அதிக வருமானம் கொடுக்கும் டாப் 10 வங்கிகள்.. உங்களது வங்கியும் லிஸ்டில் இருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பொதுவாக வங்கி டெபாசிட்டுகள் என்பது பிரதான முதலீடாக கருதப்படுகிறது.

 

எனினும் தற்போதைய காலத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கே வட்டி கொடுக்கின்றன.
அந்த வகையில் அதிக வருமானம் கொடுத்த டாப் 10 வங்கிகளை பற்றித் தான் இன்று நாம் பார்க்க விருக்கிறோம்.

 சேமிப்பு எவ்வளவு அவசியம்?

சேமிப்பு எவ்வளவு அவசியம்?

கொரோனா காலகட்டத்திலேயே சேமிப்பு என்பது எவ்வளவு அத்தியாவசியமானது என்று பலரும் அறிந்திருப்போம். ஏனெனில் பலரும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, ஏதோ ஒன்றில் முதலீட்டினை செய்து விட்டு, பின்னர் முதலீட்டினையே இழக்கின்றனர். ஆக நாம் முதலீடு செய்யும் போதும் மிக கவனமுடன் இருக்க வேண்டும். சிலர் கஷ்டப்பட்டு பல வருடங்களாக சம்பாதித்து சேமித்த தொகையை, சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு இழக்கின்றனர்.

 சேமிப்பு கணக்கில் முதலீடு

சேமிப்பு கணக்கில் முதலீடு

ஆனால் முதலீடும் பாதுகாப்பாக, அதே சமயம் கணிசமான வட்டி வருவாயுடன், நமக்கு தேவைப்படும்போது அவசரத் தேவையின் போது எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு சேமிப்பு எனில், அது வங்கி சேமிப்பு கணக்கில் சேமிக்கப்படும் முதலீடுகள் தான். இந்த சேமிப்பு கணக்கில் சேமிப்பு என்பதே தேவைப்படும்போது பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்பது தான். இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களது வங்கி கணக்கில் பணம் திரும்ப எடுக்க முடியாவிடில் 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் இன்சூரன்ஸ் க்ளைம் செய்து கொள்ள முடியும்.

 சேமிப்பு கணக்கின் பயன்கள் என்ன?
 

சேமிப்பு கணக்கின் பயன்கள் என்ன?

சில சேமிப்பு கணக்குகளுக்கு கணிசமான வட்டியினை வங்கிகள் கொடுக்கின்றன. அதோடு வாடிக்கையாளர்கள் உங்களுக்கு தேவையான பில்கள், இஎம்ஐகள் என பல சேவைகளையும் இந்த சேமிப்பு கணக்குகள் மூலம் பெற முடியும். இதனை டிமேட் கணக்குடனும் இணைத்துக் கொள்ளலாம். இதில் டிவிடெண்டுகள் மற்றும் வட்டி விகிதங்களை நேரடியாக வங்கி சேமிப்பு கணக்கு மூலம் பெறலாம். இப்படி பல சேவைகளையும் சேமிப்பு கணக்குகள், உங்களது சேமிப்புக்கு வட்டியுடன் சேர்த்துக் கொடுக்கின்றன.

Array

Array

ஒவ்வொரு வங்கியும் தங்களது சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையாக, கணிசமான தொகையை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் நாம் இன்று முதலாவதாக பார்க்கவிருப்பது பந்தன் வங்கி, இவ்வங்கியின் குறைந்தபட்சம் இருப்பு தொகை 5,000 ரூபாயாகும். இதில் வட்டி விகிதம் 3 - 7.15% ஆகும். இதே ஆர்பிஎல் வங்கியில், 500 முதல் 2500 வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 4.75 - 6.5% வரை கொடுக்கப்படுகிறது.

Array

Array

இதே இந்தஸிந்த் வங்கியில் 1,500 முதல் 10,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 4 - 6% வரை கொடுக்கப்படுகிறது.

இதுவே ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியில் 10,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 3.5 - 6% வரை கொடுக்கப்படுகிறது.

 

Array

Array

யெஸ் வங்கியில் 2,500 முதல் 10,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 4 - 5.5% வரை கொடுக்கப்படுகிறது.

டிசிபி வங்கியில் 2,500 முதல் 5,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 3.25 - 5.5% வரை கொடுக்கப்படுகிறது.

 

Array

Array

கர்நாடகா வங்கியில் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 2.75 - 4.5% வரை கொடுக்கப்படுகிறது.

சவுத் இந்தியன் வங்கியில் 1,000 முதல் 2,500 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 2.35 - 4.5% வரை கொடுக்கப்படுகிறது.

 

Array

Array

ஆக்ஸிஸ் வங்கியில் 2,500 முதல் 10,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 3 - 4% வரை கொடுக்கப்படுகிறது.

இதே கோடக் மகேந்திரா வங்கியில் 2,000 முதல் 10,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 3.5 - 4% வரை கொடுக்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top ten banks providing higher returns on SA

Bank updates.. Top ten banks providing higher returns on Savings account
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X