மூத்த குடிமக்களுக்கான சூப்பர் FD திட்டங்கள்! வட்டி எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூத்த குடிமக்களா நீங்கள்? வருமான வரியில் இருந்து கழிவு பெற வேண்டுமா? அதோடு நல்ல வட்டி வருமானமும் ஈட்ட வேண்டுமா? உங்களுக்கும் இருக்கவே இருக்கிறது பிரிவு 80 சி. இந்த சட்டப் பிரிவின் கீழ் வருமான வரி சலுகைகளை வழங்கும் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.

 

அந்த திட்டங்களில், வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்களும் ஒன்று. வரி சேமிப்பு FD திட்டங்களின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்.

மூத்த குடிமக்கள் தங்களின் வருமானத்துக்கும் பெரும்பாலும், வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை நம்பி இருப்பார்கள். ஆனால் தற்போது இந்திய வங்கிகள், தங்களின் ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கு நல்ல வட்டி விகிதங்களைக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறார்கள்.

7 %-க்கு மேல் வட்டி

7 %-க்கு மேல் வட்டி

தற்போது, வீழ்ச்சியடைந்து வரும் வட்டி விகிதங்களுக்கு மத்தியில், அவர்கள் தங்கள் சேமிப்பை ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு, வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து 7 %-க்கு மேல் வட்டி வருமானத்தை ஈட்ட முடியும். மேலும் இந்த வரி சேமிப்பு டெபாசிட்களில் முதலீடு செய்து ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை, வருமான வரியில் இருந்து விலக்கு கோரலாம்.

ரிஸ்க் எப்படி

ரிஸ்க் எப்படி

ஈக்விட்டி முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளை ஒப்பிடும் போது, வங்கிகளில் இருக்கும் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் குறைந்த ரிஸ்க் கொண்டவைகளே! அதோடு 5 லட்சம் ரூபாய் வரையான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, அரசு கேரண்டி வேறு இருக்கிறது. எனவே, மூத்த குடிமக்கள் தைரியமாக, நல்ல வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். சரி இந்த வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கிடைக்கின்றன.

பொதுவாக வட்டி விகிதம் என்ன
 

பொதுவாக வட்டி விகிதம் என்ன

பொதுவாக, ஐந்து ஆண்டு வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.3 - 5.5 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்தால் கூடுதலாக 0.5 % வட்டி கிடைக்கலாம். ஆனால் நாம் காணப் போகும் மூத்த குடிமக்களுக்கான வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 7.00 - 7.25 சதவிகிதம் வரை வட்டி கொடுக்கிறார்கள்.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பட்டியல் 1

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பட்டியல் 1

1. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%

2. யெஸ் பேங்க் டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%

3. இண்டஸ் இண்ட் பேங்க் பேங்க் டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பட்டியல் 2

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பட்டியல் 2

4. ஆர்பிஎல் வங்கி டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%

5. ஏ யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் டேக்ஸ் சேவிங்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.00% வட்டி கொடுக்கிறார்கள். மூத்த குடிமக்கள் இந்த திட்டங்களைப் பயன்படுத்தி அதிக வட்டி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

tax-saving fixed deposits for Senior citizens interest rates above 7 percent

As per income tax act, there are many tax-saving fixed deposits are available. We have listed out few tax saving FD schemes with more than 7% interest rate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X