பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. 7.30% வரை வட்டி கொடுக்கும் வங்கிகள்.. இது தான் பெஸ்ட் சாய்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றும் இந்தியாவில் பலரும் முதலீடு என்றால் முதலாவதாக தேர்ந்தெடுப்பது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களையே. ஏனெனில் இதில் முதலீட்டிற்கு எந்த பங்கமும் இல்லாத ஒரு பாதுகாப்பான, நம்பகமான முதலீடாக இருந்து வருகின்றது.

 

குறிப்பாக பங்குச்சந்தை பற்றிய அச்சம் இல்லாத, ரிஸ்க் இல்லாத ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. மேலும் குறைந்த வட்டி விகிதம் ஆனாலும், தொடர்ச்சியான ஒரு வருமானம் கொடுக்கும் ஒரு நல்ல திட்டம் என்பதாலும், இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நல்ல முதலீட்டு ஆப்ஷனாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மூத்த குடி மக்கள் மத்தியில் வட்டி விகிதமும் அதிகம் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு.

மோடி-யின் GatiShakti திட்டத்தின் 6 முக்கிய தூண்கள் இதுதான்..!

வட்டி குறைவு

வட்டி குறைவு

தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைவாகவே கடந்த சில மாதங்களாக வைத்துள்ள நிலையில், வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் என்பது குறைவாக இருந்தாலும், இனி எதிர்காலத்தில் ரெப்போ விகிதம் அதிகரிக்கும் போது, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதமும் அதிகரிக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. எனினும் தற்போதைய காலத்திலும் 7.30% வரையிலான வட்டியை கொடுக்கும் வங்கிகள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சிறு நிதி வங்கிகள்

சிறு நிதி வங்கிகள்

அந்தவகையில் நாம் இன்று பார்க்க விருப்பது சூர்யோதயா ஸ்மால் பைனான்ஸ் பேங்க், இரண்டாவது ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க், நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஆர் பி எல் பேங்க் என சில சிறு நிதி வங்கிகளின் வட்டி வீதத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸில் வட்டி எவ்வளவு?
 

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸில் வட்டி எவ்வளவு?

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை பொறுத்தவரையில் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரையிலான பிக்ஸட் டெபாசிட்களுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும். இந்த வட்டி விகிதமானது செப்டம்பர் 9, 2021ல் இருந்து அமலில் உள்ளது.

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 முதல் 14 நாட்களுக்கு - 3.25%

15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு - 3.25%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 4.25%

91 நாட்கள் முதல் 6 மாதம் வரை - 4.75%

6 மாதங்களுக்கு மேல் 9 மாதம் வரை - 5.25%

9 மாதம் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக - 5.75%

1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதம் - 6.50%

1 வருடம் 6 மாதம் முதல் 2 வருடத்திற்குள் - 6.50%

2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் - 6.25%

3 வருடத்திற்கு - 7%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

7 முதல் 14 நாட்களுக்கு - 3.25%

15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு - 3.25%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 4.25%

91 நாட்கள் முதல் 6 மாதம் வரை - 4.75%

6 மாதங்களுக்கு மேல் 9 மாதம் வரை - 5.25%

9 மாதம் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக - 5.75%

1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதம் - 6.75%

1 வருடம் 6 மாதம் முதல் 2 வருடத்திற்குள் - 6.75%

2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் - 6.50%

3 வருடத்திற்கு - 7.30%

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி வட்டி விகிதம்

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி வட்டி விகிதம்

இது வட்டி விகிதமானது மே 7 முதல் அமலில் உள்ளது. இந்த வட்டி விகிதம் 2 கோடி ரூபாய் வரையிலான வைப்பு நிதிகளுக்கு பொருந்தும்.

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%

15 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.00%

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.75%

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.50%

181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.50%

1 வருடத்திற்கு - 6.25%

1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 6.50%

2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 6.50%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%

15 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.50%

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.25%

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 5%

181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6%

1 வருடத்திற்கு - 6.75%

1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 7%

2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 7%

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் வட்டி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் வட்டி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்கினை பொறுத்தவரையில், ஏப்ரல் 19 முதல் இந்த வட்டி விகிதம் அமலில் உள்ளது. இது 2 கோடி ரூபாய் வரையிலான வைப்பு தொகைக்கான வட்டி விகிதமாகும்.

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாள் முதல் 14 நாட்கள் வரை - 3%

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை - 3%

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 3.5%

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - 4%

181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5%

730 நாட்களுக்கு மேல் 1095 நாட்களுக்குள் - 6.75%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாள் முதல் 14 நாட்கள் வரை - 3.5%

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை - 3.5%

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.5%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 4%

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - 4.5%

181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.5%

730 நாட்களுக்கு மேல் 1095 நாட்களுக்குள் - 7.25%

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வட்டி

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வட்டி

இது வட்டி விகிதமானது கடைசியாக ஆகஸ்ட் 16ல் இருந்து அமலில் உள்ளது. இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய் வரையிலான தொகைகு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாள் முதல் 29 நாட்கள் வரை - 2.90%

30 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை - 3.50%

90 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 4.25%

180 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை 4.75%

1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6%

2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரை - 6.50%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாள் முதல் 29 நாட்கள் வரை - 3.40%

30 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை - 4%

90 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 4.75%

180 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை 5.25%

1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.50%

2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரை - 7.00%

ஆர்பிஎல் வங்கியில் எவ்வளவு வட்டி?

ஆர்பிஎல் வங்கியில் எவ்வளவு வட்டி?

ஆர்பிஎல் வங்கியில் செப்டம்பர் 2021 முதல் இந்த வட்டி விகிதமானது அமலில் உள்ளது.

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 முதல் 14 நாட்களுக்கு - 3.25%

15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு - 3.75%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 4.00%

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - 4.50%

181 நாட்கள் முதல் 240 நாட்கள் வரை - 5.00%

241 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை - 5.25%

12 மாதம் முதல் 24 மாதங்களுக்குள் - 6.00%

24 மாதம் முதல் 36 மாதங்களுக்குள் - 6.00%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

7 முதல் 14 நாட்களுக்கு - 3.75%

15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு - 4.25%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 4.50%

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - 5.00%

181 நாட்கள் முதல் 240 நாட்கள் வரை - 5.50%

241 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை - 5.75%

12 மாதம் முதல் 24 மாதங்களுக்குள் - 6.50%

24 மாதம் முதல் 36 மாதங்களுக்குள் - 6.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 5 banks good returns up to 7.30% on FDs pf 2 – 3 year tenure

suryoday small finance bank, suryoday small finance bank and other small finace banks offers up to 7.30% on FDs pf 2 – 3 year tenure
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X