உங்களது நிரந்தர வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில் பல வங்கிகள் தங்களது கடன் விகிதங்களுக்கான வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன. இது நல்ல விஷயம் தான் என்றாலும், மறுபுறம் சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.

 

இதன் காரணமாக நாளுக்கு நாள் முன்னணி வங்கிகளின் வட்டி விகிதமானது குறைந்து கொண்டே செல்கிறது.

இது பலருக்கும் ஏமாற்றமான ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில் பலரின் அடிப்படை ஆதாரமே இந்த வட்டியாகத் தான் இருந்து வருகிறது.

வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்

வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்

எனினும் தங்களது பணமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் வட்டியும் சற்று அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி. சில வங்கிகள் நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை குறைவாகவே வழங்கி வருகின்றன. எனினும் சில வங்கிகள் 9 சதவீதம் வரை வைப்பு நிதிகளுக்கு வட்டியினை வழங்கி வருகின்றன.

எந்த வங்கியில் அதிக வட்டி?

எந்த வங்கியில் அதிக வட்டி?

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது மூன்று சிறிய வங்கிகள் தான். ஒன்று உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, அடுத்ததாக சூர்யோதே சிறு நிதி வங்கி, இதனையடுத்து வட கிழக்கு சிறு நிதி வங்கி இந்த மூன்று சிறு வங்கிகளும் தான் 9 சதவீதம் வரை வட்டியினை வழங்கி வருகின்றன.

பெரிய வங்கிகளில் குறைவு தான்?
 

பெரிய வங்கிகளில் குறைவு தான்?

பல பெரிய முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதங்களை குறைத்துள்ள நிலையில், மேற்கண்ட இந்த சிறு வங்கிகள் அதிக வட்டி விகிதத்தினை வழங்கி வருகின்றன. அதிலும் மூத்த குடிமக்களுக்கு சாதாரண மக்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தினை விட 50 அடிப்படை புள்ளிகள் அதிகம்.

வட்டியை ஒப்பிட்டு பாருங்கள்

வட்டியை ஒப்பிட்டு பாருங்கள்

இதே முன்னணி பெரிய வங்கிகளான எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கியினையும், ஆக்ஸிஸ் வங்கியிலும் கூட இந்த வட்டி விகிதங்கள் குறைவு. ஆக இவற்றுடன் ஒப்பிடும்போது மேற்கண்ட சிறு நிதி வங்கிகளில் லாபம் அதிகம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். எனவே உங்களது பணத்தினை எந்தவொரு வங்கியிலும் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்று இரு முறை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கு சரியான ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

உத்கர்ஷ் சிறு நிதி வங்கியில் எவ்வளவு வட்டி?

உத்கர்ஷ் சிறு நிதி வங்கியில் எவ்வளவு வட்டி?

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கு 3.50% வட்டி விகிதம்.

46 நாள் முதல் 90 நாட்கள் வரை - 4%

91 நாள் முத 180 நாட்கள் வரை - 4.50%

181 நாள் முதல் 364 நாட்கள் வரை - 6.50%

365 நாள் முதல் 699 நாட்கள் வரை - 7.75%

700 நாட்களுக்கு - 8%

701 நாள் முதல் 3652 நாட்கள் வரை 7.75%

சூர்யோதே சிறு நிதி வங்கியில் வட்டி?

சூர்யோதே சிறு நிதி வங்கியில் வட்டி?

7 நாள் முதம் 14 நாட்கள் வரையில் - 4% வட்டி விகிதமும்,

15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 4%

46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 5%

91 நாள் முதல் 6 மாதம் வரையில் - 5.50%

6 மாதம் முதல் 9 மாதம் வரையில் - 6.50%

9 மாதம் முதல் 1 வருடத்திற்குள் - 7%

1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் 7.25%

2 வருடம் முதல் 3 வருடத்திற்குள்- 7.50%

3 வருடம் முதல் 5 வருடத்திற்குள்- 7.75%

5 வருடத்திற்கு- 9%

5 வருடத்திற்கு மேல் - 10 வருடங்களுக்குள் - 7.255 வட்டியும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வட கிழக்கு சிறு நிதி வங்கியில் வட்டி விகிதம்?

வட கிழக்கு சிறு நிதி வங்கியில் வட்டி விகிதம்?

இந்த வட கிழக்கு சிறு நிதி வங்கியில் (North East Small Finance Bank)

7 நாள் முதம் 14 நாட்கள் வரையில் - 4% வட்டி விகிதமும்,

15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 4%

30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 4%

46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.25%

91 நாள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.5%

181 நாள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.5%

365 நாள் முதல் 729 நாட்கள் வரையில் 7.50%

730 நாள் முதல் 1095 நாட்கள் வரையில் - 8% வட்டியும்,

1096 நாள் முதல் 1825 நாட்கள் வரையில் - 7% வட்டியும்

1826 நாட்கள் முதல் 3650 நாட்கள் வரையில் 6.5% வட்டியும் வழங்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some small Banks are offer up to 9% interest in FD, please check here details

Top FD interest rates.. Suryoday Small Finance Bank, North East Small Finance Bank, Utkarsh Small Finance Banks are offered up to 9% interest on FDs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X