பிக்ஸட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. டாப் 10 வங்கிகளில் எவ்வளவு வட்டி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நம்மில் அனைவருக்கும் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான்.

 

அப்படி செய்யும் டெபாசிட்களுக்கு எந்த வங்கியில் என்ன வட்டி என்று பலருக்கும் தெரியாது? அதனை தெரிந்து கொள்ளவும் பலர் விரும்புவதில்லை. தங்களது பகுதியில் எந்த வங்கி உள்ளதோ, அந்த வங்கியில் டெபாசிட் செய்து விடுகின்றனர்.

ஆனால் ஒரு முறை டெபாசிட் செய்யும் முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? என்பதை தெரிந்து கொண்டு டெபாசிட் செய்யலாம் என நினைப்பவர்களுக்குத் தான் இந்த கட்டுரை.

வங்கி டெபாசிட்

வங்கி டெபாசிட்

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பதே மிக அரிதான விஷயமாக உள்ளது. ஏனெனில் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். அதிலும் சில குடும்பங்களில் கடன் வாங்கி செலவு செய்யும் நிலையும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் மீறியும் குருவி சேர்ப்பது போல் சேர்த்து, ஏதோ ஒன்றில் முதலீடு செய்வதை விட, கணிசமான வருமானம் தரக்கூடிய, முதலீட்டுக்கு பங்கமில்லாத வங்கிகள் டெபாசிட் செய்யலாம்.

மூத்த குடி மக்களுக்கு இது தான் சிறந்த ஆப்சன்

மூத்த குடி மக்களுக்கு இது தான் சிறந்த ஆப்சன்

அதிலும் மூத்த குடிமக்களுக்கு வேறு ஆப்சனே வேண்டாம். ஏனெனில் அவர்களுக்கென இருக்கும் அடிப்படை ஆதாரம் பலருக்கும் இதுவாகத் தான் இருக்கும். ஆக அப்படி இருக்கையில் அப்படி முதலீட்டில் ரிஸ்க்கே தேவையில்லை. அதிலும் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்குவதை விட வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாக கொடுக்கின்றன.

ஒப்பிட்டு பார்க்கலாம்
 

ஒப்பிட்டு பார்க்கலாம்

இந்த நிலையில் தான் சில ஒப்பீடுகளை கொடுத்துள்ளோம். நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தரவானது பேங்க் பஜார் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களானது 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையில் வழங்கப்படுகிறது. இது செப்டம்பர் 2020ல் வழங்கப்படும் வட்டி விகிதங்களை பட்டியலிட்டுள்ளது. இது 2 கோடி ரூபாய்க்கு கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான விகிதமாகும்.

எஸ்பிஐ & ஐசிஐசிஐ வங்கி

எஸ்பிஐ & ஐசிஐசிஐ வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு, பொதுமக்களுக்கு 2.90% முதல் 5.40% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.20% வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதே ஐசிஐசிஐ வங்கியில் பொதுமக்களுக்கு 2.50% முதல் 5.35% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 3.00% முதல் 5.85% வரை வட்டி வழங்கப்படுகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி & பஞ்சாப் நேஷனல் வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி & பஞ்சாப் நேஷனல் வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கியில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 2.50% முதல் 5.50% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 3.00% முதல் 6.25% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 3.00% முதல் 5.30% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 6.05% வரை வட்டி வழங்கப்படுகிறது.

 கனரா வங்கி & ஆக்ஸிஸ் வங்கி

கனரா வங்கி & ஆக்ஸிஸ் வங்கி

கனரா வங்கியில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 3.00% முதல் 5.30% வரை வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 3.00% முதல் 5.80% வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதே தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 2.50% முதல் 5.50% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 2.50% முதல் 6.60% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பேங்க் ஆஃப் பரோடா & ஐடிஎஃப்சி வங்கி

பேங்க் ஆஃப் பரோடா & ஐடிஎஃப்சி வங்கி

பேங்க் ஆஃப் பரோடாவில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 2.90% முதல் 5.30% வரை வழங்கப்படுகிறது. இங்கு மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30% வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதே தனியார் வங்கியான ஐடிஎஃப்சி வங்கியில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 3.00% முதல் 7.00% வரை வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 7.50% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பேங்க் ஆப் இந்தியா & கார்ப்பரேஷன் வங்கி

பேங்க் ஆப் இந்தியா & கார்ப்பரேஷன் வங்கி

பேங்க் ஆப் இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு, பொதுமக்களுக்கு 3.25% முதல் 5.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 5.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதே கார்ப்பரேஷன் வங்கியில் பொதுமக்களுக்கு 3.50% முதல் 5.45% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 5.95% வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 banks fixed deposit rates in India for below Rs.2 crore

Here we listed top ten banks fixed deposit rates, that’s given 7 days to 10 years as September 2020
Story first published: Friday, September 11, 2020, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X