வாகன அழிப்பு திட்டம்.. புதிய காரா? குத்தகை காரா? எது பெஸ்ட்.. நிபுணர்களின் விளக்கம் இதோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த பிப்ரவரி மாதத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் வாகன அழிப்பு திட்டத்தினை பட்ஜெட் 2021ல் அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 

இது பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார மந்தம் அதன் பிறகு தற்போது கொரோனா என பலவற்றால், மிக மோசமான பின்னடைவை சந்தித்தது.

இப்படியொரு இக்கட்டான நிலையில் சரிந்து கிடக்கும் வாகன துறையை மீட்டெடுக்கவும், வேலை வாய்ப்பினை பெருக்கவும் நிதிமையமைச்சர் பட்ஜெட்டில் வாகன அழிப்பு திட்டத்தினை பற்றி அறிவித்தார்.

வாகன விற்பனையை ஊக்குவிக்க பயன்படும்

வாகன விற்பனையை ஊக்குவிக்க பயன்படும்

அதோடு பல ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையினரின் முக்கிய கோரிக்கையாகவே, இந்த வாகன அழிப்பு திட்டம் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம். இது புதிய வாகன விற்பனையை ஊக்குவிக்க பயன்படும் என்றும் கூறினர்.

அரசின் வாகன அழிப்பு திட்டம்

அரசின் வாகன அழிப்பு திட்டம்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த தன்னார்வ வாகன அழிப்பு திட்டத்தின் படி, தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் வாகனங்களை அழிக்கும் திட்டம் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, இது வாகனத்துறைக்கு பெரிய ஊக்கத்தினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கும்
 

தேவை அதிகரிக்கும்

ஏனெனில் இதனால் புதிய வாகனங்களின் தேவை அதிகரிக்கும். புதிய வாகனங்கள் மேலான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாகனங்களுக்கான தேவையும் கூடும். அதோடு சுற்று சூழல் பாதிப்பும் இதனால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது இந்த பசுமை வரி விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நகரங்களில் அதிக வரி

சில நகரங்களில் அதிக வரி

அதோடு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆக இதோடு இந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியும், துவண்டு போன வாகனத் துறையை மீட்டெடுக்க உதவும் என்றும் கூறப்பட்டது.ஆக இதுவும் புதிய வாகனங்களின் விற்பனையை ஊக்கப்படுத்தும். பழைய வாகனங்கள் மீதான ஆர்வத்தினை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கார் விலையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குத்தகை கார் பெஸ்ட்

குத்தகை கார் பெஸ்ட்

இப்படி இரு நிலையில் ஒரு புதிய கார் வாங்குவதை விட, அதனை குத்தகைக்கு எடுப்பதே சிறந்தது என்கிறது ஒர் மணிக்கன்ட்ரோல் அறிக்கை. எப்படி வாருங்கள் பார்க்கலாம். சில கார் உற்பத்தியாளர்கள் நகரங்கள் மற்றும் காரின் மாடலை பொறுத்து 12 - 60 மாதங்கள் வரை குத்தகைக்கு அளிக்கின்றன. குறிப்பாக மகேந்திரா அன்ட் மகேந்திரா, மாருதி சுசூகி, ஹூண்டாய், பிஎம்டபள்யூ, வோல்க்ஸ்வேகன், ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு விடுகின்றன.

எவ்வளவு கட்டணம்

எவ்வளவு கட்டணம்

மாருதி சுசூகி நிறுவனம் வேகன் ஆர், ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, இக்னிஷ், பலினோ, சியாஷ், எக்ஸ் எல்6, எஸ்0கிராஸ் உள்ளிட்ட ரக கார்களை குத்தகைக்கு விடுகின்றது. இந்த குத்தகையானது 10,000 - 25000 கிலோமீட்டர் வரை வருடத்திற்கு உள்ளது. 12 - 48 மாத அவகாசத்திற்கும் வழங்கப்படுகிறது. குறிப்பாக வேகன் ஆர் மாத வாடகையாக 12,513 ரூபாயும், இதே இக்னிஷ் மாத வாடகை 13,324 ரூபாயும் (வரி உட்பட - கொச்சி) கட்டணமாக வசூலிக்கபடுகிறது. இந்த குத்தகை காலம் 4 வருடமாகும்.

புதிய வாகனத்திற்கான செலவு

புதிய வாகனத்திற்கான செலவு

வாகன அழிப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு, குத்தகை திட்டம், வாகனம் வாங்குதல் இரண்டடையும் ஒப்பிட்டு ஒரு சிறிய கணக்கீட்டினை பற்றி பார்க்கலாம். இது 4 வருட காலம் அவகாசம், வட்டி விகிதம் வருடத்திற்கு 9.5%, என வைத்துக் கொள்வோம். காரின் விலை ஆன் தி ரோடு 16.35 லட்சம் ரூபாயாகும். மாத இஎம்ஐ 41,071 ரூபாய். வட்டி விகிதம் 3.36 லட்சம் ரூபாய். வருட இன்சூரன்ஸ் 72,500 ரூபாய். ஆக மொத்தத்தில் இன்சூரன்ஸ் இல்லாமல் உங்கள் காரின் மொத்த விலை 19.71 லட்சம் ரூபாய். இன்சூரன்ஸ் சேர்த்து 20.46 லட்சம் ரூபாய். மெயின்டென்ஸ் காஸ்ட் 1 லட்சம் ரூபாய். ஆக இன்சூரன்ஸ் மற்றும் மெயின்டென்ஸ் சேர்த்து 21.46 லட்சம் ரூபாய் நீங்கள் செலவிட வேண்டும்.

வாகனம் வாங்குவதை விட செலவு குறையும்

வாகனம் வாங்குவதை விட செலவு குறையும்

இதே குத்தகைக்கு எடுக்கிறீர்கள் என வைத்துக் கொண்டால் மாதம் 29,000 ரூபாய். இன்சூரன்ஸ் 72,500 ரூபாய். இன்சூரன்ஸூடன் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 16.82 லட்சம் ரூபாய். இதில் மெயிடென்ஸ் காஸ்ட் கிடையாது. ஆக நீங்கள் குத்தகைக்கு எடுக்கும்போது 4.64 லட்சம் ரூபாய் மிச்சம் என்கிறது மணிகன்ட்ரோல் தரவு. இந்த குத்தகை திட்டத்தில் நீங்கள் குத்தகை காலம் முடிந்ததும் காரை திரும்ப கொடுத்து விடவேண்டும்.

புதிய கார்களை பயன்படுத்தலாம்

புதிய கார்களை பயன்படுத்தலாம்

இந்த குத்தகை திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு புதிய காரை உண்மையில் சொந்தமாக இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது. மாருதி சுசூகி இந்தியாவின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை நிர்வாக இயக்குனர் ஷாஷாங்க் ஸ்ரீ வாஸ்தவா இது குறித்து கூறுகையில், பராமரிப்பு, 24 மணி நேர உதவி, காப்பீடு என அனைத்தும் உள்ளடக்கிய கட்டணத்தினை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

அண்டை நாடுகளில் பிரபலம்

அண்டை நாடுகளில் பிரபலம்

இதே கார் குத்தகை நிறுவனமான ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், முழு நேர இயக்குனருமான சுவாஜித் கர்மக்கர், மதிப்பிழந்த பொருட்களை பொருட்களை சொந்தமாக்க விரும்பாமல், ஒவ்வொரு 3 - 5 வருடங்களுக்கும் காரை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமார் 45 சதவீதத்தை விட கார் குத்தகை என்பது குறைவாக உள்ளது. இந்தியாவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

இனி அதிகரிக்கும்

இனி அதிகரிக்கும்

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் கார் குத்தகை சந்தை 15 -20% அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதே பேங்க் பஜார்.காமின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகையில், வாகன் ஸ்கிராப்பேஜ் கொள்கை நீண்டகாலத்திற்கு சொந்த வாகனங்களை வைத்திருப்பதை ஊக்கப்படுத்தவில்லை என்பதால், ஒரு பழைய காரை வாங்கவும் ஊக்கப்படுத்துவதில்லை. இதனால் குத்தகை வாகன திட்டத்திற்கான தேவை அதிகரிக்கும். அதோடு சொந்தமாக வாங்குவதை விட இதில் செலவு குறைவு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vehicle leasing is a cheaper option than buying a car on loan

Vehicle Scrappage policy.. Vehicle leasing is a cheaper option than buying a car on loan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X