பெற்றோர்-களுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை.. உயில் எழுதும்போது 'இதை' மறந்துடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சம்பாதித்துச் சிறுகச் சிறுக சேமித்து வாங்கிய சொத்துக்களைக் குழந்தைகளுக்குப் பரிசாக அளிக்கும் போது பெற்றோர்கள், முதுமை காலத்தில் தங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயம் சொத்துக்களைத் தானமாகக் கொடுக்கும் பத்திரத்தில் எழுதி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுவாகச் சொத்துக்களை ஒருவரின் பெயரில் இருந்து மாற்றுவதற்கு அதிகப்படியான பத்திர செலவுகள் ஆகும். அதைப் பெற்றோர்கள் - குழந்தைகள், தாத்தா பாட்டி - பேரன் பேத்தி, குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் gift deed அதாவது பரிசாக அளிப்பதாகப் பத்திர பதிவு செய்யலாம்.

இதற்குக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்கள் குறைவு என்பதால் பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்தும் நிலையில் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.

ஆனந்த கண்ணீரில் ஊழியர்கள்.. தீபாவளி பரிசாக கார் பைக்.. அசத்திய சென்னை நகைகடை உரிமையாளர்..! ஆனந்த கண்ணீரில் ஊழியர்கள்.. தீபாவளி பரிசாக கார் பைக்.. அசத்திய சென்னை நகைகடை உரிமையாளர்..!

 பெற்றோர்கள் - பிள்ளைகள்

பெற்றோர்கள் - பிள்ளைகள்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கடைசிக் காலம் வரையில் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் தங்களுடைய சொத்துக்களைக் குழந்தைகளுக்குப் பரிசாக gift deed மூலம் அளிக்கின்றனர். ஆனால் பல பிள்ளைகள் தங்களது பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ளாத பிரச்சனைகள் சமீபத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

சட்டம்

சட்டம்

முதுமையில் தங்கள் குழந்தைகளால் புறக்கணிக்கப்படும் அனைத்து பெற்றோருக்கும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ன் படி நீதிமன்றத்திற்குச் சென்று கொடுத்த சொத்துக்களைப் பெறுவதற்கு உரிமை அளிக்கிறது.

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

ஆனால் தற்போது வெளியாகியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, குழந்தைகளுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட சொத்துக்களைத் திரும்பப் பெறும் உரிமையை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதை இந்திய பெற்றோர்களுக்கு எச்சரித்துள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கையைப் பெற்றோர்கள் கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குருகிராம்

குருகிராம்

குருகிராமை சேர்ந்த பெண் (தாயார்) ஒருவர் தனது குழந்தைகளுக்குச் சில சொத்துக்களைப் பரிசாக அளித்துள்ளார். பின்னர் குழந்தைகள் தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லை என்று கூறி பரிசு பத்திரத்தை அதாவது gift deed-ஐ பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ன் படி ரத்து செய்யுமாறு பராமரிப்புத் தீர்ப்பாயத்தை நாடினார்.

 மே 2018 ரத்து

மே 2018 ரத்து

தீர்ப்பாயம் குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறிந்து மே 2018 இல் பரிசுப் பத்திரத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு உள்ளது.

 மேல் முறையீடு

மேல் முறையீடு

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் ஓகா புதன்கிழமை முந்தைய தீர்ப்பை மாற்றியமைத்தனர், பரிசுப் பத்திரத்தில் அவரது மூன்று குழந்தைகள் (2 மகள்கள் மற்றும் 1 மகன்) அவரது சொத்தை பரிசாக வழங்குவதற்குப் பதிலாக வயதான தாயாரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற வெளிப்படையான விதிகள் எதுவும் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. எனவே, பரிசுப் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியாது என்று பெஞ்ச் கூறியது.

 மூத்த குடிமக்கள் உஷார்

மூத்த குடிமக்கள் உஷார்

மூத்த குடிமக்கள் தங்களது சொத்துக்களைப் பிரித்துத் தங்களுடைய அன்பானவர்களுக்கும் ஆதரவானவர்களுக்கும் கொடுக்கும் போது மூத்த குடிமக்களைப் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை கட்டாயம் எதுவும் இல்லை, ஆனால் நீதிமன்றத்திற்கு வரும் போது இத்தகைய நிபந்தனை கட்டாயம் என நீதிபதிகள் சஞ்சய் கே கவுல் மற்றும் ஏஎஸ் ஓகா தெரிவித்துள்ளனர்.

 புரிதல், நம்பிக்கை, எதிர்பார்ப்பு

புரிதல், நம்பிக்கை, எதிர்பார்ப்பு

நீதிபதிகள் சஞ்சய் கே கவுல் மற்றும் ஏஎஸ் ஓகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் புதன்கிழமை, மூத்த குடிமக்கள் பொதுவாகத் தங்கள் குழந்தைகளுக்குச் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை முதுமை காலத்தில் பிள்ளைகள் அவர்களை நன்கு கவனிப்பார்கள் என்ற புரிதல், நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உடன் தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்.

 கட்டாயம் தேவை

கட்டாயம் தேவை

இப்படிச் சொத்துக்களைப் பிரித்துக்கொடுக்கும் போது முதுமை காலத்தில் தங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயம் சொத்துக்களைத் தானமாகக் கொடுக்கும் பத்திரத்தில் எழுதி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Supreme Court warns Parents put this condition in writing in gifting property deed

Supreme Court warns Parents put this condition in writing in gifting property deed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X