நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State bank of india) தனது புதிய காசோலை (cheque) விதிகளை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 1ல் இருந்து தான் புதிய காசோலைகளுக்கான விதிகளை மாற்றம் செய்தது.
இதனையடுத்து, தற்போது அதனடிப்படையில் எஸ்பிஐ தனது காசோலை விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
டாடாவுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி யாராலும் அசைக்க முடியாது..!

ரிசர்வ் வங்கி என்ன சொன்னது?
அதெல்லாம் சரி, ஆர்பிஐ என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எஸ்பிஐ அதனை எப்படி அமல்படுத்தியுள்ளது வாருங்கள் பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் படி, இந்த திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத் தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். இது வாடிக்கையாளரின் விருப்பப்படி செய்ய வேண்டும் என்று கூறியது.

ரிசர்வ் வங்கியின் செக் விதிமுறைகள்
இந்த விதிமுறைகள் காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், மோசடிகளைத் தடுப்பதற்கும் உதவும். ஏனெனில் மீண்டும் ஒரு முறை வங்கி வாடிக்கையாளர்களிடம் தகவல்கள் உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக
காசோலையை வழங்குபவர், காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை எஸ்எம்எஸ் (SMS), மொபைல் பயன்பாடு, இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்கலாம்.

தேவையான நேரத்தில் நடவடிக்கை
இதன் பிறகு காசோலை செலுத்தும் முன் மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் தகவல் மிஸ்மேட்ச் ஆகிறது என்றால், அந்த பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படும். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

விதிமுறைகள் கட்டாயமாகலாம்
மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தும். எனினும் 5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கும் வங்கிகள் இந்த விதிமுறைகளை கட்டாயமாக்கலாம்.

பாசிட்டிவ் பே சிஸ்டம்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சி.டி.எஸ்ஸில் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி, வங்கிகளுக்கு அதைக் கிடைக்கச் செய்யும். 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும். அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தும். எஸ்எம்எஸ், வங்கிகளில் விளம்பரம் செய்தல் போன்றவை வழியாக இந்த முறை குறித்து, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

எஸ்பிஐ-யின் விதிமுறைகள்
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, எஸ்பிஐ அதிக மதிப்புடைய காசோலைகள் குறித்தான விவரங்களை, மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் காசோலையை வழங்குபவர். எஸ் எம் எஸ், மொபைல் ஆஃப், இணைய வங்கி, ஏடிஎம்களில் இது குறித்து தகவல்களை தெரிவிக்கலாம். அதோடு பணம் எடுப்பவர்களின் விவரங்கள், காசோலை கொடுப்பவர் கொடுத்த விவரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பார்க்கப்படும்.
அப்படி விசாரணை செய்யும் போது, விவரங்கள் எதுவும் தவறாக தெரியும் பட்சத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.