குறைந்த வட்டியில் பர்சனல் லோன்.. வட்டி விகிதம் எவ்வளவு.. எந்த வங்கியில் எவ்வளவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டங்களில் மருத்துவ அவசர காலங்கள், வீடு மறுசீரமைப்பு, குழந்தைகளின் மேல்படிப்பு, பயண செலவு, திருமண செலவு உள்ளிட்ட பல செலவுகள் என எந்த அவசர தேவையானாலும் முதலில் நாம் நினைப்பது பர்சனல் லோன் என்ற தனிநபர் கடன் தான்.

 

கொரோனாவின் வருகைக்கு பிறகு ரெப்போ விகிதமானது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது.

ரூ.16 லட்சம் கோடியை காலி செய்த கொரோனா.. வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய 10 முக்கிய காரணிகள்!

இப்படி வட்டி குறைவுக்கும் மத்தியில் தீபாவளி சமயத்தில் வங்கிகளும் வட்டி விகித குறைப்பு உள்ளிட்ட பல கடன் சலுகைகளை அளித்தன. குறிப்பாக செயல்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களும் குறைந்துள்ளன. தள்ளுபடி செய்துள்ளன.

யூனியன் வங்கியில் வட்டி

யூனியன் வங்கியில் வட்டி

யூனியன் வங்கியில் 5 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனுக்கு, வட்டி விகிதம் 8.9% ஆகும். 5 ஆண்டுகால அவகாசமுள்ள கடனுக்கு இஎம்ஐ விகிதமானது இதன் மூலம் 10,355 ரூபாயாக தொடங்கும்.

இதே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் இதே வட்டி விகிதம் தான். எனினும் இஎம்ஐ விகிதமானது சற்று மாறுபடலாம்.

Array

Array

இதே இந்தியன் வங்கியில் வட்டி விகிதமானது 9.05%ல் இருந்து ஆரம்பமாகிறது. மாத தவணை தொகையானது 10,391 கோடி ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம்.

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் வட்டி விகிதம் 9.45%ல் இருந்து ஆரம்பமாகிறது. இங்கு மாத தவணை தொகையானது 10,489 ரூபாயாகும்.

Array
 

Array

பஞ்சாப் & சிந்த் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கியில் வட்டி விகிதமானது 9.5%ல் இருந்து தொடங்குகிறது. இதன் மூலம் 5 லட்சம் ரூபாய்க்கான கடன் தொகைக்கு, 5 ஆண்டுகால அவகாசம் எனில், தவணை தொகை 10,501 ரூபாயாகும்.

எஸ்பிஐ-ல் என்ன விகிதம்

எஸ்பிஐ-ல் என்ன விகிதம்

இதே நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் தீபாவளி பருவத்தில் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் பர்சனல் லோனுக்கான வட்டி வீதம் 9.6% ஆக உள்ளது. இதன் மூலம் இஎம்ஐ விகிதமானது 10,525 ரூபாயாக இருக்கும்.

**** இந்த மாத தவணை தொகையானது சற்றே மாறுபடலாம். இதில் மற்ற கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These five banks offer the cheapest personal loans

These five banks offer the cheapest personal loans/ குறைந்த வட்டியில் பர்சனல் லோன்.. வட்டி விகிதம் எவ்வளவு.. எந்த வங்கியில் எவ்வளவு.
Story first published: Sunday, November 28, 2021, 14:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X