அவசர தேவைக்கு நகைக்கடன்.. எஸ்பிஐயில் யார் யார் பெற முடியும்.. வட்டி விகிதம் எவ்வளவு? #Gold loan

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகைக்கடன் என்பது மிகவும் பாதுகாப்பான, விரைவில் கிடைக்கக்கூடிய ஒரு கடன் திட்டம். இன்றைய நாளில் பல குடும்பங்களில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

 

இந்தியாவில் உள்ள பொதுவான கடன் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். திடீர் மருத்துவம், விவ்சாய செலவு, தொழில் செலவு என பல அவசர காலத்திலும், ஆபத்பாந்தவனாக கைகொடுத்து உதவுவது தங்கம் தான்.

ஆனால் அந்த கடனை பெறுவதும் ஒரு பாதுகாப்பான, வட்டி குறைவான இடத்தில் பெற வேண்டும் என்பதே பலரின் எண்ணமே. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஸ்பிஐயின் தங்க நகைக்கடன் தான். சரி வாருங்கள் பார்ப்போம்.

தங்க நகை கடன்

தங்க நகை கடன்

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் தங்க நகைக்கடன்களை வழங்கி வருகின்றது. தங்க ஆபரணங்கள் மற்றும் காயின்கள் ஆகியவற்றையும் நீங்கள் இங்கு அடகு வைத்துக் கடன் பெற முடியும். அதுவும் குறைந்த வட்டி விகிதத்தில் பெற முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்த ஆவணங்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு வட்டி விகிதம்

எவ்வளவு வட்டி விகிதம்

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான இந்த வங்கியில் நகைக்கடனுக்கு வட்டி விகிதம் 7.50% ஆகும். இதே இங்கு செயல்பாட்டுக் கட்டணம் என்பது பூஜ்ஜிய கட்டணமாகும். இது தவிர இன்னும் பல சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனை பற்றிய விவரங்களுக்கு 7208933143 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும், இதே 7208933145 என்ற எண்ணுக்கு GOLD என்றும் மேசேஜ் அனுப்பியும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

யார் யார் பெற முடியும்?
 

யார் யார் பெற முடியும்?

எஸ்பிஐயில் இந்த நகை கடனை குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் பெற்றும் கொள்ளலாம். இங்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையில் பெற்றுக் கொள்ள முடியும். செயல்பாட்டு கட்டணம் என்பது யோனோ வழியாக அப்ளை செய்பவர்களுக்கு இல்லை. எனினும் மற்றவற்றவர்களுக்கு கடன் தொகையில் 0.25% மற்றும் குறைந்தபட்சம் ஜிஎஸ்டி 250 ரூபாயாகும்.

என்னென்ன நகைக்கடன்

என்னென்ன நகைக்கடன்

திரும்ப செலுத்தும் காலம் 36 மாதம் வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. இது gold loan, liquid gold loan, bullet repayment gold loan என்ற மூன்று வகையில் பெற முடியும். இதே Realty Gold Loan என்ற கடனை எஸ்பிஐ ஹவுஸிங் லோன் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் உங்களது இரண்டு போட்டோக்கள், அடையாள அட்டை மற்றும் முகவரி அட்டை உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State bank of India gold loan, Eligibility, interest rate and other details Slide Para 3

State bank if india latest updates.. State bank if india gold loan, Eligibility, interest rate and other details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X