எஸ்பிஐ வங்கி சேவையை ஈஸியா பெற வேண்டுமா.. அப்படின்னா இதை பாலோ பண்ணுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அதன் வங்கி சேவைகளை எளிதாக பெற, சமீபத்தில் சில டோல் பரீ எண்களை அறிவித்தது.

இதன் மூலம் எஸ்பிஐ-யில் சில நிதி சேவைகளை மிக எளிதில் பெறலாம். அதனை டோல் ப்ரீ எண்களை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சேவை வங்கி வேலை நாட்களில் மட்டும் அல்ல, வங்கி வேலை நேரத்தில் மட்டும் அல்ல, எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..! இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

எஸ்பிஐ டோல் ப்ரீ எண்

எஸ்பிஐ டோல் ப்ரீ எண்

மொத்தத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையினை வழங்கும் எனலாம். இதற்காக எஸ்பிஐ டோல் ப்ரீ எண்ணாக 1800 1234-ஐ அறிவித்தது. இந்த எண் மூலம் வீட்டில் இருந்து கொண்டே சில வங்கி சேவைகளை எளிதில் பெற முடியும்.

 என்னென்ன சேவைகளை பெறலாம்?

என்னென்ன சேவைகளை பெறலாம்?

குறிப்பாக இந்த டோல் ப்ரீ எண் மூலம் எஸ்பிஐ வங்கிக் கணக்கின் இருப்பு மற்றும் கடைசியாக செய்த 5 பரிவர்த்தனைகள், ஸ்டேட்மெண்ட்-ஐ பெற முடியும்.

எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பிளாக்கிங் & வங்கிகளில் இருந்து வாடிக்கையாளார்களுக்கு அனுப்பப்பட்ட கார்டுகளின் நிலை, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பட்ட காசோலைகளின் நிலை, டிடிஎஸ் விவரங்கள், டெபாசிட் வட்டி சான்றிதழ்கள் போன்ற பல வங்கி சேவைகளை பெறலாம்.

 

டோல் ப்ரீ எண்?
 

டோல் ப்ரீ எண்?

எஸ்பிஐ ஹெல்ப் லைன் எண்களில் 1800 1234,1800 11 2211, 1800 425 3800, 100 2100 அல்லது 080 - 26599990 எண்கள் உள்ளன. இந்த எண்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து லேண்ட்லைன்கள், மொபைல் போன்களில் இருந்து இந்த இலவச எண்களை அணுகலாம்.

முந்தைய டோல் ப்ரீ எண்?

முந்தைய டோல் ப்ரீ எண்?

மேலே குறிப்பிட்ட எண்கள் தவிர, தனி நபர்கள் கட்டணமில்லா எண்: 1800 2100, இலவச எண்: 1800 425 3800 மற்றும் கட்டண எண் 1800 425 3800 அல்லது 080 - 26599990 ஆகியவற்றையும் அழைக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களது புகார் செய்யவும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இது தவிர அங்கீகரிகப்படாத பரிவர்த்தனைகளை பற்றி புகாரளிக்க, எஸ்பிஐ வாடிக்கையாளார்கள் 1800 11 1109. 9449112211 அல்லது 080 - 26599990 என்ற எண்ணிலும் அழைக்கலாம். இந்த எண்களையும் நாட்டில் உள்ள அனைத்து லேண்ட்லைன்கள், மொபைல் போன்களில் இருந்து இந்த இலவச எண்களை அணுகலாம்.

 

எஸ்பிஐ மெயில் ஐடி

எஸ்பிஐ மெயில் ஐடி

எஸ்பிஐ வாடிக்கையாளார்கள் தங்கள் புகார்களுக்கு டோல் ப்ரீ நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை அல்லது மகிழ்ச்சியடையவில்லை எனில், மெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளலாம். இதற்காக customercare@sbi.co.in அல்லது contactcentre@sbi.co.in என்ற மெயில் ஐடிக்கும் மெயில் அனுப்பலாம். தனி நபர்கள் தங்களது புகாரை வெற்றிகரமாக அனுப்பிய பிறகு எஸ் எம் எஸ் அல்லது மெயிலையும் பெறுவர்.

எஸ்பிஐ எஸ் எம் எஸ் அலர்ட் நம்பர்

எஸ்பிஐ எஸ் எம் எஸ் அலர்ட் நம்பர்

எஸ்பிஐ வாடிக்கையாளார்கள் எஸ் எம் எஸ் அலர்ட் மூலமாகவும் சில சேவைகளை பெறலாம்.உங்களது மொபைலில் இருந்து HELP என டைப் செய்து, 918108511111 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். வங்கி வழங்கும் சேவைகளில் திருப்தி இல்லாதவர்கள் UNHAPPY என 8008 20 20 20 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். உங்களது ஏடிஎம் கார்டினை பிளாக் செய்ய 567676 என்ற எண்ணிக்கும் எஸ் எம் எஸ் அனுப்பலாம். இதனை BLOCK XXXX என அனுப்ப வேண்டும். இதில் XXXXஎன்பது உங்களது கார்டின் கடைசி 4 இலக்க எண் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Toll Free numbers and SMS, Mail ID to avail SBI banking services : How to get services ?

Toll Free numbers and SMS, Mail ID to avail SBI banking services : How to get services ?/எஸ்பிஐ வங்கி சேவையை ஈஸியா பெற வேண்டுமா.. அப்படின்னா இதை பாலோ பண்ணுங்க..!
Story first published: Wednesday, August 3, 2022, 16:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X