வாகன அழிப்பு திட்டத்தினால் கார் இன்சூரன்ஸ் பிரீமியமும் குறையலாம்.. எப்படி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையினரின் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த வாகன அழிப்பு திட்டமானது கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

 

இது வாகனத் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகன துறையானது தொடர்ந்து பெரும் சரிவினைக் கண்டு வந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பானது வாகன துறையினை ஊக்குவிக்கும். குறிப்பாக விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வாகனங்கள் அதிக அபாயகரமானவை மட்டுமல்லாமல், அதிக ஆபத்தையும் கொண்டுள்ளன. அவை அதிக மாசுபாட்டிற்கும் வழிவகுக்கும். ஆக இதெல்லாவற்றையும் தடுக்கும் வகையில் தான் வாகன அழிப்பு திட்டமானது அறிவிக்கப்பட்டது.

ஒரு புறம் சுற்றுசூழல் மாசினை குறைக்கும் என்றாலும், மறுபுறம் வாகன விற்பனையை அதிகரிக்கும் என்பதும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

வாகன அழிப்பு திட்டம்

வாகன அழிப்பு திட்டம்

இது தற்போது சில மாநிலங்களில் வேறுபட்ட வடிவங்களில் இருந்தாலும், தற்போது தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வாகன துறையின் வருவாய் 4.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கலாம்

வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கலாம்

இதற்கிடையில் இது குறித்து ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்கேடி கிருஷ்ணன், அரசு வாகன அழிப்பு திட்டத்தினை பரிசீலித்து வருகிறது. இதற்காக வரைவும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தங்களது பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்யும் கார் உரிமையாளர்களுக்கு, 5% சலுகை அளிக்க விற்பனையாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு சாலை வரி மற்றும் பதிவு செலவுகளிலும் சலுகைகளை பெறுவார்கள் என கூறியுள்ளார்.

இன்சூரன்சிலும் தாக்கம்
 

இன்சூரன்சிலும் தாக்கம்

வாகன அழிப்பு திட்டத்தினை அமல்படுத்துவதால், இன்சூரன்ஸ் துறையிலும் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீட்டாளர்கள் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய பாதுகாப்பான வாகனங்களையே விரும்புவர். இது குறிப்பாக மூன்றாம் தரப்பு க்ளைகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும். அரசின் இந்த திட்டத்தினால் மூன்றாம் தரப்பு பிரீமியமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் தரப்பு பிரீமியம் குறையலாம்

மூன்றாம் தரப்பு பிரீமியம் குறையலாம்

தற்போது மூன்றாம் தரப்பு உரிமைகோரல்கள் 140%க்கும் அதிகமாக உள்ளன. இதில் முக்கிய பங்கு பழைய வாகனங்களுக்கே. ஆக பழைய வாகனங்களை அகற்றும்போது இந்த உரிமைகோரல்கள் குறையும். இதனால் பிரீமியங்களின் அழுத்தம் குறையும். ஆக பிற்காலத்தில் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது குறையலாம் என எதிர்பார்க்கலாம்.

விற்பனை அதிகரிக்கும்

விற்பனை அதிகரிக்கும்

அதோடு வங்கிகள், வாகன நிறுவனங்கள் என பலவும் வாகனங்களை விற்க பல சலுகைகளை வழங்குவார்கள். இது புதிய வாகனங்களில் முதலீட்டினை அதிகரிக்க வழிவகுக்கும். இது குறைந்த மற்றும் நடுத்தர பிரிவுகளில் அதிகரிக்கும். இதனால் காப்பீடுகளும் அதிகரிக்கும். மேலும் சொந்த சேதங்களுக்கும் இன்சூரன்ஸ் க்ளைம் அதிகரிக்கும். ஆனால் புதிய வாகனங்களில் செலவுகள் குறையும் என்பதால், இது குறைந்த பிரீமியங்களுக்கு வழிவகுக்கும்.

விபத்து மாசு குறையும்

விபத்து மாசு குறையும்

பொதுவாக பழைய வாகனங்கள் குறைந்து புதிய வாகனங்கள் அதிகரிக்கும்போது, உங்களது செலவுகள் குறையும். ஏனெனில் விபத்துகளால் உங்கள் வாகனங்களின் செலவுகளை சரி செய்ய இன்சூரன்ஸ் பாலிசிகள் உதவுகிறது. ஆனால் புதிய வாகனங்களால் விபத்துகள், மாசுக்கள் குறையும். இதனால் இன்சூரன்ஸ் பிரீமியங்களும் குறைய வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vehicle scrap policy may lower your car insurance premium, check details

Vehicle scrapping policy.. Vehicle scrap policy may lower your car insurance premium, check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X