in FY21 2nd quarter

The government Small saving schemes interest rates not changed for the financial year 2020 - 21 second quarter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X